10/05/2026
இன்றைய தினம் எமது நல்லாயன் சிற்றாலயத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் சிரமதானப் பணிஇடம் பெற்றது.
இதனை சிறப்பான வகையில் ஒழுங்குபடுத்திய நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
🙏👏👏🙏
's_Union
's_Union
05/04/2026
#அல்லேலூயா!
நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.
அல்லேலூயா!
(கொரி 5: 7-8)
உங்கள் அனைவருக்கும் இனிய ஈஸ்டர்தின நல்வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
29/03/2026
ஓசன்னா ஓசன்னா
உன்னதத்தில் ஓசன்னா...
குத்தோலை ஞாயிறு திருப்பலியானது எமது நல்லாயன் சிற்றாலயத்தில்; இல்லத்தின் ஆன்மீக இயக்குனர் அருட் திரு. மைக்டொனால்ட் தலமையில் இடம்பெற்றது.
இதில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆலய மக்கள் கலந்து கொண்டனர்.
.
.
'sunion.
.
27/03/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தெரிவினை பல்கலைக்கழக மாணவநலன்புரிச் சேவைகளின் கீழ் மீள் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
08/03/2026
நிர்வாக பொதுக் கூட்டம்
08/03/2026.
இன்று ஞாயிறு திருப்பலியினைத் தொடர்ந்து எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக பொதுக்கூட்டமானது எமது ஆன்மீக இயக்குனர் அருட் திரு. மைக் டொனால்ட் தலமையில் இடம் பெற்றது இதில் மாணவர்கள், அருட் சகோதரிகள், ஆலய மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இவற்றின் சில பதிவுகள்.
👇👇👇👇👇👇
'sUnion
05/03/2026
சிறப்பானவாறு திருகோணமலை சுற்றுலா பயணத்தினை ஏற்பாடு செய்த அருட்தந்தையர்கள்:
அருட் திரு. ஜெயறஞ்சன்
அருட் திரு. குயின்சன்
அருட் திரு. ஞான ரூபன்
அனைவருக்கும்;
எம்முடன் இணைந்து கொண்ட பல்கலைக்கழக கல்வியினை சிறப்பாக நிறைவு செய்த அக்கா அண்ணா மார்களுக்கும்;
இவ் சுற்றுலாவில் பங்கு கொண்ட உங்கள் அனைவருக்கும்;
எல்லாவற்றிற்கும் மேலாக இவ் சுற்றுலாவினை திறம்படவும் நேர்த்தியாகவும் ஒழுங்கு படுத்திய எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நல்லாயன் சிற்றாலயத்தின் ஆன்மீக இயக்குனர் அருட் திரு. மைக்டொனால்ட் அவர்கட்களுக்கும்;
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தின் சார்பாக எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் நிகழ்வு தொடர்பான சில பதிவுகள்.
👇👇👇
#கத்தோலிக்க மாணவர் ஒன்றியம்
#யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.