19/12/2025
மாற்றம் பெற்றுச் சென்றாலும்
மாறாத மண்வாசம்
நன்றி கூறி அக மகிழ்கின்றோம்
எமது பாடசாலையில் தரம் 10 மற்றும் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விடுமுறைகால வகுப்புகளும் செயலமர்வுகளும் 17 நாட்கள் முதற்கட்டமாக நடைபெற்றது. 6 தமிழ் வகுப்புகள், 10- விஞ்ஞான வகுப்புகள், 4 கணித வகுப்புகள், 9 வரலாறு வகுப்புகள், 1 ஆங்கில வகுப்பு 1 புவியியல் மற்றும் குடியுரிமை வகுப்பு என்பன நடைபெற்றன. இதில் வளவாளர்களாக திரு.மு.மணிமாறன் (யா/மகாஜனக் கல்லூரி) திரு.மதுரங்கன், திரு .என்.லோயன் ஆகியோர் வருகைதந்தனர். மாணவர்களுக்கான கையேடுகள் இலவலசமாக வழங்கப்பட்டன. மாணவர்களுக்கான சிற்றுண்டிகள் அனைத்து பெற்றோர்களினாலும் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டது. வளவாளர்களுக்கான நிதி அனுசரனையினை எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் வழங்கியிருந்தனர். அந்தவகையில் தி.விஜயரூபன் , ம.ரஞ்சித்குமார் , ம.உமாசங்கர் ஆகியோரின் நிதிப் பங்களிப்பினால் பழைய மாணவர் சங்கம் நேரடியாக இந்த விடுமுறைகால வகுப்பினை நடாத்தியிருந்தது. அந்தவகையில் பாடசாலைச் சமூகம் சார்பாக எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.