Al Qamar Central College

Al Qamar Central College NW/ Giri/ Al- Qamar Central College is situated at Pannala Education division, Giriulla zone in Kurunegala district.

29/01/2026
01/01/2026

*"கமரின் கமலங்கள்"* வருடாந்த பரிசளிப்பு விழா -2025

பம்மன்ன அல்-கமர் மத்திய கல்லூரியின் 2025 ஆம் வருடத்திற்கான

_"கமரின் கமலங்கள்"_

வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வுகள் நாளை 2ம் திகதி வெள்ளி்க்கிழமை மாலை 4:30 மணிக்கு பாடசாலை திறந்த வெளி அரங்கில் நடைபெற உள்ளது.

2025 ஆம் ஆண்டின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்திச்
சங்க, மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலையின்கல்வி மேம்பாட்டில் கைகோர்த்து செயற்படும் சங்கங்களின் தலைவர்கள், உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அபிமானிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அதிபர்,
அல்-கமர் ம. கல்லூரி,
பம்மன்ன.
2026.01.01

எமது பாடசாலையில் நாளை முதல் கணினி வகுப்புகள் ஆரம்பம்…..இதற்காக எமது ஊரைச்சேர்ந்த ஒரு வளவாளர் உதவிகள் புரிந்து கொண்டு இரு...
18/12/2025

எமது பாடசாலையில் நாளை முதல் கணினி வகுப்புகள் ஆரம்பம்…..இதற்காக எமது ஊரைச்சேர்ந்த ஒரு வளவாளர் உதவிகள் புரிந்து கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

07/12/2025

*அஸ்ஸலாமு அலைக்கும்*

கிரியுல்ல கல்வி வலையத்துக்கு உட்பட்ட 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் *டித்வா (Dithwa)* *சூறாவளி தாக்கத்தின் காரணமாக தமது கற்றல் உபகரணங்களை இழந்துள்ளனர்.*

எனவே, இவர்களுக்கு தமது கல்வியை தொடங்குவதற்கு *பாட புத்தகங்கள் , கொப்பி , புத்தகப் பை , சப்பாத்து , பாடசாலை சீருடை , அழி ரப்பர் , அடிமட்டம் ,* *கத்தரிக்கோல்* போன்ற சகல பொருட்களையும் இழந்த நிலையில் அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர்.

எனவே இவர்களின் நலன் கருதி இவர்களுக்கு தேவையான *கொப்பி , பாடப் புத்தகங்கள், புத்தகப்பை , அழி ரப்பர் , அடிமட்டம் , புதிய அல்லது பாவிக்கத்தக்க சப்பாத்து , புதிய சீருடைகள் , பென்சில் பெட்டி* என்பவற்றை சேர்த்து வழங்குவதற்கு எமது பாடசாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எமது மாணவர்கள் தம்மால் முடிந்த அளவு இவ்வாறான பொருட்களை *எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8:30 தொடக்கம் 10:30 வரையில் பாடசாலைக்கு கொண்டு* வந்து தருமாறு சகல மாணவர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
-
அல் கமர் மத்திய கல்லுரி பம்மன்ன
2025.12.07

05/12/2025

*அஸ்ஸலாமு அலைக்கும்*

*டித்வா (Dithwa) சூறாவளி தாக்கம்* காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு எமது பாடசாலையில் *80 ஆண்டு நிறைவையொட்டி* டிசம்பர் , ஜனவரி மாதங்களில் நடைபெற இருந்த *கண்காட்சி , கலை விழா மற்றும் சஞ்சிகை வெளியீடு* போன்ற நிகழ்வுகள் பிற்போடப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் அறியத் தருகிறேன்.

இப்படிக்கு
அதிபர்.

எமது பாடசாலையின் நீண்ட நாள் குறைபாடாக காணப்பட்ட A M A Azees Hall இன் கூரை மற்றும் பழுதுபார்த்தல்  வேலைத்திட்டம்    உத்தி...
24/11/2025

எமது பாடசாலையின் நீண்ட நாள் குறைபாடாக காணப்பட்ட A M A Azees Hall இன் கூரை மற்றும் பழுதுபார்த்தல் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இதற்காக சுமார் 3,500,000/- ரூபா நிதியுதவி வடமேல் மாகாணசபை கல்வித்திணைக்களகத்தால் வழங்கப்பட்டுள்ளது இதற்காக முயற்சி செய்த அதிபர்,ஆசிரியர்கள் SDEC, OBA அங்கத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-
Al Qamer C C Media

23/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும்
2026 ஆம் ஆண்டு தரம் 1 க்கு மாணவர்களை சேர்க்க எதிர்பார்த்துள்ள பெற்றோர்களுக்கான *விசேட செயல் அமர்வு* ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(2025.11.25) காலை 9:30 மணிக்கு பாடசாலையில் நடைபெற உள்ளது அனைத்து பெற்றோர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்
இப்படிக்கு
அதிபர்
2025.11.23

Address

Bammanna, Narangoda
Giriulla
60152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Qamar Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category