கலைப்பீடம் 42ம் அணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கலைப்பீடம் 42ம் அணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Share

தடமும் மாறாது!!! வரலாறும் சாயாது !!!

25/02/2025

கலைப்பீடம்
42 ஆம் அணி✨️🔥💥

18/08/2024

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தேர்தல்- 2024

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட
ம. சோமபாலன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளராக தெரிவு செய்யப்பட்ட ச.மிதுர்சன் அவர்களுக்கு எமது 42 வது அணி சார்பான வாழ்த்துக்கள்.💐

23/11/2023

தமிழ் மக்களின் கூட்டுணர்வைiயும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் மாவீரர் தினம் - நவம்பர் 27 ❤️💛

எங்கள் தேசத்தின் வித்துக்களை நினைவேந்துவதில் பொதுமக்கள் தங்கள் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் நினைவேந்தலுக்கான பங்களிப்பினை வழங்குவதனூடாக வெளிப்படுத்த முடியும்.

நினைவேந்தலுக்கான கற்பூரம், எண்ணெய், சுட்டி, திரி என்பவற்றை நாளைய தினம் தொடங்கி , நவம்பர் 27 ஆம் திகதி வரை தினமும் பல்கலை நுழைவாயில் - சேகரிப்புக் கூடத்தில் வழங்குவதனூடாக கரம் கோர்க்க முடியும்.

மானிட விடுதலைக்கு உயிர் தந்தார் யாரோ அவர் இனம், மதம், மொழி கடந்து நேற்றுப் போல் இன்றும் நாளையும் என்றென்றும் எதிலும் உயிர் வாழ்வர்!

• யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பல்கலைச் சமூகமும்

28/09/2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் சென் ஜேம்ஸ் IMTL 80 kids பழைய மாணவர்களும் இனைந்து நடாத்தும்
#தொழில்_வழிகாட்டலும்_திறன்_விருத்தியும்_கருத்தரங்கு

உங்களின் சகோதர சகோதரிகளுக்கு தெரியப்படுத்தி அவர்களை பயனடையச் செய்யுங்கள்.



#கலைப்பீடம்

26/09/2023

இதுவரை காலமும் பல்கலைக்கழக சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் அளப்பெரும் பங்காற்றிய 2022 -2023 கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு எமது 42வது அணி சார்பாக நன்றிகள்.

கடினமான சூழ்நிலைகளில் பொறுப்புக்களை ஏற்று சிறந்த முறையில் மாணவர்களை வழி நடாத்தி, மாணவர்களின் பிரச்சினைகளையும், பல்கலைக்கழகத்தின் பிரச்சினைகளையும், தமிழ் சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தும். மாணவர்களுக்கு பல சேவைகள் வழங்கிய கலைப்பீடமாணவர் ஒன்றியத்திற்கு நன்றிகள்.🙏🫂

Photos from கலைப்பீடம் 42ம் அணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்'s post 20/09/2023

எமக்காய் தன்னுயிர் தந்தவனின் நினைவேந்தி ஒரு துளி – 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்திய குருதிக்கொடை நிகழ்வு இன்று 19.09.2023 (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக மாணவர் கட்டத் தொகுதியில் நடைபெற்றது.

இதன்போது வெகுவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி தியாக தீபம் திலீபனை நினைவில் நிறுத்தினர்.

#கலைப்பீடம்
#42ம்அணி
#யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்

15/09/2023

மருத்துவத்துறை மாண்புமிகு மாணவனும், தமிழர் தேசத்திற்காய் உண்ணாநோன்பிருந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் தந்த தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல்!!! ❤️💛

உண்ணாவிரத 1ஆம் நாள் தொடக்க நினைவேந்தல் 15.09.2023 (வெள்ளிக்கிழமை),

📍மருத்துவ பீட வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான் !!!

- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

20/08/2023

தூவானம் 100ஆவது திரையிடலும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும்தூவானம் 100ஆவது திரையிடலும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும் இன்று 20ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

#கலைப்பீடம்

03/07/2023

எங்கள் 42ம் அணியின் அடையாளம் ! வீர மகள் சானுஜா. வாழ்த்துக்கள் !!!!

