Agritech Sri Lanka

Agritech Sri Lanka

Share

Bringing together individuals, businesses and educational institutions to find solutions to challenges for the agriculture and ecotourism sectors

Photos from Agritech Sri Lanka's post 02/04/2023

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்தில் இடம்பெற்ற AGRITECH 102 நிகழ்வின் குறிப்புக்கள்

#அறிமுகம்

இலங்கை பொருளாதார ரீதியிலான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் அல்லாமல், இதற்கு முன்னரான காலத்தில் கூட விவசாயத்துறையில் பல பிரச்சனைகள் இருந்துள்ளன.

இந்தப் பிரச்சனைகளை அடையாளப்படுத்தி, அதற்கான தீர்வுகளை உருவாக்கி தொழில் முயற்சியாக்க வேண்டியதும், அந்த தொழில் முயற்சிகளுக்கான ஆய்வுப்பூர்வமான வெற்றி வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியதும் அவசியமாகிறது.

உலகளவில் வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்துறையில் தனியார் முதலீடுகள், தனிநபர் முயற்சிகளே அதிகளவில் உள்ளது இதனாலேயே விவசாயத்துறையும் வளர்ந்த நாடுகளில் வெற்றியடைந்துள்ளது. மேலும் வளர்ந்த நாடுகளில் விவசாயத்துறையில் உள்ள பிரச்சனைகளை அடையாளப்படுத்தப்படுத்தி அதற்கான விஞ்ஞான ரீதியிலான தீர்வு காணும் ஆராய்சிகள் ஏராளம் நடைபெற்று உள்ளது, தொடர்ந்தும் ஆராய்சிகள் செய்யப்படுகிறது. இவை தங்களது, உற்பத்தி செலவை குறைத்தும் அதிக வருமானத்தை ஈட்டும் வழிவகைகளை தேடியதன் மூலம் விவசாய அபிவிருத்தியை அடைந்துள்ளன.

நமது நாட்டிலும் நமது பிராந்தியத்திலும் எமது விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விவசாய துறை சார்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடையாளப்படுத்தி அதனை ஆராய்சிக்குட்படுத்தி அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் எண்ணத்தில் யாழ்ப்பாண விவசாய பீடத்தின் பட்டதாரிகள் குழு(AGRITASK FORCE) Agritech எனும் நிகழ்வினை நடத்தி வருகிறது.

்பது

அக்ரிடெக் என்பது தொடர்சியாக இடம்பெறும் நிகழ்வாகும். 2019 ஆண்டு முதல் நிகழ்வு கிளிநொச்சி அறிவியல் நகர் விவசாய பீடத்தில் நடைபெற்றது பின்னர் 2020,2021,2022 ஆண்டுகளில் நேரடியான நிகழ்வாக நடத்தப்படாத போதும் நிகழ்நிலையில் விவசாயத்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி பயணித்தது.

ிகழ்வு

அக்ரிடெக் தொடர் வரிசையில் இரண்டாவது நிகழ்வு மார்ச் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடம் அறிவியல் நகர் கிளிநொச்சியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை AGRITASK FORCE குழு, விவசாய பீடம்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம், AHEAD, UBL CELL, JAICA, விவசாய பீட மாணவர் ஒன்றியம் ஆகியோர் இணைந்து ஒழுங்கமைத்தனர்.



Agri Task force என்பது விவசாயத்துறை சார்ந்து இயங்கும் சுயாதீனமான குழு ஆகும்
இந்த குழுவில் ஆரம்பத்தில் 4 விவசாய பட்டதாரிகள் இணைந்து கொண்ட போதும் தற்போது 12 பேர் முழுநேரமாகவும் பகுதி நேரமாகவும் இணைந்து செயல்படுகிறார்கள்.

#விவசாயபீடம்_யாழ்ப்பாண_பல்கலைக்கழகம்

இலங்கையில் வடபகுதியில் வருடாந்தம் 80 இற்கும் மேற்பட்ட விவசாயப் பட்டதாரிகளை உருவாக்கும் உயர் கல்வி நிலையம் இதுவாகும். வரலாற்று ரீதியாக கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண திருநெல்வேலி பகுதியில் இயங்கி தற்போது மீண்டும் கிளிநொச்சியில் விசாலமான ஆய்வுக்கூட வசதிகளுடன் இயங்கி வருகிறது.



