J/Nainativu Maha Vidyalayam

J/Nainativu Maha Vidyalayam கல்விப் பணியே கடவுட்பணி ..

மாறிவரும் சவால்களுக்கு முகம் கொடுத்து தான் வாழும் சமூகத்துக்கும் நாட்டிற்கும் பயன்படத்தக்கதான கௌரவமான எண்ணங்களைக் கொண்ட ஜனநாயக ரீதியில் சிந்தித்து தீர்மானம் எடுக்கத்தக்க மனித விழுமியங்களைப் பேணி நெறிப்படுத்தக்கூடிய ஆக்கத்திறனும் வகைகூறும் திறனும் பொறுப்பும் உடையவராக சமூகத்தில் கௌரவமான இடத்தைப் பெறக்கூடியவராக மாணவர்களை உருவாக்குதல்.

இன்றைய தினம் (22/07/20206) வலயக் கல்வி அலுவலகத்தின்  அதிகாரிகள் எமது பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலைச் செயற்பாடுகள் தொடர...
23/07/2026

இன்றைய தினம் (22/07/20206) வலயக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள் எமது பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலைச் செயற்பாடுகள் தொடர்பாகப் பாராட்டியதோடு தரம் 10,11 மாணவர்களுக்கான வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தனர். அத்தோடு எதிர் காலத்தில் நடைமுறைப் படுத்த வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கிச் சென்றனர்.

நன்றி நவில்கின்றோம் 🙏🙏🙏அமரர் செல்லையா சந்திரசேகரம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (13.07.202...
13/07/2026

நன்றி நவில்கின்றோம் 🙏🙏🙏

அமரர் செல்லையா சந்திரசேகரம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (13.07.2026) மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டமையையிட்டு அன்னாரது குடும்பத்தினருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல நாகம்மாளைப் பாடசாலைச் சமூகம் சார்பாக வேண்டுகிறோம்.

💧 நயினாதீவின் எதிர்கால நன்னீர் வளம்இன்றைய தினம் 09-07-2026(வியாழக்கிழமை)நயினாதீவின் எதிர்கால நன்னீர் வளத்தைப் பாதுகாப்பத...
10/07/2026

💧 நயினாதீவின் எதிர்கால நன்னீர் வளம்
இன்றைய தினம் 09-07-2026(வியாழக்கிழமை)
நயினாதீவின் எதிர்கால நன்னீர் வளத்தைப் பாதுகாப்பதற்கான முக்கிய முயற்சியாக, பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நீர்வளத்துறை மாணவர்கள் இணைந்து இரண்டாவது முறையாக ஆராய்ச்சி மற்றும் மக்களுடன் இணைந்த களச் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
🌿 நிகழ்வின் சிறப்பம்சங்கள்
💧 நயினாதீவின் நன்னீர் வளம் தொடர்பான கள ஆய்வு
🌍 எல் நினோ (El Niño) மற்றும் காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வுக் கலந்துரையாடல் எமது பாடசாலையில் நடைபெற்றது.

(நமது தீவின் எதிர்கால நன்னீர் வளத்தைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும். )

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர் திரு நமசிவாயம் வித்தியானந்தன் அவர்களுக்கு எமது பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றி பாராட்டுகின்றோம் 🙏

பாராட்டி வாழ்த்துகிறோம்  🙏🙏🙏மானிப்பாய் நகர அரிமாக் கழகத்தால் இன்றைய தினம் எமது பாடசாலைக்குத் தேவையான கற்பித்தல் உபகரணங்க...
07/07/2026

பாராட்டி வாழ்த்துகிறோம் 🙏🙏🙏
மானிப்பாய் நகர அரிமாக் கழகத்தால் இன்றைய தினம் எமது பாடசாலைக்குத் தேவையான கற்பித்தல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதற்காக உழைத்த எமது அயற் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றி பாராட்டுகின்றோம் 🙏🙏👏💫

