Jaffna Hindu International

Jaffna Hindu International Jaffna Hindu International.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் பழைய மாணவரும் ( 1974 batch) அறிந்து கல்லூரி கனடா சங்கத்தின் முன்னாள் பொருளாளரும் நீண்ட கால...
05/09/2024

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் பழைய மாணவரும் ( 1974 batch) அறிந்து கல்லூரி கனடா சங்கத்தின் முன்னாள் பொருளாளரும் நீண்ட கால சங்க உறுப்பினரும் அவர் அன்புக்குரிய நண்பர் மதியழகன் அண்ணாவின் தந்தையார் இறைவன் அடி சேர்ந்தார்.

அமரர் தம்பு இராஜகோபால் யாழ் கந்தர்மடம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்து,
சாவகச்சேரி கொழும்பு கொட்டகேனா போன்ற இடங்களில் வாழ்ந்து,
இறுதியாக அன்பு மகன் மதியழகனோடு கனடிய தேசத்தில் வாழ்த்து வரும் காலத்தில்
தனது 97 வது அகவையில் இறைவனடி சேர்ந்தார்

ஓம் சாந்தி சாந்தி! சாந்தி!

Funeral Arrangements &
Service Details
Visitation at Chapel Ridge Funeral Home,
Markham
Saturday, September 7th, 2024 | 5:00
p.m - 9:00 p.m

Second Visitation & Services
Sunday, September 8th, 2024 | 7.00 a.m
- 9:15. a.m
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
MARKHAM, ON L3R 5G1

Cremation will take place on the 8th of September, 2024 at 9.45 am
located at:
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue,
Gormley, ON

தமிழர் மரபுவழி தென்புலத்தார் வழிபாட்டில் ஆடி மறைமதி (அமாவாசை) இம்முறை ஆடி 19 (ஆக 4)தந்தையை இழந்தவர்கள் கண்டிப்பாகப் பிடி...
02/08/2024

தமிழர் மரபுவழி தென்புலத்தார் வழிபாட்டில்
ஆடி மறைமதி (அமாவாசை) இம்முறை ஆடி 19 (ஆக 4)

தந்தையை இழந்தவர்கள் கண்டிப்பாகப் பிடிக்கவேண்டிய விரதம்.

மயங்காத் தமிழர் மரபிலே தொன்றுதொட்டு மூத்தோர் வழிபாடுகள் மற்றும் நீத்தார் வழிபாடுகள் இரண்டறக்கலந்தவை ஆகும். பொதுவாக ஒவ்வொரு மறைமதி (அமாவாசை) தினங்களும் விரதத்திற்குரிய நாட்களாயினும் தை, ஆடி,மற்றும் புரட்டாதி மறைமதி (அமாவாசை) தினங்கள் தென்புலத்தார் பிதிர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தவை ஆகும்.

“நமசிவாயம்”அன்புடையீர்,"சைவத்தின் கருவூலங்களான பன்னிரு திருமுறை - பதினான்கு சித்தாந்த சாத்திரங்களை இளம் தலைமுறையினரிடம் ...
06/07/2024

“நமசிவாயம்”

அன்புடையீர்,

"சைவத்தின் கருவூலங்களான பன்னிரு திருமுறை - பதினான்கு சித்தாந்த சாத்திரங்களை இளம் தலைமுறையினரிடம் பரவலாக்கல்" என்ற எங்களின் புதிய முயற்சியை தொடங்கவுள்ளோம் என்பதனை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த முயற்சி இனிதே நடைபெற நாளை 07/07/2024 ஞாயிற்றுக்கிழமை சிட்னி முருகன் கோவிலில் மதியம் 12:00 மணிக்கு பூசை நிறைவுற்றதும் விநாயகப் பெருமானுக்கு ஓர் அர்ச்சனை வழிபாடு செய்ய உள்ளோம்.

இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு இப்பெரு முயற்சிக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அனைத்து யாழ் இந்து மைந்தர்களையும் சைவ சமுதாயத்தினரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

“போற்றி ஓம் நமசிவாய”

“மென்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”

இவ்வணக்கம்,
நிர்வாகக் குழுவினர்,
யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம், சிட்னி கிளை

29/06/2024
 #தென்னாடு ஆனி வெளியீடுதமிழர் தத்துவவியல் என்பது இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது என்றால் ஆச்சரிய...
20/06/2024

#தென்னாடு ஆனி வெளியீடு

தமிழர் தத்துவவியல் என்பது இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது என்றால் ஆச்சரியப்படாமல் மாறாக பெருமை கொள்ளுங்கள். தொல்காப்பியர், திருவள்ளுவ நாயனார் முதல் சந்தானகுரவர் மற்றும் அருணகிரிநாதர் காலம் வரை ஒவ்வொரு தமிழ் ஞானிகளும் பல தத்துவங்களை சொல்லிவந்துள்ளனர். ஆனால் அவை ஒன்றுடன் ஒன்று முரண்படாமல், பழைய கொள்கை, புதிய திருத்திய கொள்கை என்று இல்லாமல் ஒரே தத்துவத்தினை ஆழமாகச் சொல்லி நிற்கின்றன.

