Zahriyya Arabic College - Hemmathagama

Zahriyya Arabic College - Hemmathagama Zahriyya Arabic College-Olana, Hemmathagama ZAHRIYYA ARABIC COLLEGE
OLANA-HEMMATHAGAMA
OFFICIAL WHATSAPP NO.
+94740578402

எமது ஸஹ்ரிய்யா கலாபீடத்தில்  #69ஆம்  #விவாத_அரங்கு  #புகைப்படம் பிடிப்பது இஸ்லாத்தில் கூடுமா கூடாதா ? என்ற தலைப்பில்  20...
16/11/2025

எமது ஸஹ்ரிய்யா கலாபீடத்தில் #69ஆம் #விவாத_அரங்கு #புகைப்படம் பிடிப்பது இஸ்லாத்தில் கூடுமா கூடாதா ? என்ற தலைப்பில் 2025/10 / 30 ஆம் திகதி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கு கருத்துரை வழங்குவதற்காக தஸ்கர அல் ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளரும் பதுல்லை அல் இர்ஷாதிய்யா அரபுக்கல்லூரியின் உப அதிபருமான அஷ் ஷேஹ் #ரிஸ்வி (ஹில்ரி) ஹழரத் அவர்களின் வருகை மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

 #புனித_அல்_குர்ஆனை_மனனம்_செய்துள்ள_ஹாபிழ்களை_கௌரவிக்கும்_நிகழ்வு- 202513.11.2025 (22 ஜமாதுல் ஊலா 1446 ) வியாழக்கிழமை, ஸ...
15/11/2025

#புனித_அல்_குர்ஆனை_மனனம்_செய்துள்ள_ஹாபிழ்களை_கௌரவிக்கும்_நிகழ்வு- 2025

13.11.2025 (22 ஜமாதுல் ஊலா 1446 ) வியாழக்கிழமை, ஸஹ்ரிய்யா தாய் ஐந்து ஹாபிழ்களை ஈன்றெடுத்துள்ளமையையிட்டு விழாக்கோளம் பூண்டது...

ஹிப்ளுப் பிரிவு மாணவர்களான ஜௌபர் ஹபீஸ் (ஹெம்மாதகம), பஸ்லுல்லாஹ் (கம்பளை), அமீன் அஹ்ஸன் ( கல்முனை ) , சௌபர் அலி அப்துல்லாஹ் ( திப்பிடிய ) கிதாப் பிரிவு மாணவர் பைருஸ் ஹிமாஷ் ( மாவனல்லை) ஆகிய மாணவர்கள் அல்லாஹ்வின் அருளினால் அல் குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளனர்.

َن_أتمّ_حفظ_القرآن_الكريم - ٢٠٢٥م

احتفلت الأم الزهرية بإنجاب خمسة من حفظة القرآن الكريم يوم الخميس، ١٣ شهر نوفمبر ٢٠٢٥( ٢٢ جمادي الأولى ١٤٤٦م )

وهم من طلبة قسم تحفيظ القرآن: حفيز بن جعفر (هماتاجاما)، فضل الله (كمبالا)، محمد أحسن بن أمين ( كلمنا) عبد الله بن صوفر علي ( دبتيا ) وطالب من قسم الشريعة : حماش بن فيروز ( ماونلا ) الذين وفقهم الله بحفظ كتابه المنزل على رسوله الكريم صلّى الله عليه وسلّم

புதிய மாணவர் அனுமதி - 2026 இன்ஷா அல்லாஹ்!ஹெம்மாதகம ஸஹ்ரிய்யா அரபுக் கலாபீடம் 2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை ஹி...
20/10/2025

புதிய மாணவர் அனுமதி - 2026

இன்ஷா அல்லாஹ்!
ஹெம்மாதகம ஸஹ்ரிய்யா அரபுக் கலாபீடம் 2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை ஹிப்ழ் மற்றும் ஷரீஆப் பிரிவுகளுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளது.

