24/11/2023
இவ் வருடத்தின் இறுதிப்பகுதி, 2024 ஜனவரி ஆரம்பித்தால் கற்றலுக்கான புத்துணர்வுடன், அறிவுத் தேடல் குறித்த மிகுந்த எதிர்பார்ப்புடன் பள்ளிக் கூடங்கள் நோக்கி மாணவர்கள் செல்லப் போகின்றார்கள்.
பெற்றோர்கள்,அதிபர்,ஆசிரியர்கள் என்ற வகையில் பாடசாலைச் சுமூகமாக ஏற்புடைய வகையில் செயற்படுவது சிறந்த சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடுகளாகும்.
பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் மாணவர் சீருடைகள், பாதணிகள், பயிற்சிப் புத்தகங்கள் எனும் தேவைகள் குறித்த சிந்தனை, போராட்டம் பெற்றோருக்கு சுமையாக அமைகின்றது.
இவ்வகையான பொதுத் தேவைகள் குறித்த சரியான கணிப்பீட்டை பெற்று கிடைக்கும் வளங்களை ஒன்று திரட்டி சரி சமமான பங்கீடுகளை வழங்க முடியுமானால் அதுவும் சிறந்த சமூக அமைப்பின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
பிள்ளைகளின் கல்வித் தேவைகளை புதிய ஆண்டில் வழங்குவதற்கான, சரிவர நிறைவு செய்வதற்கான முன் ஆயத்தங்களை பாடசாலைகள் திட்டமிட்டுள்ளனவா? பாடசாலைகள் எதிர்பார்க்கும் ஒத்துழைப்புக்கள் குறித்து சமூகப் பங்களிப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அறிந்திருத்தல் அவசியமாகும்.
மாணவர் சீருடை வடிவமைப்புக்கள், சிகையலங்காரங்கள் போன்றன சுற்றுநிறுப அடிப்படையில் முறையாக அமைந்திருப்பதை, பேணப்படுவதை பெற்றோர்கள் கருத்தில் கொள்வது முக்கியமாகும்.
உரிய சீருடைகளை முறையாக அணிந்து செல்லவும், ஒழுக்க விழுமியங்களை பேணி கற்றலில் ஈடுபாடு காட்டுவதனூடாக,
மாண்புமிகு, மாணவியர்கள் என்று அனைவராலும் அழைக்கப்படும் விதத்தில் மாணவர்கள் நடத்தைகள் மாற்றம் பெற வேண்டும்.
சுற்றுநிறுப அறிவுறுத்தல்களை பிரதேச தையல்காரர்கள், விற்பனை நிலையங்கள்,சிகையலங்கார நிலையங்களுக்கு வழியுறுத்துவது பாடசாலை நிர்வாக அமைப்புக்களின் கடமையாகும்.
மேற்படி விடயங்களில் போதிய அறிவைப் பெற்று சிறந்த பாடசாலைச் சமூகமாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக!
PPA - Alminhaj.
When the end of the year, January 2024 begins, students are going to go to school halls with a renewed sense of learning and great anticipation for the pursuit of knowledge.
The smooth functioning of the school in terms of parents, principal and teachers are manifestations of a good social structure.
As the prices of goods have increased drastically, thinking and struggling about the needs of student uniforms, footwear and training books is becoming a burden for parents.
It is one of the hallmarks of a good social system if a proper assessment of such public needs can be made and the available resources can be pooled and distributed fairly.
Are schools planning ahead to adequately meet their children's educational needs in the new year? It is important to know how community contributions should be based on the collaborations that schools expect.
It is important for parents to consider that student uniform designs, hairstyles, etc. are environmentally sound and maintained.
By wearing appropriate uniforms properly, upholding moral values and engaging in learning,
Respected, the behavior of the students as they are called by everyone should change.
It is the duty of the school management bodies to convey environmental instructions to local tailors, sales outlets and hairdressing salons.
Let's work together to become a better school community by getting enough knowledge in the above matters!
PPA - Alminhaj.