உயர்கல்வி விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தியை துரிதப்படுத்தும் AHEAD இந்த நிகழ்வின் பிரதான அனுசரனையாளர்களில் ஒரு அங்கமாகும்.
AHEAD என்பது உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய உயர்கல்வித் துறைக்கு ஆதரவளிக்கும் இலங்கை அரசாங்க நடவடிக்கையாகும். கிளிநொச்சி அறிவியல் நகர் விவசாய பீடத்தில் பல செயற்றிட்டங்களை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர், கடந்த காலங்களில் விவசாய பீடத்திலிருந்து விவசாயிகளுக்கு பல பயிற்சி நெறிகளை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது



பல்கலைக்கழகம் மற்றும் பொது,தனியார் நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நிலையான வளர்ச்சியை பொருளாதாரத்தில் அடைய உதவும் நோக்குடன் இயங்கும் அமைப்பாகும். கடந்தாண்டு விவசாயபீட மாணவர் மற்றும் விரிவுரையாளர் இணைந்து உருவாக்கிய வில்வம்பழ யோக்கட் இனை வர்த்தகரீதியில் உருவாக்கவும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பையும் காப்புரிமையையும் பெற UBL உதவியது.



ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் என்பது ஜப்பான் அரசாங்கத்திற்கான உத்தியோகபூர்வ மேம்பாட்டு உதவியின் பெரும்பகுதியை வழங்கும் ஜப்பான் அரசாங்க நிறுவனம் ஆகும். இது வளரும் நாடுகளில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவுதல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் பணியாற்றுகிறது. இவ்நிறுவனத்தின் 2.2 பில்லியன் நிதியுடன் விவசாயபீட்த்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வளாகம், பண்ணை என்பன நிர்மானிக்கப்பட்டுள்ளது

#யாழ்ப்பாண_பல்கலைக்கழக_விவசாய_பீடமாணவர்_ஒன்றியம்

இறுதியாண்டு மாணவர்களின் இணைவுடன் இயங்கும் மாணவர் ஒன்றியம் கடந்த காலத்தில் இயங்கிய அக்ரிடெக் இலும் பெரும்பங்காற்றியிருந்தனர். எதிர்கால சமூகத்திற்கான விவசாயத்துறையின் எதிர்கால பங்காளிகளாக இருப்பதோடு வருடாந்திரம் பசுந்தோகை எனும் விவசாயத்துறை சார்ந்த புத்தகத்தையும் வெளியிட்டு வருகின்றனர்

நிகழ்வின் ஏனைய அனுசரனையாளர்கள்

1. தமிழர் பொருமிண்யம்

தமிழ் மக்களது பொருளாதார முன்னேற்றத்தினை இலக்காக கொண்டு வாரந்தோறும் வெளி வரும் மின்னிதழ்

2. TAMIL ECONOMIC FORUM

தமிழ் மக்களது பொருளாதர விருத்திக்கான செயற்றிட்டங்களை தமிழர் நிலப்பரப்பில் காத்திரமான செயற்றிட்டங்களுடன் செயற்படும் புலம்பெயர் மற்றும் புலத்திலுள்ள தமிழர்களது அமைப்பு

3.சிறகுகள் அமையம்

தமிழ் மக்களது கல்வி மற்றும் தனிநபர் மேம்பாட்டிற்காக பல குழுக்களுடன் இணைந்தும் தனித்தும் செயற்படும் இளைஞர்களது அமைப்பு

4.புதிய வெளிச்சம்

இயற்கை விவசாயத்தினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக பல ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் கருத்தமர்வுகளை மக்களுக்கு வழங்கி வரும் அமைப்பு

5. இந்திரா குழுமம்

வடமாகாண விவசாத்துறையில் விவசாய ஆலோசனை, கருத்து உருவாக்கம்,விவசாய விரிவாக்கம் பயிற்சிகள்,விவசாயத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடதக்கது.

6. www.agricultureinformation.lk

இணையதளம் மூலம் விவசாய விரிவாக்கத்தினை மேற்கொள்ளும் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடதக்கது.

