நட்பு

நட்பு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from நட்பு, School, COLOMBO, Jaffna.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்...
05/09/2020

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்...

08/04/2020
05/04/2020

கொரோனாவால் பாதித்த ஏழைகளுக்கு டைட்டானிக் நாயகன் 227 கோடி நிதி உதவி!

கொரோனாவால் உலகளவில் பாதித்த ஏழைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் நிதி சேகரித்து சுமார் 227 கோடி ரூபா வழங்கியுள்ளார் டைட்டானிக் திரைப்படத்தின் கதாநாயகன் லியானர்டோ டிகாப்ரியோ.

உலகளாவிய பேரவலத்தை ஏற்படுத்திய கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான உலக நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியே வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்த வந்த பல கோடி மக்கள் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பினை சந்தித்து பட்டிச்சை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இந்நிலையில் உலகளாகவிய பிரபலங்கள் தங்களது மனிதாபிமான செயற்பாடாகா தம்மால் இயன்ற தொகைகளை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவுவதற்காக வழைங்கிவருகின்றனர்.

அந்தவகையில் டைட்டானிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற லியானர்டோ டிகாப்ரியோ தனது அறக்கட்டளை மூலமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைத்த 227 கோடி ரூபாவினை, ஏழைகளுக்கு உணவு வழங்கவும், ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் என வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

05/04/2020

ஒரு நண்பரின் பதிவு

என் அன்புக்குரிய நண்பர்களே.......
10 நிமிடங்கள் ஒதுக்கி இதனை வாசியுங்கள்
உண்மை தன்மையினை அதிகம் share. செய்யுங்கள்

இன்று நாட்டின் காணப்படும் அசாதாரண சூழ்நிலையில் ஒவ்வொரு பொதுமக்களும் தமது உயிரை பாதுகாக்க யோசிப்பாரகளே தவிர எவரும் தமது உயிரை துச்சமென நினைத்து வருத்தத்தை தேடி செல்ல மாட்டார்கள் என்பது அப்பட்டமான உண்மை
தற்சமயம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் விடயமாக

•சமுர்த்தி பயனளிகளின் கொரோனா விசேட
கொடுப்பனவு 10000/= எனவும் அது சமுர்த்தி
உத்தியோகத்தர்களால் அனைவருக்கும்
வழங்கப்படாமல் 5000/= மோசடி செய்யப்படுகின்றது

•சமுர்த்தி பயனாளிகளுக்கு உலர் உணவு
விநியோகத்தில் உத்தியோகத்தர்கள் சரியான
பெறுமதி பொருட்கள் கொடுக்காமல் மோசடி
செய்கின்றார்கள்

இவை தான் தம்மை உயர்வானவராக காட்டிக்கொள்ள எந்தவொரு ஆதாரமும் இன்றி போலி செய்திகளுடன் வலம்வரும் இன்றைய சமூக வலைத்தள போராளிகளின் பேசு பொருளாக உள்ளது நீங்கள் அனைவரும் அறிந்ததே

ஆம் இவர்களின் தேவை தான் என்ன....?
•அரசியலா
•தாங்கள் மக்கள் மத்தியில் நல்லவர்களாக உலாவர
வேண்டுமோ
•தனிப்பட்ட பகையால் பழிவாங்கலா
•படிப்பறிவு இன்மையா
•புரிந்துணர்வு இன்மையா

என எண்ணவே தோன்றுகின்றது....!!!

தம்மை உயர்வானவராக காட்டிக்கொள்ள எந்தவொரு ஆதாரமும் இன்றி போலி செய்திகளுடன் வலம்வரும் இன்றைய சமூக வலைத்தள போராளிகளின் பேசு பொருளானவற்றுக்கு
6 வருட தொழில் அனுபவம் ,சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் கொரோனா விசேட கொடுப்பனவு சுற்றுநிருபங்களை வாசித்தறிந்தவன் என்ற வகையில் விளக்கம் இல்லலாமல் பதிவிடும் அனைவருக்கும் தெளிவூட்டவேண்டிய கடைப்பாடு உள்ளது

#முதலில்

சமுர்த்தி பயனளிகளின் கொரோனா விசேட
கொடுப்பனவு 10000/= எனவும் அது சமுர்த்தி
உத்தியோகத்தர்களால் அனைவருக்கும்
வழங்கப்படாமல் 5000/= மோசடி செய்யப்படுகின்றது

