10/10/2025
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிறப்பாக முகங்கொடுத்த ஜப்பாரின் சகல மாணவ செல்வங்களையும் பாராட்டி அவர்களது கல்வி வாழ்க்கைக்குத் தேவையான உந்துதலை வழங்கி அவர்களை மேலும் தைரியமூட்டும் வகையில் பாடசாலை அதிபர் ஜனாபா றிஸ்மியா அன்வர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பாடசாலை நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா இன்று (10) கல்லூரி கேட்போர்கூடத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
கல்லூரியின் ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவ மாணவிகள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் அதிதிகளாக ஜப்பார் கல்லூரியின் பழைய மாணவரும் பிரதேச சபை உறுப்பினருமான கெளரவ ஷிஹான் மொஹமட் மற்றும் கல்லூரியின் பழைய மாணவரும் மல்வானஹின்ன முஸ்லிம் பாடசாலை அதிபருமான ஜனாப் இம்ரான் முக்தார் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பார் பழைய மாணவர் சங்கம்.