7. Thaayin care

நீடித்து நிலைபெறக்கூடிய மாற்று சக்திவளங்களை விவசாயத்துறையில் பயன்படுத்துதற்கான திட்டங்களுடன் இயங்கும் அமைப்பாகும், இந்த அமைப்பின் தலைவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடதக்கது.

8. தீம்புனல்

இணையதளம் மற்றும் மின்னிதழ் மூலம் தமிழ் மக்களிடம் தகவல் பரிமாற்றத்தினை வழங்கும் அமைப்பாகும்.

ிகழ்வில்

1. இந்தாண்டு இடம்பெற்ற அக்ரிடெக் நிகழ்வில் விவசாயபீடம் இயந்திரவியல்பீடம் மற்றும் தொழில்நுட்ப பீட விரிவுரையாளர்கள் மாணவர்களுடன் விவசாயத்துறைசார்ந்து இயங்கும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களும் பங்கேற்றனர்.

2. நிகழ்வில் வருகை தந்தவர்கள் தங்களது விபரங்களை பதிவு செய்து கொண்டதோடு ஏற்பாட்டாளர்களால் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

3. விவசாய பீடத்திற்கான ubl இன் ஒருங்கிணைப்பாளர் Dr.N.Kannan அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது. அக்ரி டெக் 102 நிகழ்வு பற்றிய அறிமுகம் அக்ரி டாஸ் போஸ் சார்பில் வி.விமலதாஸ் அவர்கால் வழங்கப்பட்டது.

4. இதன்பின்னர் விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.வசந்தரூபா அவர்கள் உரையாற்றினார் உரையில் விவசாயத்துறையில் உள்ள இடர்பாடுகளை எதிர்கால விவசாயத்துறை சார்ந்து இயங்க இருக்கும் மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்பை இந்த நிகழ்வு உருவாக்கியுள்ளது எனவும்
இந்த இடர்பாடுகள் மற்றும் சவால்களை ஆராய்ந்து பெறுமதியான வெளியீடுகளை சமூகத்திற்கு வழங்குவதோடு புதிய தொழில் வாய்புக்களை உருவாக்குவதற்கு மாணவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை வரவேற்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பீடமானது, விவசாயத்துறை சார்ந்து இயங்கும் விவசாயிகள்,அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் குழுக்களுடன் இணைந்து செயற்பட கூடிய வாய்ப்பையும் குறித்த நிறுவனங்கள் விவசாய பீடத்துடன் இணைந்து செயற்பட கூடிய வாய்ப்பையும் அக்ரி டொக் நிகழ்வு வழங்கியுள்ளது. மேலும் இந்த நிகழ்வினை JAICA உடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்தார்.

5. JAICA சார்பாக உரையாற்றிய பேராசிரியர் தமது நிறுவனம் யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்தில் 2.2 பில்லியன் பெறுமதியில் அமைத்து கொடுத்த முதலீட்டின் வெளியீடுகளை பலன்களை பெறக்கூடிய வாய்பை உருவாக்கின்ற மற்றும் அதற்கான ஒரு நம்பிக்கை தரும் ஆரம்ப புள்ளியாக இந்த நிகழ்வினை நாம் பார்க்கின்றோம் என தெரிவித்தார்

இந்த நிகழ்வில் விவசாய சமூகத்தில் இருந்து முன்மொழியப்பட்ட விடயங்கள் தொழில் முயற்சிகளுக்கு jaica நிறுவனம் நிதியுதவியளிக்க முடியும் எனவும் agritech இனது அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் இனிவரும் வருடாந்த நிகழ்வுகளுக்கும் அனுசரணை வழங்குவோம் எனவும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த agritech நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த விவசாய பீடத்தினையும் பிற ஏற்பாட்டு குழுவையும் வெகுவாக பாராட்டுவதாக தெரிவித்தார்.