ஆம் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின் படி



•சமுர்த்தி நிவாரண பயனாளிகளுக்கு உச்ச பட்சம் 10000/= ரூபா அவர்களது நுகர்வு மற்றும் அத்தியாவசிய தேவையின் பொருட்டு கடனாக வழங்கப்பட வேண்டும் ஆனால் முதற்கட்டமாக ஒரு தடவையில் உயர்ந்த பட்சம் 5000/= ரூபா வழங்க முடியும் மிகுதி 5000/= ரூபா அடுத்தகட்டம் வழங்கப்படும் ஆனால் இந்த கடன் மூலம் முன்னர் பெற்று கொண்ட வேறு எந்த கடன்களுக்கும் நிலுவைகளை அறவிட முடியாது

•சஹன பியவர கடன் வழங்கும் தினத்தில் பயனாளியின் கட்டாய சேமிப்பு கணக்கின் மீதியினை தாண்டி செல்லாது கடன் வழங்க முடியும்



•கட்டாய சேமிப்பு கணக்கு இல்லாதவர்கள்,கட்டாய சேமிப்பு கணக்கில் போதுமான மீதி இல்லாதவர்கள் அனைவரும் இக்கடன் திட்டத்தினை பெற்று கொள்ள முடியும்

•சஹன பியவர சலுகை கடன் மூலம் உள்வாங்கப்படாத சமாதாய அடிப்படை அமைப்பில் உள்ள அங்கத்தவர்கள் இக் கடனை பெற தகுதயானவர்கள்

சஹன பியவர சலுகை கடன்/அருணலு சலுகை கடன் திட்டம் தொடர்பாக பொதுவான சில நடைமுறைகள்

•உச்ச பட்சம் 10000/= ரூபா அவர்களது நுகர்வு மற்றும் அத்தியாவசிய தேவையின் பொருட்டு கடனாக வழங்கப்பட வேண்டும் ஆனால் இந்த கடன் மூலம் முன்னர் பெற்று கொண்ட வேறு எந்த கடன்களுக்கும் நிலுவைகளை அறவிட முடியாது

•ஏற்கனவே சமுர்த்தி வங்கியில் கடன் பெற்று அறவிடமுடியா கடானாக இல்லாமல் உள்ளவர்கள் மற்றும் சமுர்த்தி வங்கியில் இதுவரை கடனினை பெற்று கொள்ளாதவர்களும் சஹன பியவர சலுகை கடன் திட்டத்தை பெற தகுதியனவர்கள்

•கடனினை பெற்றவர்களுக்கு 6 மாதங்கள் சலுகை காலம் வழங்கப்பட வேண்டும் அதன்பின் வட்டியின்றி கடனினை 18 மாத தவணைகளில் செலுத்த வேண்டும்

•70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்கள் கோரிக்கையின் பிரகாரம் கட்டாய சேமிப்பு பணத்தினை விடுவிப்பு செய்ய முடியும்

“அரச சேவையில் உள்ளவர்கள் , மற்றவர்களுடைய கஸ்ட நஷ்டங்களை புரிந்து கொள்பவர்கள் மற்றும் குதிரை ஓடாமல் ஒழுங்காக படித்தவர்களுக்கு விளங்கும் அரசசேவை உத்தியோகத்தர் ஒருவர் தங்கள் திணைக்கள சுற்று நிருபத்திற்கு உட்பட்டே கடமை மேற்கொள்ள வேண்டும்”

#இரண்டாவது

சமுர்த்தி பயனாளிகளுக்கு உலர் உணவு விநியோகத்தில் உத்தியோகத்தர்கள் சரியான பெறுமதி பொருட்கள் கொடுக்காமல் மோசடி செய்கின்றார்கள்

ஆம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடான நிலையில் அனைவருக்கும் முழு பெறுமதி உடைய உலர் உணவு பொதியினை வழங்குவதற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் போதிய கையிருப்புக்கள் இன்மை இதற்கான காரணம் ஆகவே தான் மக்களுக்கு 500/= பொதி வழங்கப்பட்டது வழங்கப்பட்ட பொருட்களின் நிறைக்கு ஏற்ப 500/= பெறுமதியன சிட்டை வழங்கப்படுகின்றது இதில் எந்த கொள்ளையும் இடம்பெறவில்லை
மேலும் சதொச,பலநோக்கு கூட்டுறவு சங்கங்களே மக்களுக்கு பொருட்களை வழங்குகின்றன எந்தவொரு சமுர்த்தி உத்தியோகத்தரும் வழங்க சொல்லி சுற்று நிருபம் இல்லை ஆனால் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை மற்றும் மக்கள் ஒன்றுகூட முடியாத நிலை என்பவற்றை கருத்தில் கொண்ட எமது பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மக்களுக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் பொருட்களை பெற்று தமது செலவில். வாகன வசதி செய்து வீடு வீடாக சேவை நோக்கமாக வழங்கி வருகின்றனர்

