K/Al-Hikma Maha Vidyalaya, Gampola.

K/Al-Hikma Maha Vidyalaya, Gampola. Al-Hikma Maha Vidyalaya is striving hard to shine as an one of the best schools

01/09/2026
🌟 மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟,மாகாண சமூக விஞ்ஞான தினப் போட்டியில் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தி அகில இலங்கை மட்டப் போட...
28/08/2026

🌟 மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌟
,

மாகாண சமூக விஞ்ஞான தினப் போட்டியில் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தி அகில இலங்கை மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள எமது பாடசாலை மாணவி M.N.F. Aqsha விற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🏆🎉

உங்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் திறமை எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது. ❤️

🌸 அகில இலங்கை மட்டத்திலும் சிறப்பாகச் சாதித்து வெற்றிக்கொடி நாட்ட எமது அன்பான வாழ்த்துக்கள்! 🌸

“இன்றைய சாதனை… நாளைய வெற்றிக்கு ஒரு சிறந்த படிக்கல்!”

💐 அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
K/Al Hikma Maha Vidyalaya
ஆண்டியாகடவத்த, கம்பளை

🌟 HEARTIEST CONGRATULATIONS! 🌟
To M.N.F. AQSHA,
Heartiest congratulations on your outstanding achievement in the Provincial Social Science Day Competition and for qualifying for the All-Island Level Competition! 🏆🎉
Your dedication, commitment, hard work and talent have brought great pride to our school. ❤️
🌸 We wish you every success at the All-Island Level and hope you continue to shine and bring glory to our school! 🌸
“Today’s achievement is a stepping stone towards tomorrow’s success!”
💐 Best wishes from the Principal, Teachers & Students
K/Al Hikma Maha Vidyalaya
Aandiyakadawatha, Gampola

🏆 மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌿💛மாகாண மீலாத் போட்டி – 2026 இல் சிறப்பாகப் பங்குபற்றி,முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களைப் ப...
16/08/2026

🏆 மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌿💛

மாகாண மீலாத் போட்டி – 2026 இல் சிறப்பாகப் பங்குபற்றி,
முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த எமது அன்பு மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉🏆

உங்களின் திறமை, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் அழகிய வெளிப்பாடே இந்த வெற்றிகள்.

இன்னும் பல உயரங்களைத் தொட்டு, கல்வியிலும் வாழ்விலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!


உங்கள் சாதனை எமக்கெல்லாம் பெருமை! 🌟

✍️✍️கடந்த வாரம் கம்பளை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மொழிகள் தின நிகழ்வில், முஸ்லிம் பாடசாலைகளைப் பிர...
17/07/2026

✍️✍️கடந்த வாரம் கம்பளை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மொழிகள் தின நிகழ்வில், முஸ்லிம் பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது பாடசாலை மாணவர்கள் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய நடனத்தை மிகச் சிறப்பாக அரங்கேற்றினர்.
அவர்களின் திறமையான மற்றும் நேர்த்தியான நிகழ்த்துகை பார்வையாளர்களின் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், முஸ்லிம் சமூகத்தின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாசார அடையாளத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது. இந்நிகழ்வில் பங்கேற்று எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்து வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

K/Al Hikma Maha Vidyalaya சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 💐💐உங்கள் திறமைகள் மேலும் பல உயரங்களை எட்ட அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.🤲🤲

🎖🎖2026 வலய மட்ட மீலாத் தின போட்டிகளில் கீழே பெயர் குறிப்பிடப்பட்ட  மாணவர்கள்  தமது திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெ...
13/07/2026

🎖🎖2026 வலய மட்ட மீலாத் தின போட்டிகளில் கீழே பெயர் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 🏅🏅🏅


💐போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.💐

*க/அல்-ஹிக்மா மகா வித்தியாலயம்ஆண்டியாகடவத்தை கம்பளை*  *முஹர்ரம் புது வருட நிகழ்வுகள்-ஹிஜ்ரி 1448* அல் ஹிக்மா மகாவித்தியா...
23/06/2026

*க/அல்-ஹிக்மா மகா வித்தியாலயம்
ஆண்டியாகடவத்தை கம்பளை*

*முஹர்ரம் புது வருட நிகழ்வுகள்-ஹிஜ்ரி 1448*

அல் ஹிக்மா மகாவித்தியாலயத்தில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் புதுவருட வரவேற்பு நிகழ்வில் சகல மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காலம்: 2026.06.17 புதன் கிழமை
நேரம் : காலை 09.00 மணி
இடம் : அப்ரார் ஜும்மா பள்ளிவாசல்

இந்நிகழ்வில் விஷேட உரை ஒன்றை As Shiek Moulavi Ruzni Mufeer (Haqqani) நிகழ்த்தினார்கள்.