6. நிகழ்வில் திரு.நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் பங்கேற்று விவசாயத்துறை குறிப்பாக வடமாகாண விவசாயத்துறை பற்றியும் சேதன விவசாயம் பற்றியும் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

7. யாழ்ப்பாண பல்கலைக்கழக இயந்திரவியல் பீடத்தின் பீடாதிபதி பேசுகையில் agritech நிகழ்வு ஏற்பாட்டுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தோடு கிளிநாச்சி மற்றும் வடமாகாணம் சார்ந்து இயங்கும் சில சிறு முயற்சியாண்யாளர்களை தனிப்பட்ட முறையில் தான் அறிவேன் எனவும் இவர்களுக்கான விவசாய சார்ந்த பிரச்சனைகளை அடையாளப்படுத்தி உள்ளதாகவும்,
விவசாயிகள் தொழில்நுட்பகளை பெறுவதிலும் முதலீடுகளை பெறுவதிலும் பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் அறுவடையோடு மாத்திரமே விவசாயிகள் மட்டுபடுத்தப்படுகிறார்கள் எனவும் அறுவடைக்கு பின்னரான தொழில் வாய்ப்புக்கள் நுட்பங்களுக்கான வழிகாட்டல் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு உரிய நுட்பங்களை வழங்குவதோடு தொழில் துறையில் உள்ள இடர்பாடுகளை ஆராய்சிகளை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்ய முடியும் இதற்கான முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு உள்ள agritech இல் பங்குபற்றுபவராகவும் இயன்றளவு பங்களிப்பை வழங்க முடியும் எனவும் தெரிவித்து கொண்டார்.

8. தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேசும் போது Agritech 102 இன் முக்கியத்தும் பற்றியும் இந்த நிகழ்வு நடத்தவேண்டியதன் முக்கியத்துவம் எதிர்ப்பார்ப்பு பற்றி கூறியிருந்தார்.மற்றும் நிகழ்வை நடத்தும் ஏற்பாட்டாளர்கள் பற்றிய தகவலை முறையாக வழங்குமாறும் கேட்டுகொண்டார்

9. பீடாதிபதிகளது உரைக்கு பின்னர் சிறு தேனீர் இடைவேளைக்காக அனைவரும் அழைக்கப்பட்டு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

10. சிற்றுண்டி இடைவேளைக்குப்பின்னர் விவசாயபீடத்தின் ஆறு துறைகளின் தலைவர்கள் தங்களது துறையில் விவசாயபீடத்தில் ஏற்கனவே செய்த ஆராய்சிகள் செய்யக்கூடிய ஆராய்சிகள் ஆராய்சி செய்வதற்கு காணப்படும் வளங்கள் பற்றி சிறு உரையாற்றினார்கள்

11. இதன்பின்னர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பிரச்சனைகள் தொழில் முனைவோர் பிரச்சனையை அடையாளப்படுத்தியோர் அவையில் முன்வைத்தனர்.

காலநிலைமாற்றம் அக்வாபோனிக்ஸ் ஹைட்ரோபோனிக்ஸ் கால்நடைத்தீவனம் இரசாயனங்கள்தெளிப்பு கழிவு முகாமைத்துவம் விலங்கு உணவு விவசாய இயந்திர உருவாக்கம் நீர்ஆவியாதலைக் கணித்தல் போன்ற தலைப்புக்களில் பிரச்சனைகள் முன்மொழிப்பட்டன.

இவை நிகழ்வில் பங்கபெற்றிய விவசாயபீடம் உட்பட பிறபீடங்களின் விரிவுரையாளர்களாலும் மாணவர்களாலும் உள்வாங்கிகொள்ளப்பட்டது.
மதியநேர போசனத்திற்கு பின்னர் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகள் தனித்தனி குழுக்களாக பிரிந்தும் இணைந்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பில் சென்ஸ் அக்ரோ இனது தலைமை நிர்வாக அதிகாரி மில்லர் அலெக்சாண்டர் ராஜேந்திரன் பங்கபெற்றி தனது கருத்துக்களையும் விவசாயத்துறை சார்ந்த வாய்ப்புக்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஏற்கனவே கடடமைக்கப்பட்ட தகவல்குறிப்புகளில் தங்களது விவாதங்களை குறித்துக்கொண்டனர். துறைவல்லுனர்கள் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

குழுவான கலந்துரையாடல்கள் முடிந்தபின்னர் தங்களது கலந்துரையாடல்களின் தொகுப்பை குழு சார்பில் ஒருவர் அவையில் முன்வைத்தனர்.

இறுதியாக கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடுத்தகட்ட நகர்விற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் சாதக நிலைமைகள் ஆராயப்பட்டு இதன் தொடர்ச்சியை நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு பொறுப்பெடுத்தது. நிகழ்வில் பங்கபெற்றிய அனைவருக்கும் விவசாயபீட மாணவர் ஒன்றிய மாணவர் தலைவர் நன்றி தெரிவித்து நிகழ்வை முடித்து வைத்தார்.