எனவே நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழே வழங்கப்பட்டுள்ள Google Form ஊடாக உங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
👇👇👇👇👇👇👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdgFOAkAgQS5yfCGoMVwwLmUkyVRMttE4rTYaqQXbCALbf_pQ/viewform?usp=dialog

குறிப்பு:
தகுதியானவர்கள் பயன்பெற இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

பொன்விழாவை நோக்கியா பயணத்தில் " #தொழுகை_நேரத்தை_கணக்கிடும்முறை" என்ற தலைப்பில் மேல் வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு ந...
30/05/2025

பொன்விழாவை நோக்கியா பயணத்தில் " #தொழுகை_நேரத்தை_கணக்கிடும்முறை" என்ற தலைப்பில் மேல் வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.

எமது ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி பொன்விழாவை நோக்கிய பயணத்தின் திட்டமிடலுக்கு அமைவாக நேற்று மே 29 வியாழக்கிழமை "தொழுகை நேரத்தை கணக்கிடும் முறை" (معرفة استخراج أوقات الصلاة) என்ற தொனிப் பொருளின் கீழ் அல்லாஹ்வின் உதவியுடன் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கினை அஷ்-ஷைக் ரூமி ஷிஹாப்தீன் (யூசுபி) ஹஸ்ரத் அவர்களினால் நடாத்தப்பட்டது.

குறித்த கருத்தரங்கில் மாவனெல்ல "ஷரபிய்யா" அரபுக் கல்லூரி, கன்னந்தோட்டை "நூரிய்யா" அரபுக் கல்லூரி மற்றும் கம்பளை "மிஸ்பாஹிய்யா" அரபுக் கல்லூரி மாணவர்களும், உஸ்தாத்மார்களும் கலந்து சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

" "

بحمد الله وتوفيقه، وضمن سلسلة فعاليات الكلية العربية الزهرية تمهيدًا للاحتفال باليوبيل الذهبي، أقيمت يوم الخميس الموافق 29 مايو ندوة علمية قيّمة بعنوان: "معرفة استخراج أوقات الصلاة"

وقد أدار الندوة وأثراها علمًا وفائدة، فضيلة الشيخ رومي شهاب الدين (اليوسفي) حفظه الله.

ومن الجدير بالذكر أن هذه الندوة شهدت مشاركة طلاب وأساتذة من عدد من الكليات العربية الشقيقة:
- الكلية الشَرَفيَّة – ماوانالا
- الكلية النُورِيَّة – كَانانتوتا
- الكلية المِصْبَاحِيَّة – كَامبولا

سائلين الله تعالى أن يجعل هذه الخطوات العلمية في ميزان الحسنات، وأن يُبارك في جهود الجميع.

**



 #புனித_அல்_குர்ஆனை_மனனம்_செய்துள்ள_ஹாபிழ்களை_கௌரவிக்கும்_நிகழ்வு- 202501.05.2025 (2 துல்-கஃதா 1446) வியாழக்கிழமை, ஸஹ்ரி...
25/05/2025

#புனித_அல்_குர்ஆனை_மனனம்_செய்துள்ள_ஹாபிழ்களை_கௌரவிக்கும்_நிகழ்வு- 2025

01.05.2025 (2 துல்-கஃதா 1446) வியாழக்கிழமை, ஸஹ்ரிய்யா தாய் மூன்று ஹாபிழ்களை ஈன்றெடுத்துள்ளமையையிட்டு விழாக்கோளம் பூண்டது...

ஹிப்ளுப் பிரிவு மாணவர்களான அமானுல்லாஹ் யூசுப் அஹ்மத் (ஹெம்மாதகம), தாரிக் முஹம்மது சம்ஹித் (ஏறாவூர்), நிfபாம் முஹம்மது நுமைர் (உயன்வத்த) , என்பவரே புனித அல் குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளனர்.

