Vayavilan RCTM School

Vayavilan RCTM School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vayavilan RCTM School, School, Jaffna.

06/07/2021
வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்      பாடசாலை பழைய மாணவர் சங்க அங்குராப்பணம்                  Inauguration of Old ...
31/03/2021

வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்
பாடசாலை பழைய மாணவர் சங்க அங்குராப்பணம்
Inauguration of Old Students Association for
Vayavilan Roman Catholic Tamil Mixed School

வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்கம்; கடந்த 28.03.2021 அன்று வயாவிளான் உத்தரிய மாதா ஆலயத்தில் இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் பின்னர் பாடசாலை வளாகத்தில் வைபக ரீதியாக அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இவ்வைபகமானது நாட்டில் தற்போது நிலவுகின்ற கொரனா தொற்று நோய் பரவலினை கருத்தினில் கொண்டு வரையறுறுக்கப்பட்ட சில அங்கத்துவர்களின் பங்களிப்புடன் நடாத்தப்பட்டது. இதன் தலைவராக கல்வி திணைக்த்தின் சுற்று நிரூபத்திற்கு ஏற்ப பாடசாலையின் அதிபர் திரு. N. இரவீந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளராக முறையே திரு. P. ஜயசீலன் அவர்களும்; திரு S. பிரான்சிஸ் சேவியர் அவர்களும்; தெரிவுசெய்யப்பட்டார்கள்.

மேலும், மூன்று மாத காலத்தில் பரந்தளவில் பிரசாரங்களை மேற்கொள்வதன் மூலம் அதிக அளவு பழைய மாணவர்களைத் திரட்டி பொதுக்கூட்டம் ஒன்றினை நடாத்தி சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளை முன் எடுத்துச் செல்லவும் தீரமானிக்கப்பட்டது.

இது தொடர்பில் இலங்கையிலும் மற்றும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் சகல பழைய மாணவர்களும் தங்களின் முகநூல் மற்றும் WhatsApp Group போன்ற இணையவழி ஊடகங்களைப் பயன்படுத்தி பாடசாலை மற்றும் பழைய மாணவர் சங்க எதிர்கால முன்னேற்றத்தினையும் வளர்ச்சியினையும் கருத்தினில் கொணடு சகல பழைய மாணவர்களினதும் கவனத்திற்கு இதனை கொண்டுவருவதற்கு தங்கள் ஒத்தழைப்பினையும் (Co-operation) பங்களிப்பினையும் (Contribution) வழங்குமாறு வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் பேரில் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

நன்றி.

பல வருடங்கள் பழமை வாய்ந்த எமது பாடசாலையானது சொந்தவிடத்தில் இயங்கிய போது சுமார்-417 மாணவர்களுடன் இயங்கி வந்தது. கடந்த கால...
04/09/2020

பல வருடங்கள் பழமை வாய்ந்த எமது பாடசாலையானது சொந்தவிடத்தில் இயங்கிய போது சுமார்-417 மாணவர்களுடன் இயங்கி வந்தது. கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக கடந்த-1988 ஆம் ஆண்டு முதல் இந்தப் பாடசாலை அறவே இயங்காதிருந்தது.

கடந்த-2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் பாடசாலை முன்னர் இயங்கி வந்த வயாவிளான் உத்தரிய மாதா தேவாலயத்தை அண்டிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன.

எனினும்,யுத்தம் காரணமாகப் பாடசாலை கடுமையாகச் சேதமடைந்த காரணத்தால் பாடசாலையை உடனடியாகச் சொந்தவிடத்தில் மீள இயக்க முடியாத இக்கட்டான நிலையேற்பட்டது.

கடந்த-2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உரும்பிராயில் இயங்கி வந்த ஸ்ரீவேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் இந்தப் பாடசாலை முதலாம் தரத்தை மட்டும் கொண்டதாக இயங்க ஆரம்பித்தது.

பின் 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் வயாவிளான் மத்திய கல்லூரியின் ஒரு பகுதியில் இந்தப் பாடசாலை தற்காலிகமாக இயங்க ஆரம்பித்துப் பல்வேறு சிரமங்களின் மத்தியில் இயங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த வருடம் பாடசாலையை சொந்தவிடத்தில் மீண்டும் இயங்க வைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக கல்வியமைச்சின் பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்தப் பாடசாலைக்குப் புதிய இரண்டு மாடிக் கட்டடம் நிர்மாணிக்க தீர்மாணிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு அதிபர் ந.இரவீந்திரன் தலைமையில் சொந்தவிடத்தில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வரட்ணம் சந்திரராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைத்தார்.