07/07/2026

🌟✨💫🥇பாராட்டி வாழ்த்துகிறோம் 👏👏👏💫💫💫

அண்மையில் நடைபெற்ற வலய மட்ட கணித வினாடி வினாப் போட்டியில் பங்குபற்றிய எமது பாடசாலை மாணவன் செல்வன் இர.நிதர்சன் இரண்டாம் இடம் பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளார். இவரைப் பயிற்றுவித்த கணித பாட ஆசிரியர் திரு சர்வதனரூபன் அவர்களையும் வெற்றி பெற்ற மாணவனையும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம் 👏👏👏

பாராட்டி வாழ்த்துகின்றோம் 👏 👏 👏 மனைப்பொருளியல் பாடம் சார்பாக நடா த்தப்படும் வலய மட்ட படைப்பாற்றல் திறன் போட்டியில் பங்கு...
26/06/2026

பாராட்டி வாழ்த்துகின்றோம் 👏 👏 👏

மனைப்பொருளியல் பாடம் சார்பாக நடா த்தப்படும் வலய மட்ட படைப்பாற்றல் திறன் போட்டியில் பங்குபற்றிய எமது பாடசாலையைச் சேர்ந்த தரம் 10 மாணவிகள்
செல்வி கு. கருண்ஜா
செல்வி ப. ரெஸ்மியா
செல்வி. சு. நிரோபிகா ஆகியோர் நான்காம் இடம் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த மனைப் பொருளியல் பாட ஆசிரியை திருமதி க.சோபிதா அவர்களையும் பாடசாலைச் சமூகம் சார்பாகப் பாராட்டி வாழ்த்துகிறோம்.

பாராட்டி வாழ்த்துகின்றோம் 💫 ✨ 🌾 🌟 🌟 🌟 💫🏆🥇வலயமட்ட மனைப் பொருளியல்  ஆராய்ச்சித் திட்டப் போட்டியில் எமது பாடசாலை மாணவி செல்...
26/06/2026

பாராட்டி வாழ்த்துகின்றோம் 💫 ✨ 🌾 🌟 🌟 🌟 💫🏆🥇
வலயமட்ட மனைப் பொருளியல் ஆராய்ச்சித் திட்டப் போட்டியில் எமது பாடசாலை மாணவி செல்வி க.ஜிதுசா முதலாம் இடம் பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளார். மாணவியையும் பயிற்சி அளித்த மனைப் பொருளியல் பாட ஆசிரியை திருமதி க.சோபிதா அவர்களையும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம். 👏 👏 👏

26/06/2026
நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அனைத்துப் பழைய மாணவர்களையும் அழைத்து நிற்கின்றோம் 🙏🤜🤛🤝
23/06/2026

நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அனைத்துப் பழைய மாணவர்களையும் அழைத்து நிற்கின்றோம் 🙏🤜🤛🤝

நன்றி பாராட்டுகின்றோம். 🙏🙏🙏👏👏👍இன்றைய தினம் (22/06/2026) எமது பாடசாலைக்கு வருகை தந்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெ...
23/06/2026

நன்றி பாராட்டுகின்றோம். 🙏🙏🙏👏👏👍
இன்றைய தினம் (22/06/2026) எமது பாடசாலைக்கு வருகை தந்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், தீவகம் தெற்கு) அவர்கள் எமது பாடசாலை மாணவர்கள் எதிர் கொள்ளும் கற்றல் மற்றும் இணைபாடச் செயற்பாடுகள் தொடர்பான இடர்பாடுகள் தொடர்பாகவும் எமது பாடசாலையில் காணப்படும் பௌதீக வளப் குறைபாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடியதோடு இவற்றை நிவர்த்தி செய்ய தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவதாக வாக்குறுதியும் அளித்துள்ளார்.

எமது பாடசாலைக்கு வருகை தந்தமைக்கும் எமக்கு பாடசாலை வளர்ச்சிக்கு உதவ முன்வந்தமைக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றி பாராட்டுகின்றோம் 🙏.

Address

Ward No-5, Nainativu
Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94213207588

Website

Alerts

Be the first to know and let us send you an email when J/Nainativu Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category