َن_أتمّ_حفظ_القرآن_الكريم - ٢٠٢٥م

احتفلت الأم الزهرية بإنجاب ثلاثة من حفظة القرآن الكريم يوم الخميس، ١ شهر مايو ٢٠٢٥(٢ شهر ذي القعدة ١٤٤٦م)

وهم من طلبة قسم تحفيظ القرآن: يوسف أحمد بن أمان الله (هماتاجاما)، سمهد بن محمد طارق (ايراوور)، محمد نُمير بن نِفام (أيانواتّا) الذين وفقهم الله بحفظ كتابه المنزل على رسوله صلى الله عليه وسلم

 #ஸஹ்ரிய்யா_கண்ட_மற்றுமொரு_அடைவு.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக 17 ஆவது பட்டமளிப்பு விழா கடந்த (03/04.05.2025) சனி மற்...
20/05/2025

#ஸஹ்ரிய்யா_கண்ட_மற்றுமொரு_அடைவு.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக 17 ஆவது பட்டமளிப்பு விழா கடந்த (03/04.05.2025) சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எமது ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி பட்டதாரிகளான #அல்ஹாபிழ்_அஷ்ஷேக்_பாரிஸ்_ஸஹ்ரி (திருகோணமலை) , #அல்ஹாபிழ்_அஷ்ஷேக்_ரிபான்_ஸஹ்ரி (திருகோணமலை), #அஷ்ஷேக்_நஸ்மி_ஸஹ்ரி (ஹெம்மாதகம), அல்ஹாபிழ், #அஷ்ஷேக்_நளீம்_ஸஹ்ரி (வெலிமடை) ஆகியோர் மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டமும் (BA.Hons In Linguistics & Translation),
#அஷ்ஷேக்_ஸகீப்_ஸஹ்ரி (திருகோணமலை) பொதுக் கலைமாணிப் பட்டமும் (BA) வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறையருளால் உமது இந்த அடைவு ஸஹ்ரிய்யா அரபுக் கலாசாலை நிர்வாகம், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளையும் பெருமிதப்படுத்துகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

உமது அறிவுத்தேடல் தொடரவேண்டும்; உமது சமூக சன்மார்க்கப் பணிகள் ஓங்க வேண்டும்; உமது முயற்சியும் உழைப்பும் ஸஹ்ரிய்யாவின் அடுத்த தலைமுறையினருக்கும் ஸஹ்ரிய்யாவின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் முன்மாதிரியாக அமைந்திடவேண்டும்.

இறைவா! இந்த உலகிலும், மறுவுலக வாழ்விலும் உனது பங்கினை நிரப்பமாகத் தந்தருள்வாயாக!

Welcome to our College
22/03/2025

Welcome to our College

10/03/2025

பொன் விழாவை நோக்கிய பயணத்தில் - ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான ரமலான் போட்டி நிகழ்ச்சி எமது ஸஹ்ரிய்யா அரபுக் கல்...

ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி- ஓலான ஹெம்மாதகம🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝பொன் விழாவை நோக்கிய பயணத்தில் - ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான ரமலான் போட...
05/03/2025

ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி- ஓலான ஹெம்மாதகம
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

பொன் விழாவை நோக்கிய பயணத்தில் - ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான ரமலான் போட்டி நிகழ்ச்சி
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்

எமது ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி சுமார் 50 வருடங்களாக பயன் மிக்க தீன் கல்வியை வழங்கி சமூகத்திற்கு தொண்டாற்றி வருவது தாங்கள் அனைவரும் அறிந்த விடயமே.

அவ்வடிப்படையில் எமது கல்லூரியின் 50 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஹெம்மாதகம பிரதேச ஆரம்ப பாடசாலை(Primary School) மாணவ, மாணவிகளுக்கான அல்குர்ஆன், அல்ஹதீஸ் மனனப் போட்டி நிகழ்ச்சியை இவ்வருடம் ரமலான் மாதம் ஏற்பாடு செய்துள்ளோம்.
......................................
குர்ஆன் மனனம்......................................

1ம் ஆண்டு-2ம் ஆண்டு
_சூரா அந் நாஸ்- சூரா ஹுமஸா_

3ம் ஆண்டு-4ம் ஆண்டு
_சூரா அந் நாஸ் - சூரா அல் அஃலா_

5ம் ஆண்டு
_சூரா அந் நாஸ் - சூரா அல் முதப்பிபீன்._
......................................
ஹதீஸ் மனனம்......................................