வயாவிளான்-அச்சுவேலி பங்குத் தந்தை எம்.ஜெயக்குமார், அருட்தந்தை சிங்காராஜர்,தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மா.ஆனந்தகுமார், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,அயற்பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் அதிபர் ந.இரவீந்திரன் இதுதொடர்பில் அன்றைய நாள் விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,

வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை வரலாற்றில் இந்த நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்னாளாகும்.

கடந்த- 1988 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இந்தப் பாடசாலையின் கட்டடங்கள் அழிவுற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் பல வருடங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்தப் பாடசாலை கடந்த இரண்டு வருடங்களாக பலவித கஸ்டங்களின் மத்தியில் இந்தப் பாடசாலை வயாவிளான் மத்திய கல்லூரியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

இந்தப் பாடசாலைக்கென புதிய இரண்டு மாடிக் கட்டடத்தை அமைப்பதற்காக பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

பின் எமது பாடசாலையானது 2020ஆம் ஆண்டு கௌரவ வடக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ் அவர்களினால் உத்தியோக பூர்வமாக சொந்த இடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது எமது பாடசாலையில் கல்வி செயற்பாடுகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எம் பாடசாலையின்  செய்திகள் மற்றும் தகவல்களை ஆதரமாக சேமித்து வைப்பதற்காக எமது பாடசாலையின் உத்தியோகப்பூர்வமான இணையத்தள  உர...
29/08/2020

எம் பாடசாலையின் செய்திகள் மற்றும் தகவல்களை ஆதரமாக சேமித்து வைப்பதற்காக எமது பாடசாலையின் உத்தியோகப்பூர்வமான இணையத்தள உருவாக்கம்.

வசாவிளான் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவியும் தற்போது சுவீஸ் நாட்டில் வசிக்கும் திருமதி தியாகராஐா ஜெயலஷ்மி அவர்கள் பாடசா...
25/08/2020

வசாவிளான் றோ.க.த.க பாடசாலையின் பழைய மாணவியும் தற்போது சுவீஸ் நாட்டில் வசிக்கும் திருமதி தியாகராஐா ஜெயலஷ்மி அவர்கள் பாடசாலையின் பௌதிக வளத் தேவையை நிறைவு செய்வதற்காக ரூபா 40,000.00(Lkr) இனை வழங்கியிருந்தார். அந்நிதியிலிருந்து அலுவலகத்திற்கான ஒரு பெரிய அலுமாரியும் வகுப்பறைகளுக்கான நான்கு சிறிய அலுமாரிகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.இவரது பரந்த மனப்பான்மையுடைய சேவைக்கு பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து நிற்கின்றது.

29/07/2020

மூன்று தசாப்தங்களாக அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்ட எமது பாடசாலையானது தற்போது மீண்டும் சொந்த இடத்தில் கால்பதித்துள்ளது. அந்தவகையில் தற்போது அதிபராக வீற்றிருப்பவரின் சிறிய உரை கீழே காணொலியில் இணைக்கப்பட்டுள்ளது.

எம் பாடசாலையின் பழமையறிய பல நல் தகவல்கள் தந்துதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெ...
28/07/2020

எம் பாடசாலையின் பழமையறிய பல நல் தகவல்கள் தந்துதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம்.

தற்போது எம் பாடசாலையில்  காணப்படும் பௌதிக வளங்கள்
27/07/2020

தற்போது எம் பாடசாலையில் காணப்படும் பௌதிக வளங்கள்

வலிவடக்கின் கீழ் குடியேற்றத்திட்டத்தினூடாக வலிவடக்கில் உள்ள பாடசாலைகள் மீள திறக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கமைய  20...
27/07/2020

வலிவடக்கின் கீழ் குடியேற்றத்திட்டத்தினூடாக வலிவடக்கில் உள்ள பாடசாலைகள் மீள திறக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கமைய 20.02.2017 இலிருந்து தற்போது வரை எமது பாடசாலையின் அதிபராக திரு.ந.இரவீந்திரன் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.

மூன்று தசாப்தங்களாக இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக மக்களிடம் கையளிக்கப்பட்ட  வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கல...
21/07/2020

மூன்று தசாப்தங்களாக இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக மக்களிடம் கையளிக்கப்பட்ட வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது கௌரவ வடக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Address

Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94771772624

Alerts

Be the first to know and let us send you an email when Vayavilan RCTM School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vayavilan RCTM School:

Shortcuts

Share

Category