Sikaram

Sikaram

Share

Student Visa, Work Permit, Skilled Migration to UK, Australia, New Zealand, Switzerland, Canada, France, Germany, Italy, Latvia & Malaysia

தொழில்மையமான க.பொ.த. உயர்தரக் கலைத்துறைக் கல்வி, உள்நாட்டு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விசா ஏற்பாடுகளுடனான Hospitality Management கற்கை, சித்த-ஆயுர்வேத பாரம்பரியங்களை அடியொற்றிய ஆயுசு 100 பரிபூரண நலவாழ்வு யோகாசனம் NorthernHost வடக்கு மாகாண சுற்றுலா சேவைகள்

Photos from Sikaram's post 02/03/2026

கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சிகரம்!
+++++++++++++++++++++++++++++

கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி கிராமசேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட, கிராம அலுவலரால் தெரிவுசெய்யப்பட்ட தேவையுடைய 21 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மார்ச் 1ம் திகதி வெள்ளாம்போக்கட்டி பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

சிகரம் நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் நிறுவுநர் கோ.றுஷாங்கன், அந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட தமது பாட்டனார் முன்னாள் டிறிபேக் கல்லூரி தலைமை ஆசிரியர் காலஞ்சென்ற க.மயில்வாகனம், தமது தாயார் முன்னாள் சாவகச்சேரி மகளிர் கல்லூரி மற்றும் கனகரத்தினம் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியர் காலஞ்சென்ற அனுஷ்யாதேவி கோடீஸ்வரன், பெரிய தாயாரான முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி கணித ஆசிரியர் காலஞ்சென்ற சரஸ்வதிப்பிள்ளை ஞானசம்பந்தன் ஆகியோரின் நினைவாக இந்த உதவிகளை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

கிராமசேவையாளர் கந்தசாமி தர்மேந்திரா அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்வில், சமுர்த்தி உத்தியோகத்தர் சதீஸ் யாழினி, கிராம அபிவிருத்திச்சங்க பொருளாளர் பொன்னையா திருப்பதி, விவசாய சம்மேளன உபதலைவர் வல்லிபுரம் நவரத்தினம், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களான இளையதம்பி கனகரத்தினம், கந்தையா தபோநிதி மற்றும் இளைப்பாறிய ஆசிரியை கந்தசாமி சாந்தாயகி ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் வெள்ளாம்போக்கட்டி கிராமத்தின் அபிவிருத்தி, குறிப்பாக அந்தக் கிராம மாணவர்களின் கல்வி மேம்பாடு, ஒழுக்க விழுமியங்கள், எதிர்கால தொழில்வாய்ப்புக்கள், தொழில்மையமான கல்வி வாய்ப்புக்கள் என்பன தொடர்பாக சிகரம் நிறுவுநர் கோ.றுஷாங்கன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விளக்கபுரையாற்றினார்.

26/02/2026
18/02/2026

Sikaram SIKARAM MEDIA HOUSE இல் ஊடகப் பயிற்சி பெற்று,

பின்னர் SIKARAM ACADEMY School Of Hospitality யில் அடிப்படை விருந்தோம்பல் கற்கையிலும் அண்மைக் காலத்தில் ஈடுபட்ட மாணவி தர்ஷா,

உலகப் புகழ்பெற்ற Master Chef நிகழ்சிக்குத் தெரிவாகி, அதன் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாக தன் திறமைகளை பறைசாற்றும் அற்புதமான ஒரு பொழுது.

உங்களை வாழ்த்துவதில் நான் பெருமையடைகிறேன் தர்ஷா.

தொடர்ந்து முன்னேறுங்கள்!

10/02/2026

சிரிச்சாலே பணம் கொட்டும் தொழில்துறை!
+++++++++++++

கற்கைநெறிக் காலத்திலேயே கற்கைக் கட்டணத்தை சம்பாதிக்கும் ஏற்பாட்டுடனான,

SIKARAM ACADEMY School Of Hospitality யின் Tourism & Hospitality Management with ENGLISH for Communication கற்கைநெறி.

இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்...

சிரிப்பதுதான்.....

ஆம், முகங்களிலே புன்னகையை ஏற்படுத்திக்கொள்வது.

அதெப்படி, சிரித்தால் காசு வருமா என்ன...?

விபரமாக அறிய 5 நிமிடம் செலவிட்டு இதைப் பாருங்கள்.

சிரித்துக்கொண்டே பணம் சம்பாதிக்க விரும்பினால் அழையுங்கள்

0777 324 004

Want your school to be the top-listed School/college in Jaffna Town?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


221-1/1, Powerhouse Road(C Ponnampalam Road), Jaffna
Jaffna Town
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:00