கருடா Garuda ගරුඩා

கருடா Garuda ගරුඩා This page is created with the aim of sharing information about birds.

13/01/2022

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
உழவர் திருநாளாம் தைத்திருநாளை உழவர்களுக்கு நன்மை செய்யும் பட்சிகளுடன் கொண்டாடுவோம்!
(படத்தில்) பனங்காடை; (இடம்: நாகர்கோவில், யாழ்ப்பாணம்): பனங்காடை விவசாய நிலங்களில் முதன்மையாக வாழும் பூச்சிகளை உண்ணும் பறவையாகும்.
பயிர்களிற்கு பாதிப்பை உண்டுபண்ணும் பூச்சி பீடைகளை அழிக்கும் பட்சிகள் உழவர்களின் நண்பர்களே!
- கஜவதனி

16/11/2021

பறவைகளுக்கு ஊருக்கு ஊர் தமிழ்ப்பெயர்கள் வேறுபடுகின்றன. இலங்கைக்குள்ளேயே யாழ்ப்பாணத்தில் ஒரு பெயர், மடடக்களப்பில் இன்னொரு பெயர், மலையகத்தில் வேறொரு பெயர் என வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கும் வழக்கம் உண்டு. இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கக்கூடும். நம் வீட்டுத்தோட்டங்களில் அன்றாடம் நாம் காணும் புலுனியை சிலம்பன் எனவும் தமிழில் அழைப்போம். இவற்றை ஆங்கிலத்தில் Babblers என அழைத்தாலும் "seven sisters" என்ற பிரபலமான ஒரு பெயரும் இவற்றுக்கு உண்டு. பொதுவாக இவற்றை கூடடமாக ஆறு ஏழு பறவைகளாகவே அவதானிக்கலாம். இதனாலே தான் இவற்றை "seven sisters" என அழைப்பார்கள். புலுனியை சிங்களத்தில் "தெமலிச்சா" என அழைப்பார்கள். அதாவது தமிழச்சி என்றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில் இப்பறவை எப்போதும் கலகலவென இருப்பதால் தமிழர்களை போல் நன்றாக கதைக்கும் பறவை என "தெமலிச்சா" என பெயரிட்டதாக கேள்விப்பட்டேன். இவ்வாறு புலுனியை உங்கள் ஊரில் என்னென்ன பெயர்களில் அழைப்பார்கள்? அதற்கு விசேட காரணம் ஏதும் உண்டா? என உங்கள் ஊர் வழக்கத்தை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இலங்கை இந்தியா மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் வாழும் எந்த இடமாகிலும் உங்கள் ஊரின் பெயரையும் அங்கு புலுனியை என்ன பெயர் கொண்டு அழைப்பர் எனவும் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் பகிரும் தகவல்கள் நாம் பறவைகளின் பிரதேசவாரியான தமிழ்ப்பெயர்களை இணைத்து நூலாக்க உதவும். உங்கள் தகவலுக்கு முற்கூட்டிய நன்றிகள்..

15/11/2021

இந்தியாவில் தமிழகத்தில் இயங்கும் "காக்கைக்கூடு" சுற்றுச்சூழல் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்படட எனது உரை தொடர்பாக தினகரன் நாளிதழில் வெளியான கட்டுரை..

We shall begin new year 2021 with bird watching! Happy birding for bird lovers in 2021..
31/12/2020

We shall begin new year 2021 with bird watching! Happy birding for bird lovers in 2021..

Greater coucal (Centropus sinensis) has a black bill with chestnut wings. Both male and female are similar in external f...
19/06/2020

Greater coucal (Centropus sinensis) has a black bill with chestnut wings. Both male and female are similar in external features. Common breeding residents in Sri Lanka. Distributed in Sri Lanka, India, Philippines and south Asian countries. Ground feeders feed on insects, small vertebrates including other birds' eggs and nestlings. Have a booming call with repeating coop-coop-coop with variations. Hear their call in this audio recording. Human population and development increasing day by day and these development activities fragment forest area by dividing into separate parts. These actions cause bird-vehicle collisions and threaten their population. As Greater Coucals are ground feeders, they eat insects on roads and smashed to the heavy vehicles during short flights. Awareness is important for conserving them.

பெரிய செண்பகம் Greater Coucal (Centropus sinensis) கறுப்பு நிற அலகுகளையும் செங்கபில நிற சிறகுகளையும் கொண்ட இப்பறவைகளை உங்கள் வீட்டு....

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when கருடா Garuda ගරුඩා posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to கருடா Garuda ගරුඩා:

Shortcuts

Share