1ம் ஆண்டு-2ம் ஆண்டு
_15 ஹதீஸ்கள்_

3ம் ஆண்டு-4ம் ஆண்டு
_25 ஹதீஸ்கள்_

5ம் ஆண்டு
_40 ஹதீஸ்கள்_ .

இப்போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இந்த GOOGLE படிவத்தை பூர்த்தி செய்யவும். அத்துடன் மேலதிக தகவல்களுக்காக whatsapp குழுமத்தில் இணைந்து கொள்ளவும்.

https://forms.gle/v1pP2GY9bGAGDbfw6

ZAHRIYYA OFFICIAL WHATSAPP
https://chat.whatsapp.com/Kh7u2RLuIDaAqdYTQZ2E01

பொன் விழாவை நோக்கிய பயணத்தில் - ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான ரமலான் போட்டி நிகழ்ச்சி எமது ஸஹ்ரிய்யா அரபுக் கல்...

 #ஸஹ்ரத்து_ஆளுமை_அறிமுகம்அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் "அல்ஹம்துலில்லாஹ்"முதுமா...
28/11/2024

#ஸஹ்ரத்து_ஆளுமை_அறிமுகம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் "அல்ஹம்துலில்லாஹ்"

முதுமானி கற்கையினை பூர்த்தி செய்து ஸஹ்ரிய்யா தாய்க்கு புகழ் சேர்த்த #அஷ்_ஷேய்க் A.R.M. "zahri"

கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகம மடுல்போவை கிராமத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மடுல்போவ பாதுபிய்யா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கற்று, 2007 ஆம் ஆண்டு ஹெம்மாதகமையில் அமைந்துள்ள ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரியில் ஷரீஆ துறையில் இணைந்து, 2013ம் ஆண்டு ஸஹ்ரி எனும் நாமத்தோடு மௌலவி அல் ஆலீம் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

கற்கும் காலத்திலேயே தனது திறமையை சகல துறைகளிலும் வெளிப்படுத்திய இவர் O/L, A/L பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகம் தெரிவானார்.

பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த காலப்பகுதியில் இப்னு உமர் (ஹதீஸ் உயர் கற்கை கலாபீடத்தில்) தவ்ரதுல் ஹதீஸ் கற்கையை பூர்த்தி செய்தார்.

2015 ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்வாரி மாணவராக இணைந்த இவர் அங்கு சிறப்பு தேர்ச்சியுடன் தனது சிறப்புக்கலைமானிக் கற்கையை (B.A Hons) மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் பூர்த்தி செய்தார்.

2019- 2021 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பு துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராக செயல்பட்டார்.

2021 ஆம் ஆண்டு மொழியியல் துறையில் முதுமானிக் கற்கையை பூர்த்தி செய்வதற்காக மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.

கற்கும் காலத்தில் மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பு துறை சார்ந்த ஆய்வுகளை தேசிய மற்றும் சர்வதேச தரம் பெற்ற ஆய்வு சஞ்சிகைகளிலும், மாநாடுகளிலும் சமர்ப்பித்துள்ளமை அவரது கல்வி துறையை சார் புலமையை வெளிக்காட்டுகின்றது.

இவர் 2023 ஆம் ஆண்டு தனது முதுமானி கற்கையை பூர்த்தி செய்து 2024/11/17 ஆம் திகதி மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் பட்டம் பெற்றார் "அல்ஹம்துலில்லாஹ்"

அத்துடன் தற்பொழுது மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலேயே தனது கலாநிதி பட்டப்படிப்பையும் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி நிர்வாகம், ஆசான்கள், பழைய மாணவர்கள் இன்னும் மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

17/11/2024

Address

Hemmatagama
71530

Alerts

Be the first to know and let us send you an email when Zahriyya Arabic College - Hemmathagama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Zahriyya Arabic College - Hemmathagama:

Shortcuts

Share

Category