நிகழ்வில் நடந்த மேலும் சில முக்கிய விடயங்கள்

1. நிகழ்வு நடந்த இடம் முழவதும் பொலித்தீன் பாவணையற்ற இடமாக பேனப்பட்டது.

2. மதிய நேர விருந்து உபசாரத்தில் விவசாயபீடத்தின் கண்டுபிடிப்பான வில்வம்பழ யோகட் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

3 . காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிக்கான நிதி வழங்கல் காவேரிக் கலா மன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

4. விவசாயத்துறை சார்ந்த தொழில் முனைவோர்களது விளம்பர பதாதைகள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன.

6. விவசாயபீடத்தின் துறைத்தலைவர்களால், முன்மொழியப்பட்ட சில விடயங்கள் ஆராய்சிக்கு உட்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது


உசாவுத்துணை

https://www.agricultureinformation.lk/agritech102/
https://www.facebook.com/AgritechSL
https://www.agri.jfn.ac.lk/?page_id=2960
https://www.agri.jfn.ac.lk/?p=2353
https://theempunal.com/e-paper/

கட்டுரையாக்கம்
அக்ரி டாஸ் போஸ் குழுமம்

Photos from Agritech Sri Lanka's post 25/03/2023

On March 23rd, 2023, from 8.30 am to 4.30 pm, "Agritech 102" was held in the auditorium of the Faculty of Agriculture, University of Jaffna, Ariviyal Nagar, Kilinochchi. The agri task force (an individual group of faculty alumni members), UBL cell, the faculty of agriculture, AHEAD operations, the Japan International Cooperation Agency, and the agriculture faculty student union collaborated in organizing this event together. event partners are tamilar porumiyam, tamil economic forum,siraguhal, noolagam,puthiya velicham,inthira group, agricultureinformation.lk ,thaayin care, and theempunal.

Through the research of the university of Jaffna's final-year students, this event seeks to find agricultural industry solutions, resulting in innovations and new employment opportunities. Another goal of this event is to foster collaboration and strong partnerships among farmers, agricultural production firms, stakeholders who support agriculture, entrepreneurs, research groups, and environmental activists.

At this event, more than 100 people took part, including around 30 representatives of farming groups and other public and private players in the agriculture industry, as well as over 70 students and 20 staff members from the Faculty of Agriculture.

The participants discussed over 15 different issues. members of the farming community, public and private stakeholders in the agriculture industry, faculty members, and students from the Faculty of Agriculture formed various groups and talked about the issues and the research that needed to be done in an efficient way.

Following the conversation, participants from each group offered their suggestions for how to address the issues raised by the stakeholders. finally, the event organized team took responsibility for the follow-up of the event.

01/03/2023

AGRITECH 102 நிகழ்வானது எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி அறிவியல் நகர் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நடைபெறும்

27/02/2023

நீங்கள்,விவசாயதுறை சார்ந்த சிறுதொழில் அல்லது
தொழில் முயற்சியாளரா??

உங்களது தொழில் முயற்சியை விவசாய பீடத்தில் ஒரு பாதாகை அல்லது துண்டு பிரசுரம் மூலம் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறீர்களா??
விவசாய பீடத்தில் இடம் பெறும் AGRITECH 102 நிகழ்வில் இலவசமாக உங்கள் தொழிலினை உலகத்திற்கு தெரியப்படுத்துங்கள்
15 மார்ச் ஆம் தேதிக்கு முன்னர் தங்கள் விளம்பர பதாகைகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் பற்றி அறிய தரவும்

மேலதீக விவரங்களுக்கு அழையுங்கள்

யாழ்ப்பாணம் 0763103565
கிளிநொச்சி மற்றும். முல்லைத்தீவு 0777906383
வவுனியா 0773385233
மன்னார் 0752661990
ஏனைய பகுதிகள் 0770773010

26/02/2023

Dear All,

From this year onwards, we are (Agri task force Team) going to provide financial support to the Agricultural Research,Innovation and Initiative startups with Academic guidelines.( FOA, UOJ)

For that we are arrange the physical event also, it's called (In 2019 also we conduct )

More information about ) >>>https://drive.google.com/file/d/1EW628_kFSVIgw0BadHBPedbeV5nrsjAz/view?usp=drivesdk

Those who can provide solution to problems in agriculture sector Join with us.

