22/07/2026
வணக்கம்,
கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தால் வருடா வருடம் நடைபெறும் மாபெரும் ஓவியப்போட்டிஇவ்வருடம் 29.07.2026 புதன்கிழமை கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தில் நடைபெற இருக்கின்றது.
பிரிவு நேரம்
I .தரம் 3,4,5 காலை 08.00- 09.15 வரை
II .தரம் 6,7,8 காலை 09.30 - 11.00 வரை
III .தரம் 9,10,11 காலை 11.30- 1.30 வரை
IIII.தரம் 12,13 மாலை 02.00-5.00 வரை
விதிமுறைகள் :-
*போட்டியன்று தமக்கு வழங்கப்பட்ட நேரத்துக்கு பதினைந்து நிமிடங்கள் முன்னதாக வரவேண்டும்.
*போட்டியன்று மாணவர்கள் காட்டாயம் தமது பாடசாலைக்குரிய சீருடையுடன் வருகை தரவேண்டும்.
*போட்டி நடைபெறும் தினத்தில் அன்றே மாணவர்களுக்குத் தலைப்பு வழங்கப்படும்
*சித்திரத்திற்குத் தேவையான சகல பொருட்களும் நூலகத்தினால் வழங்கப்படும்
*பாடசாலையில் ஒரு பிரிவில் இருந்து ஐந்து மாணவர்கள் பங்கு பெறலாம்.
*பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
*அயல் பாடசாலை தவிர்ந்த மாணவர்கள் பங்குகொள்ள விரும்பினால் , அதிபர்/ ஆசிரியரின் கையொப்பத்துடன் பெயர், வயது, வகுப்பு , தொலைபேசி எண் என்பனவற்றை கீழுள்ள தொலைபேசி எண்ணிற்கு WhatsApp மூலம் உறுதி செய்க.
*பிரிவு 4 இல் திறமையுள்ளவர்கள் வயது எல்லை (20-26) தனிப்பட்ட முறையில் அடையாளட்டை சகிதம் பங்குகொள்ள முடியும்
*மாணவர்களின் ஓவியங்களை யாழ்ப்பாண கல்வியற் கல்லூரி சித்திரப்பாட விரிவுரையாளர்களால் தெரிவுசெய்யப்படும்.
*25.08.2026 அன்று நடைபெறவிருக்கும் சிறுபொறியின் மூன்றாவது ஆண்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்படும்.
*மாணவர்களின் ஓவியம் 25.08.2026 தொடக்கம் 28.08.2026ம் திகதி மட்டும் கண்காட்சியில் வைக்கப்படும். 26,27,28 ஆகிய மூன்று திகதிகளில் அனைவரும் வந்து பார்வையிடலாம்.
K.A.S. Sathiamanai Library
Address : No-1, K.A.Subramaniam Lane,
Tholpuram West , Chulipuram- 40230. Sri Lanka .
Telephone +94 77 898 2024, +94 75 767 0149, + 94 77 078 0657
website: sathiamanai.blogspot.com
Reg No : VW/FIN/BR/1/38/2022@