இதனை கண்டு பொறுக்க முடியாத சிலரது நடவடிக்கைகளே இன்றைய சமூக வலைத்தள வசைபாடல் ஒருவனை எந்த வகையிலும் வீழ்த்த முடியாத போது கையாலாகாத பலர் எடுக்கும் ஆயுதம்
வீண்பழி
பொய் குற்றச்சாட்டு
விமர்சனம்

கிராம மட்டத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை போலவே கிராமசேவகர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றவர்கள் மூவரும் உயிரை துச்சமாக மதித்தே மக்களுடன் மக்களாக அத்தியாவசிய சேவையில் உள்ளோம்
பல உத்தியோகத்தர்கள் வீடுகளில் தங்கி வேலைசெய்து பொழுதை கழிக்க (எவரது மனம் நோகவோ பொறாமையின் நிமித்தமோ கூறவில்லை)என் போன்ற அத்தியாவசிய சேவையாக்கப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் போர்க்கால அடிப்படையில் கடமையாற்றுவது பலருக்கு ஏளனமாக தெரியலாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எமக்கு எந்த ஒரு பாதுகாப்பு அங்கிளோ வழங்கப்படவில்லை
முகவுறை போட்டு தானே கடமையாற்றுகின்றீர்கள் கொரோனா தொற்றாது
சம்பளம் தானே வேலை செய்ய தான் வேணும்
என எவராவது கூறினால் அது ஏளனத்திற்குரிது

1)சம்பளம் பெறுவது எதற்காக...?
2)உயிர் போனதன் பிற்பாடு சம்பளம் எதற்கு ...?
3)பலத்த பாதுகாப்பு அங்கிகளுடன் நோயாளிகளை
பார்வையிடும் மருத்துவர்களே இறந்து விடும்
நிலையில் நாம் எம் மாத்திரம்....?
4)கிராமத்தில் மக்களுடன் மக்களாக பல மக்களை
சந்திக்கும் நாம் நோயாளிகளுடன் கூட பழகியிருக்க
கூடும் ஆகவே நாம் நோயினை கடத்த
கூடியவர்களாகவும் செயற்பட்டால் மக்கள் நிலமை...?

உலகம் ஆயிரம் கதைக்கும் அனைத்துக்கும் காது குடுத்தால் நமது கடமையை சரிவர ஆற்ற இயலாமல் போகும் உண்மையிலும் பழிவாங்கல் நோக்கம் பக்கசார்புடையதாக செயற்படல் மோசடி செய்தல்
போன்ற உத்தியோகத்தர்கள் தண்டிக்கப்பட வேண்டயவர்கள் அதில் மாற்று கருத்து இல்லை தற்சமயம் கொரோனா தாக்கம் தீவிரமாகவில்லை சிலவாரங்களில் நோய் தொற்று அதிகமாகி இறப்பு விகிதம் கூடி செல்லும் நேரத்திலும் நாம் கடமைக்கு செல்ல தான் வேண்டும் ஏனெனில் எமது சேவை அத்தியாவசிய சேவைகளில் ஒன்று என உணர்ந்தவர்கள் நாம்
எமக்கும் குடும்பம் உண்டு ஆசைகள் உண்டு உங்களை போலவே மனிதர்கள் நாம் இவற்றை எல்லாம் துச்சமாக நினைத்து உயிரை வெறுத்து வேலை செய்பவர்களுக்கு உங்கள் அறியாமையை தூக்கி நீங்கள் கொடுக்கும் பட்டம் மோசடிகாரர்
இந்த நேரத்தில் முட்டையில் இல்லாத மயிரை புடுங்கி குறைகாணும் நீங்கள்
•துணிவுள்ளவராயின்
•சேவை நோக்கம் கொண்டவராயின்
•மக்கள் குறை தீர்க்க மனமுள்ளவராயின்
கொரோனா தடுப்பு பிரிவிற்கு தன்னார்வ தொண்டு சேவைக்கு செல்லலாமே

உங்களுக்கு தேவை என்ன..?
•பிரபலமாக வேண்டும்
•நேரம் போக வேண்டும்
•சமூகத்தில் மற்றவன் தலை நிமிர கூடாது
•முக புத்தகத்திற்கு செய்தி வேண்டும்
•அரசியல் ஆதாயம் தேட வேண்டும்

