20/09/2026
Have been மற்றும் Had been வேறுபாடு என்ன?
நீங்கள் உங்கள் நண்பர் ஒருவரின் வருகைக்காக விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் நண்பர் வந்தடைந்த உடன் உங்களிடம் கேட்கிறார்:
How long have you been waiting?
எவ்வளவு நேரமாக நீ காத்துக்கொண்டிருக்கின்றாய்?
I have been waiting for two hours.
நான் இரண்டு மணித்தியாளங்களாக. காத்துக்கொண்டிருக்கின்றேன்
இதனையே அவர் சந்தித்து சில மணித்தியாளங்களின் பின் அல்லது சில நாட்களின் பின் கேட்கிறார் என்றால்; எப்படி கேட்பார்? பதில் கீழே:
How long had you been waiting?
எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருந்தாய்?
அப்பொழுது நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
I had been waiting for two hours.
நான் இரண்டு மணித்தியாளங்களாக. காத்துக்கொண்டிருந்தேன்
அதாவது அவர் வருகைத்தந்த நாளன்று; அவர் வந்தடையும் இரண்டு மணித்தியாளங்களுக்கு முன்பே நீங்கள் விமான நிலையத்திற்கு சென்று அவர் வருவரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்தீர்கள்? இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருந்தீர்கள்.
எதுவரை காத்துக்கொண்டிருந்தீர்கள்?
அவர் வந்தடையும் வரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எனவே இந்த “இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்” வாக்கியம் இறந்தக்காலத்தில் தொடங்கி (இரண்டு மணித்தியாளங்களாக தொடர்ந்து) இன்னுமொரு இறந்தக்காலத்திலேயே நிறைவும் பெற்றுவிடுகிறது. இவ்வாறான வாக்கிய அமைப்புகளையே "இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்" வாக்கியங்கள் எனப்படுகின்றன. இப்பொழுது விளங்குகின்றதா இவ்வாக்கிய அமைப்புகளின் பயன்பாடுகள்?
மேலும் சில வாக்கியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள்.
பயிற்சி
---------------------------------------------------------
1. I had been waiting there for more than 45 minutes.
நான் அங்கே 45 நிமிடங்களுக்கும் அதிகமாக. காத்துக்கொண்டிருந்தேன்
2. I had been working for over an hour.
நான் ஒரு மணித்தியாளத்திற்கு மேலாக. வேலை செய்துக்கொண்டிருந்தேன்
3. I had been standing all day in the school.
நான் பாடசாலையில் முழு நாளும் நின்றுக்கொண்டிருந்தேன் .
4. I had been teaching at that university for three years
நான்அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன் .
5. I had been doing the work.
நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் .
6. I had been studying English for five years
நான் ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன் .
7. I had been living there since 1997.
நான் அங்கே 1997 இல் இருந்து வசித்துக்கொண்டிருந்தேன்.
8. I had been talking with Mr. Obama for over half an hour
நான் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக பேசிக்கொண்டிருந்தேன் .
9. I had been driving for 10 years in Japan
நான் ஜப்பானில்10 ஆண்டுகள் (வாகனம்) ஓட்டிக்கொண்டிருந்தேன்
10. I had been waiting in the Hong Kong airport for two hours
நான் ஹொங்கொங் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக.காத்துக்கொண்டிருந்தேன்'
S.ஷாம்சன்
076 812 2624