ஒரு வீரத்தாயின் வீர மகள் சானுயா
*********************************************
அது 2006 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். ஒன்றரை வயது குழந்தையை அப்பம்மாவுடன் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு முகமாலை முன்னரங்க யுத்த களமுனை நோக்கி செல்கின்றாள் தவராசா தயானி. தனது பச்சிளம் குழந்தையை விட பெற்ற தாய் நாட்டின் மீதான அதீத பாசமே தயானியின் இந்த முடிவுக்கு ஒரேயொரு காரணம்.

தான் ஒரு பாலூட்டும் தாய் என்னால் களமுனைக்கு செல்ல முடியாது என தயானி அன்று அதனை தவிர்த்திருக்கலாம், ஆனால் அவள் அதனை அன்று விரும்பவில்லை தன் குடும்பத்தை விட தாய் மண்ணின் விடுதலை அவளுக்கு பெரிதாக இருந்தது என அவளது சகோதரி சொல்கின்றார்.

புறநானூரை விஞ்சிய வீரப் பெண்ணாக முகமாலை நோக்கி சென்றவள் இரண்டாம் நாள் கப்டன் தென்னரசியாக தோழிகளால் கிளிநொச்சியில் உள்ள அவளது இல்லத்திற்கு வித்துடலாக சுமந்துவரப்பட்டாள். இவளது கணவன் ஒரு முன்னாள் போராளி அவரும் இப்போது உயிரோடு இல்லை ஆனால் என்ன நடந்தது என்பதனை அறிவதற்கும் முடியவில்லைல. இருப்பினும் ஒன்று மட்மே தெளிவாக புரிகிறது நாட்டுக்காக குடும்பமாக தங்களை தியாகம் செய்திருக்கின்றார்கள் என்பது.

இரணைமடுவில் உள்ள தயானியின் இல்லத்தில் இறுதி வீரவணக்க நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால் அந்த ஒன்றரை வயது குழந்தைக்கு நடப்பது எதுமே தெரியாது. காலங்கள் கடந்து செல்கிறது கடும் யுத்தம் இடப்பெயர்வு என தொடரும் அவலத்திற்குள் அப்பம்மாவும் இறந்துவிடுகிறார். யாரும் அற்ற அந்த குழந்தை இப்போது தயானியின் அக்காவுடன் அதாவது குழந்தையின் பெரியம்மாவுடன். மீள்குடியேறும் போது குழந்தை மாமாவின் பதிவில் பரந்தனில்குடியேறுகிறது.

பின்னர் இந்த குழந்தை 24.01.2010 இல் தனுது ஆறு வயதில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் ஆதாவது குருகுலத்தில் தவராசா சானுயாவாக செல்கிறாள். இந்த சானுயாவே கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இந்தியாவின் தலைநகர் புதுடெல்யில் நடைப்பெற்ற இந்திய பகிரங்க சர்வதேச கராத்தே சம்பியன்சிப் போட்டியில் இலங்கை தேசிய அணியின் சார்பில் பங்குபற்றி வெங்கல பதக்கம் பெற்று நாடு திரும்பினார்.

ஒரு யுகத்தின் ஒரு வீரத்தாயினதும், தந்தையினதும் மகளாக அவர்களது முகம் அறிய சானுயா இன்று விளையாட்டில் வீர மகளாக வலம் வருகிறாள். கற்பைனயில் எண்ணிப்பார்க்க முடியாத தியாகங்களும், வீரங்களும், நிறைந்த ஒரு சமூகத்தில் பிறந்த புதல்வியாகவே சானுயா இருக்கின்றாள்.
சிறுவர் இல்லத்தில் இணைக்கப்பட்ட காலத்தில் இருந்தே கராத்தே கலையினை பயின்று வந்து சானுயா தனது ஏழாவது வயதில் இலங்கை கராத்தே சம்மேளனத்தால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கரோத்தே போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றி பதகத்தை வென்றதோடு, தொடர்ந்து 14 வயதிலும் தேசிய ரீதியல் நடாத்தபட்ட கராத்தே போட்டியில் பங்குபற்றி பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