மேலும் வாசிக்க

https://www.thennadu.org/ithazh/Thennadu_Aani_Ithazh_2024.pdf

இன்று புதிதாக தெரிவுசெய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவரின் உரைஓம் நமசிவாயஎல்லாம் வல்ல இறை சிவனை...
01/04/2024

இன்று புதிதாக தெரிவுசெய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவரின் உரை

ஓம் நமசிவாய

எல்லாம் வல்ல இறை சிவனை நினைந்து, கல்லூரி வளாகத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஞானலிங்கேச்சரப் பெருமானையும், சிவஞான வைரவப் பெருமானையும் மனதிலிருத்தி வணங்கி எனது உரையினை தொடர்கின்றேன்.

இங்கு எமது இந்து அன்னையின் பெயரால் குழுமியிருக்கும் அதிபர் அவர்கட்கும், ஏனைய இந்துவின் மைந்தர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

சைவத் தமிழ் தேசியத்தின் எழுச்சியாக, அடையாளமாக ஏறத்தாழ 135 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட எமது இந்துக் கல்லூரி விவேகானந்தர் முதலான மகான்கள் கால்பதித்த பெருமை கொண்டது, அதே போல மகான்களையும், தியாகிகளையும், பெரும் வீரர்களையும், அறிஞர்களையும் ஆளுமைகளையும் பிரசவித்து இந்த மண்ணிற்கு சேவையாற்ற அனுப்பிய பெருமையையும் கொண்டது. இக்கல்லூரியில் இவ்வன்னையின் புதல்வர்களால் அன்னைக்கு நன்றிக் கடன் செலுத்த 120 வருடத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டது எமது பழைய மாணவர் சங்கம். உலக ஓட்டத்தின் ஒழுங்கில் நாடு முழுவதும், சர்வதேசங்களிலும் எமது பழையமாணவர்கள் வியாபித்தமையினால் தத்தமது இடங்களில் பல பழைய மாணவர் சங்கங்களை அமைத்தனர். இதன் மூலம் எமது சங்கம் தாய்ச்சங்கமாகவும் ஏனையவை கிளைச் சங்கங்களாகவும் மிளிர்ந்தன.

கால ஓட்டங்களினாலும், புற அக சூழல்களினாலும் கல்லூரியும் சங்கமும் பல மாற்றங்களை உள்வாங்கி இன்று பயணிக்கின்றது. அந்தவகையில் எமது கல்லூரி அன்னை தமிழ் தேசத்தின் முதன்மைக் கல்லூரியாக தமிழர் தலை நிமிர் கழகமாக மிடுக்கோடு நிமிர்ந்து நிற்கின்றது. எனினும் காலத்திற்கு காலம் சைவத்தையும், தமிழையும் கலி சூழ்வதும் அதனால் எமது கல்லூரியும் பாதிப்படைவதும் அதனை இறை துணையுடனும் மனவுறுதியுடனும் எம் மண்ணின் மைந்தர்கள் எதிர்கொண்டு கடந்து பயணிப்பதும் கண்கூடு.

களத்திலே கல்லூரியுடனே இருப்பதால் எமது தாய்ச்சங்கத்திற்கு கல்லூரி அன்னைக்கு செயற்பாட்டு ரீதியாகவும், நிதி ரீதியாகவும் என அனைத்து வழிகளிலும் செயற்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. இதனை அனைவரும் அறிவீர்கள். எமது பழையமாணவர் சங்கம் வரலாற்றில் பல சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து அவற்றினை நேரடி நடவடிக்கைகள் மூலமும் தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொண்டும் வெற்றிகரமாக கையாண்டு தடம்மாறாமல் பயணித்து கல்லூரி அன்னைக்கு பணிபுரிந்துள்ளது. உடனடியாக அதன் செயல்கள் விமர்சிக்கப்பட்டாலும் காலம் கடந்து அதன் கனதி உணரப்பட்டுள்ளது.

அதே போல மாறிவரும் உலக ஒழுங்கு, தொழிநுட்ப மாற்றம் என்பவற்றிற்கேற்ப எனது தலைமையின் கீழும் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து தேவைப்பாடுகளுக்கேற்ப நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளில் கல்லூரி அன்னையின் வளர்ச்சிக்கும், சைவத் தமிழ் வளர்ச்சிக்கும், சமூக நன்மைக்கும் எம்மாலான செயற்பாடுகளை இறை சிவனதும், எமது செயற்குழுவினரதும், பழைய மாணவர்களினதும் துணையுடன் முன்னெடுப்பேன் என்பதை இவ்விடத்தில் கூறி, இறை சிவனுக்கும், அனைவருக்கும் நன்றி கூறி அமர்கின்றேன்.

எவ்விடமேகினும் எத்துயர் நேரினும் எம்மன்னை நின்னலம் மறவோம்
தமிழரெம் வாழ்வினிற் தாயென மிளிரும் தனிப்பெருங் கலையகம் வாழ்க!

வாழ்க! வாழ்க! வாழ்க!
வணக்கம்

தலைவர்
பழைய மாணவர் சங்கம்
யாழ்ப்பாணம்
31.03.2024

12/03/2024

சிட்னி பழைய மாணவர் சங்க திருமுறைப் பயிற்சிப் பட்டறை முதல் நாள் வரவேற்புரை - திரு நடராசா மூக்கையா

31/08/2023

தமிழ்ப் புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் முதலானவற்றின் உள்ளடக்கத்தைத் தேடுக

Address

College Road
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Hindu International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category