யா/நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • யா/நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்

யா/நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம் கற்பவை கற்று கற்றாங்கொழுகு...!!!

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு ~ 24.09.2026
29/09/2026

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு ~ 24.09.2026

துயர் பகிர்கின்றோம்எமது பாடசாலையின் சக ஆசிரியர் திருமதி.ஜனார்த்தனி விமலசேகர் அவர்களின் அன்புச் சகோதரி திருமதி.வளர்மதி கி...
26/09/2026

துயர் பகிர்கின்றோம்

எமது பாடசாலையின் சக ஆசிரியர் திருமதி.ஜனார்த்தனி விமலசேகர் அவர்களின் அன்புச் சகோதரி திருமதி.வளர்மதி கிருபாகரன் அவர்கள் கடந்த 18.09.2026 அன்று இறைபதமடைந்துவிட்டார்.

அன்னாரின் திடீர் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

பாராட்டி வாழ்த்துகின்றோம்தீவக வலயக்கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் செல்வி. கோ.ர...
26/09/2026

பாராட்டி வாழ்த்துகின்றோம்

தீவக வலயக்கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் செல்வி. கோ.ரிசானுகா அவர்கள் முதலாம் இடம் பெற்று மாகாண போட்டியில் பங்கு பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
பயிற்றுவித்து வழிப்படுத்திய பாடசாலையின் சங்கீத பாட ஆசிரியை திருமதி.கங்கானந்தினி அவர்களுக்கும் பக்கவாத்தியத்தினை இசைத்த செல்வன்.பிரணவன் அவர்களுக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி நவில்கின்றோம்கடந்த 15.09.2026 அன்று ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான உணவு பரிமாறும் பாத்திரங்களை திரு.செல்லப்பா தங்கராச...
26/09/2026

நன்றி நவில்கின்றோம்

கடந்த 15.09.2026 அன்று ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான உணவு பரிமாறும் பாத்திரங்களை திரு.செல்லப்பா தங்கராசா அவர்களின் குடும்பத்தினரால் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மாணவர் நலனில் அக்கறை கொண்ட அவர்களின் குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

புதிய அதிபரைப் பாராட்டிவாழ்த்துகின்றோம்.திரு.செல்லையா முரளிமோகன் அவர்கள் 02.09.2026 அன்று எமது வித்தியாலயத்தில் அதிபராகக...
12/09/2026

புதிய அதிபரைப் பாராட்டி
வாழ்த்துகின்றோம்.

திரு.செல்லையா முரளிமோகன் அவர்கள் 02.09.2026 அன்று எமது வித்தியாலயத்தில் அதிபராகக் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரின் சேவைக்காலம் சிறக்க பாராட்டி வாழ்த்துகின்றோம்.

புலமைப் பரிசில் பரீட்சை ~ 2026 பெறுபேறுகள்.எமது பாடசாலையில் செல்வன்.வி.கிஷான் அவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்(149 புள...
04/09/2026

புலமைப் பரிசில் பரீட்சை ~ 2026 பெறுபேறுகள்.

எமது பாடசாலையில் செல்வன்.வி.கிஷான் அவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்(149 புள்ளி) பெற்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் புள்ளிகளை பெற்ற ஏனைய மாணவச் செல்வங்களையும் பாராட்டி வாழ்த்துவதுடன் இம் மாணவர்களை வழிப்படுத்தி நெறிப்படுத்திய பாடசாலையின் அதிபர்,வகுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ச.திசான் - 68
கெ.வர்னேஸ் - 92
செ.ஹரிஷயன் - 73
க.கௌதம் - 69
ரே.கினோசன் - 105
றீ.அக் ஷயன் - 105
ச.பிறிதீஷ் - 84
சு.சுதர்ஷாயினி - 93
கு.தஸ்வீனா - 91
ஜெ.சக் ஷிதா - 93
ச.டரனிகா - 90
க.தவீனா - 92
சி.அம்சவி - 117
சு.அபிவர்ஷினி - 129
றி.ஹம்னா - 64

பாடசாலைச் சமூகம்.

துயர் பகிர்கின்றோம்சமூக சேவையாளர் திருவாளர். இரகுநாதர் சிவபாதசேகரம்  - மணியான் மாஸ்டர்(தலைவர், மணிபல்லவ கலாமன்றம்,அதிபர்...
29/08/2026

துயர் பகிர்கின்றோம்

சமூக சேவையாளர் திருவாளர்.
இரகுநாதர் சிவபாதசேகரம்
- மணியான் மாஸ்டர்
(தலைவர், மணிபல்லவ கலாமன்றம்,
அதிபர், யா/கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயம்,
நல்லாசிரியர் நயினாதீவு மகா வித்தியாலயம், நயினாதீவு கணேச கனிஸ்ட மகா வித்தியாலயம்)

தங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைப் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

பாடசாலைச் சமூகம்.

நன்றி நவில்கின்றோம்திரு.ப.பரமேஸ்வரன் [ஓய்வு நிலை அதிபர், போசகர் பழைய மாணவர் சங்கம்)அவர்கள் எமது பாடசாலை நூலகத்திற்கு பயன...
27/08/2026

நன்றி நவில்கின்றோம்

திரு.ப.பரமேஸ்வரன் [ஓய்வு நிலை அதிபர், போசகர் பழைய மாணவர் சங்கம்)
அவர்கள் எமது பாடசாலை நூலகத்திற்கு பயன் மிகுந்த நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மாணவர்களின் கல்வியறிவினை உயர்த்தும் நோக்கிலும் வாசிப்புப் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் நூல்களை அன்பளிப்பாக வழங்கியமைக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாடசாலைச் சமூகம்
நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்.

வேலணை பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் பழைய மாணவரும்  கெளரவ பிரதேச சபை உறுப்...
13/07/2026

வேலணை பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் பழைய மாணவரும் கெளரவ பிரதேச சபை உறுப்பினருமான திரு.ம.கார்த்தீபன் அவர்களால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி வினாத்தாள் அடங்கிய பொதி இன்றையதினம்(13.06.2026) மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

வினாத்தாள் பொதியினை வழங்கி வைத்த கௌரவ உறுப்பினர் அவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

Ward No 6, Nainativu
Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when யா/நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category