இவற்றுக்கெல்லாம் பல மாற்றுவழிகள் உண்டு தொடர்பு கொண்டால் கூறுகின்றேன் தயவு செய்து மன்றாட்டமாக உங்களை கேட்டு கொள்கின்றேன் மேற்கூறிய உங்கள் தேவைகளுக்காக ஏழை மக்களுக்கு இந்நேரத்தில் உயிரை பணயம் வைத்து சேவை செய்பவர்களை இல்லாத ஒன்றை உருவகித்து மன உளைச்சலுக்குள்ளாக்காதீர்கள்

(எனது மதிப்பிற்குரிய யாழ் மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரி (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) ஒருவர் இன்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம்பி ஆயிரம் பேர் கல் எறிவான் உதவி செய்ய எவனும் வரமாட்டான் நீ கடமையை செய் துணிவுடன் செய் நேர்மையாக செய் எவனுக்கும் பயப்படாதே என கூறி தற்போதைய விமர்சனங்களுக்கு பொறுமையாய் பதில் கொடுத்து ஒரு பதிவினை போடு விளக்கம் உள்ளவன் விளங்குவான் வீம்பு கதைப்பவனை கண்டு கொள்ளாதே என கூறி இன்றைய சூழல் ஏழைமக்களுக்கு நீ பணிவிடை செய்ய கிடைத்த பாக்கியம் என கருதி தொடந்து கடமை செய் என ஆறுதல் தந்தார் )

அந்த மனசு தான் சார் கடவள்
நன்றி sir

05/04/2020

#ஜனாதிபதியின் #அதிரடி #உத்தரவு

அரசாங்கத்தில் பனி புரியும் ஊழியர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபாய தீடீர் என்று அதிரடியாக ஒரு உத்தரவை பிரப்பித்துள்ளார் அரச சொத்துகளையோ ? அல்லது பொது மக்களின் சொத்துகளையோ ? திருடவோ ? அல்லது கொள்ளையடிக்கவோ ? அல்லது ஏமாற்றம் செய்யவோ செய்தால் அதற்கான ஆதாரங்களுடன் நிறுவிக்கப்பட்டால் அவர்களுக்கான வேலைகளை பறிமுதல் செய்வது மாத்திரம் கிடையாது அவர்களின் 3 தலைமுறைக்கு அரச வேலை வாய்ப்பு நிரத்தரமாக தடை செய்யப்படும் என்றும் இதில் இனமத கட்சி வேறுபாடு ஏதுவும் பார்க்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்

மேலும் அவர் அறியத்தருவது என்னவென்றால் இன்றைய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடே தம்மித்து இருப்பதாலும் மக்கள் பல கஸ்டங்களையும் இன்னல்களையும் எதிர் நோக்குவதனாலும் பல பிரச்சனைக்களுக்கு மத்தியிலும் அரசு தனது நாட்டு மக்களுக்கு வேண்டி செய்யப்படும் உதவிகளில் ..உதாரணமாக சமுர்த்தி வங்கி கடன்களில் பாரிய மோசடிகள் நடைபெறுவதை அவதானிக்கூடியவாறு இருக்கின்றது இதனால் பல ஏழை குடும்பங்கள் வறுமையில் தங்களின் வாழ்வாதரத்தை இழந்து நிக்கெதியாக நிற்பதை எங்களால் அவதானிக்க கூடியவாறு இருக்கின்றது ஆனால் உண்மையில் உதவிகள் யாரை சென்றடைய வேண்டுமோஅவர்களுக்கு இது சென்றடைவதில்லை அதற்கு மாறாக வசதி படைத்தவர்களுக்கும் அரச அதிகாரிகளின் உறவினர்களுக்கும் அரச ஊழியர்களின் வேண்டப்பட்டவர்களுக்கும் தான் இவ்வாறன உதவிகள் சென்றடைகின்றது ஆகையால் அரசு பல தடவை பல வகையிலும் கண்டித்தும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை அந்த வகையில் அரசியின் திடிர் தீர்மானம் இதுவாகும் என்பதை தெரிவித்துள்ளார்

இனி வரும் காலங்களில் காதலித்தவர்கள் இப்படி தான் திருமணம் பண்ணுவாங்க போல
15/02/2020

இனி வரும் காலங்களில் காதலித்தவர்கள் இப்படி தான் திருமணம் பண்ணுவாங்க போல

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டா...
22/07/2019

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்க

கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...

மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...

தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!

என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.

ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.

அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...

"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு 'அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு' என்று கூறி சத்தியம் வாங்கிக் கொண்டாள்!" என கூறி சத்தமாக அழுகிறான்.

13/07/2019

Address

COLOMBO
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when நட்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category