REGISTER HERE >>>> https://bit.ly/3El8CuX

26/02/2023

விவசாயம் சார்ந்த ஆராய்சிக்கு

நிதி மற்றும் ஆலோசனையை எதிர்பார்க்கின்றீர்களா??

இன்றே விண்ணப்பியுங்கள் Agritech 102

📝விண்ணப்பிப்பதற்கு

https://bit.ly/3El8CuX

விண்ணப்ப இறுதி திகதி
மார்ச் 10

24/02/2023

நீங்கள், கால்நடை வளர்ப்பில் காணப்படும் பிரச்சனையை அடையாளப்படுத்தி
அதற்கான தீர்வினை வழங்க கூடியவரா

அல்லது

கண்டு பிடித்தவற்றை ஆராய்சிக்கு உட்படுத்தி வியாபாரம் ஒன்றை
உருவாக்க உள்ளீர்களா??

இன்றே விண்ணப்பியுங்கள் Agritech 102

📝விண்ணப்பிப்பதற்கு

https://bit.ly/3El8CuX

விண்ணப்ப இறுதி திகதி
மார்ச் 10

ஏன் நீங்கள் agritech 102 இல் ஏன் இணைய வேண்டும்?

📌உங்களின் வியாபாரம் தொடர்பாக நீங்கள் எதிர்கொள்ளும இடர்பாடுகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தில் இருந்து ஆலோசனைகள் மற்றும் வளங்களை பயன்படுத்த கூடிய வாய்ப்பு

📌தொழில் ரீதியலான இடர்ப்பாடுகளை ஆய்வுபூர்வமாக கண்டறிந்து தீர்வை பெற கூடிய வாய்ப்பு

📌உங்கள் வியாபார ரீதியலான புத்தாக்கத்தினை ஆரம்பிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அவசியமான ஒரு கணிசமான தொகையை ஆரம்பத்தில் பெறும் வாய்ப்பு

இறுதி நிகழ்வு

இறுதி நிகழ்வு மார்ச் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக
விவசாய பீடம் கிளிநொச்சியில் நடைபெறும்.

மேலதிகமான தகவலுக்காக

https://drive.google.com/file/d/1EW628_kFSVIgw0BadHBPedbeV5nrsjAz/view?usp=drivesdk

24/02/2023

விவசாயத்துறை சார்ந்து விவசாய இயந்திரம் ஒன்றை நீங்கள் ஒன்றை கண்டுபிடிக்க உள்ளீர்களா???

அல்லது

கண்டு பிடித்தவற்றை ஆராய்சிக்கு உட்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட வியாபார உருவாக்க உள்ளீர்களா??

இன்றே விண்ணப்பியுங்கள் Agritech 102

📝விண்ணப்பிப்பதற்கு

https://bit.ly/3El8CuX

விண்ணப்ப இறுதி திகதி
மார்ச் 10

ஏன் நீங்கள் agritech 102 இல் ஏன் இணைய வேண்டும்?

📌உங்களின் வியாபாரம் தொடர்பாக நீங்கள் எதிர்கொள்ளும இடர்பாடுகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தில் இருந்து ஆலோசனைகள் மற்றும் வளங்களை பயன்படுத்த கூடிய வாய்ப்பு

📌தொழில் ரீதியலான இடர்ப்பாடுகளை ஆய்வுபூர்வமாக கண்டறிந்து தீர்வை பெற கூடிய வாய்ப்பு

📌உங்கள் வியாபார ரீதியலான புத்தாக்கத்தினை ஆரம்பிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அவசியமான ஒரு கணிசமான தொகையை ஆரம்பத்தில் பெறும் வாய்ப்பு

இறுதி நிகழ்வு

இறுதி நிகழ்வு மார்ச் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக
விவசாய பீடம் கிளிநொச்சியில் நடைபெறும்.

மேலதிகமான தகவலுக்காக

https://drive.google.com/file/d/1EW628_kFSVIgw0BadHBPedbeV5nrsjAz/view?usp=drivesdk

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Jaffna
Jaffna
40000