ஒன்பது வருடங்களின் பின் கடந்த வருடம் விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ரீதியாக நடாத்தப்பட்ட போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி சார்பாக பங்கு பற்றி பதக்கம் வென்றதன் மூலம் இலங்கை தேசிய கராத்தே அணிக்கு தெரிவு செய்யப்பட்டாள் சானுயா. இந்தப் போட்டியில் வடக்கு மாகாணம் ஏழு பதக்கங்களை வென்றது. இதில் கிளிநொச்சி மாவட்டம் இந்துக் கல்லூரி 4 பதக்கங்களை பெற்றது இந்த நான்கு பதக்கங்களும் மகாதேவா சிறுவர் இல்லத்தின் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சானுயாவுக்கு ஆரம்பம் முதல் இன்று வரை கராத்தே பயிற்சியை சிறுவர் இல்லத்தில் வழங்கி வருகின்றவர் சின்னத்துரை விஜயராஜ் இவர் கராத்தே ஏழாவது கறுப்பு பட்டி, மற்றும் ஏ தர கராத்தே நடுவராகவும், வடக்கின் சிறந்த பயிற்றுவிப்பாளராகவும் காணப்படுகின்றார். இவர் மூலம் கிடைத்த தொடர்ச்சியாக பயிற்சி, இல்ல நிர்வாகம்த்தின் ஒத்துழைப்பு என்பன சானுயாவை சர்வதேச போட்டி ஒன்றில் வெற்றிப்பெற வைத்துள்ளது.

புதுடெல்லியில் நடைப்பெற்ற போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை,பங்களாதேஸ், நோபாளம், யப்பான், ஓமான், பூட்டான்,மலேசியா, குவைட், உஸ்பெகிஸ்தான் என12 நாடுகள் பங்குபற்றியிருந்தன. இதில் இலங்கை 5 வெள்ளி மற்றும் 11 வெங்கல பதக்கங்கள் என 16 பதக்கங்களை வென்றது. இதில் ஒன்று சானுயாவினுடையது.

யுத்தம் நெருக்கடி என எதுவும் இன்றி உலகின் வல்லரசு நாடுகளாகவும், பொருளாதார பலம் பொருந்திய நாடுகாளவும் இருக்கின்ற நாடுகளின் வீராங்கனைகளுடன் யுத்தத்திற்குள் பிறந்து எல்லா வகையான நெருக்கடிகளையும் சுமந்து சிறுவர் இல்லத்தில் உள்ள சானுயா போட்டியிட்டு வெங்கல பதக்கம் வென்றிருப்பது ஏனையவர்கள் பெற்ற தங்கப் பதக்கத்தை விட மிகப்பெரியது என்றே கூற வேண்டும்.
சாதிப்பதற்கு நம்பிக்கையும், முயற்சியும், ஒத்துழைப்பும் இருந்தால் போதும் எந்த தடைகளையும் தாண்டிவிடலாம் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாணரம். அன்று இந்த மண் சானுயாவின் அம்மாவால் பெருமைப்பட்டது. இன்று உன்னால் பெருமைப்படுகிறது. ஒரு வீரத்தாயின் வீர மகள் என்பதனை நீ நிரூபித்திருகிறாய். ஆனாலும் நீ இன்னும் முன்னோக்கிச் செல்ல நிறைய படிகள் உண்டு.

நன்றி :- சஞ்சீவி ( உதயன் )

Photos from கலைப்பீடம் 42ம் அணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்'s post 06/06/2023

தியாகி சிவகுமாரன் நினைவு தினம் தமிழர் தேசத்தின் மாணவர் எழுச்சி நாள்!

மாணவர்களின் கடமை கற்பது மட்டுமல்ல போராடுவதும் தான்! என்பதை உணர்த்தித் தமிழர் தேசத்திற்காய் தன்னுயிர் தந்த முதற் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரன் நினைவுதினம் தமிழ்த் தேசிய மாணவர் எழுச்சி நாளாக நினைவேந்தப்படுகின்றது.

தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்புக்களிற்கு எதிராக ஒரு மாணவனாகப் போராடி, ஸ்ரீலங்கா படைகளின் சுற்றிவளைப்பின் போது தன்னுயிர் தந்த சிவகுமாரனின் நினைவுதினம் நேற்று - யூன் 5

சைனைட் வரலாறு ஆரம்பம் !!! தேசியப் போராடத்தின் முதல் வித்து 🙏

#கலைபீடம்
#42ம்அணி

Photos from கலைப்பீடம் 42ம் அணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்'s post 12/05/2023

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முதலாம் நாள் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக யாழ்பல்கலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது.

ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகி ஈகைச்சுடர் ஏற்றப்பட்டடு
நினைவேந்தலின்போது, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளும் நினைவேந்தலில் மலர் அஞ்சலி செலுத்தினர் .

இறுதியில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Jaffna