இரண்டாம் மொழி சிங்களதின வலய மட்ட போட்டிகளில் பின்வரும்  மாணவர்கள்  தமது திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை  சேர்த...
23/06/2026

இரண்டாம் மொழி சிங்கள
தின வலய மட்ட போட்டிகளில் பின்வரும் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

🏆பேச்சு
தரம்-07 இரண்டாம்இடம்
M.R Bushra

🏆 நாட்டுப்புற பாடல்-குழு நிகழ்ச்சி
இரண்டாம் இடம்
M.S Zikra
M.S.F Sawdha
M.R Hudha
M.A.F Haseena
M.A Shafa
M.S.F Saliha
M.R.F Ramla

போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

*Alhamdulillah!*   🏆🏆We are proud to announce that *M.M.F Mizra* of Grade 13, *Al- Hikma Maha Vidyalaya,* *Andiyakadawat...
03/06/2026

*Alhamdulillah!*

🏆🏆We are proud to announce that *M.M.F Mizra* of Grade 13, *Al- Hikma Maha Vidyalaya,* *Andiyakadawatte, Gampola* has secured *1st Place in Impromptu Speech_* at the Zonal English Day Certificate Awarding Ceremony 2025 – _Echoes of Excellence_. 🏆🏆

🎖Your dedication, confidence and eloquence have brought honor to our school. From our classrooms to the zonal stage — you spoke with confidence and won with grace. We are so proud of you! May Allah bless you with continued success 🎖🎖

🥦Today, the Grade 1 ' Ilakkanji 'program was a wonderful opportunity for the children. The new educational reforms help ...
03/06/2026

🥦Today, the Grade 1 ' Ilakkanji 'program was a wonderful opportunity for the children. The new educational reforms help shape and develop children from the primary grades. Parents and teachers now play a supportive role by guiding the children in preparing the kanji. Previously, parents would prepare it themselves, but now the children prepare it on their own. 🥦
🦾This helps to develop their intelligence, creativity, and confidence.🦾
🍒Jazakallahu Khairan to Khairiya Teacher for her valuable guidance and dedication.🍒

*ஆரம்பப் பிரிவு கற்றல் மேம்பாட்டிற்கான ஆசிரியர் வாண்மை விருத்தி வேலைத்திட்டம்*.கடந்த திங்கட்கிழமை 2026.05.11  ஆரம்பப் பி...
03/06/2026

*ஆரம்பப் பிரிவு கற்றல் மேம்பாட்டிற்கான ஆசிரியர் வாண்மை விருத்தி வேலைத்திட்டம்*.

கடந்த திங்கட்கிழமை 2026.05.11 ஆரம்பப் பிரிவுஆசிரியர்களுக்கான தர வட்டம் ஒன்று இடம்பெற்றது.*'எண்ணும் எழுத்தும்*'என்ற தலைப்பில் இடம்பெற்ற இத் தரவட்டம் நிஸ்ரி ஆசிரியரால் நடாத்தப்பட்டதுடன் இந் நிகழ்வில். அதிபர், பிரதி அதிபர் உட்பட ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Address

K/Al-Hikma Maha Vidyalaya, Andiyakadawatte
Gampola
20500

Opening Hours

Monday 07:25 - 14:15
Tuesday 07:25 - 14:15
Wednesday 07:25 - 14:15
Thursday 07:25 - 14:15
Friday 07:25 - 11:25

Telephone

0812350727

Alerts

Be the first to know and let us send you an email when K/Al-Hikma Maha Vidyalaya, Gampola. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to K/Al-Hikma Maha Vidyalaya, Gampola.:

Shortcuts

Share

Category