ARAFA Vidyalayam Eravur

ARAFA Vidyalayam Eravur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARAFA Vidyalayam Eravur, School, Rural Court Road, Eravur.

கடந்த மாதம்நடைபெற்ற மாகாணமட்ட புனித அல்குர்ஆன் ஹிப்ழு போட்டியில் வெற்றி பெற்றுஎமது பாடசாலையைச் சேர்ந்த எம். எஸ். எப். தி...
30/12/2025

கடந்த மாதம்நடைபெற்ற மாகாணமட்ட புனித அல்குர்ஆன் ஹிப்ழு போட்டியில் வெற்றி பெற்று
எமது பாடசாலையைச் சேர்ந்த எம். எஸ். எப். திக்ரா (தரம் 11) என்ற மாணவி (புனித அல்குர்ஆன்) சர்வதேச ஹிப்ழு போட்டிக்கான தெரிவுப் போட்டிக்குதெரிவு செய்யப்பட்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவூதி அரேபியத் தூதுவராலயமும் இணைந்து நடாத்தும் இப் போட்டியானது அடுத்த மாதம் கொழும்பில் நடைபெற உள்ளது.

வெற்றி பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, இம் மாணவியை பயிற்றுவித்த ஆசிரியர்களான மௌலவி ULM. ஹம்ஸா ஆசிரியர் மௌலவியா AGF.பஹிமா ஆசிரியை மற்றும் அஷ் ஷேஹ் அல் காரி TH. ஹிஸாம் மௌலவி அவர்களுக்கும் வழிகாட்டல்கள் வழங்கிய பாடசாலையின் முதல்வர் ML.பதியுதீன் சேர் அவர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். ஜஷாக்கல்லாஹ் ஹைர்

Announcement! List of selected contestants for the 3rd Al-Quran Memorization Competition jointly organized by the Department of Muslim Religious and Cultural Affairs and the Embassy of Saudi Arabia - 2025 Finals to be held in Colombo முஸ்லிம் சமய பண்பாட்டலு....

03/12/2025
அஸ்ஸலாமு அலைக்கும் 📍வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக எமது பாடசாலையின் பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் நலன்...
02/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

📍வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக எமது பாடசாலையின் பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரிடம் இருந்தும் உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது. உங்களால் முடிந்த உதவியை கட்டாயம் செய்யுங்கள்.

🌧️ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிட வாருங்கள்! 🌧️

மட்டக்களப்பு மத்திய வலய கல்வி அலுவலக அறிவுறுத்தலின் பேரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

📌 பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் கல்வியில் ஈடுபட, பின்வரும் பொருட்கள் தேவைப்படுகிறது:

📚 #கடந்த #கால #வினாக்கள் #அடங்கிய #புத்தகங்கள்
🎒 #புத்தகப்பை, #அப்பியாசக் #கொப்பிகள்,
#பேனை, #பென்சில், #அழிஇறப்பர், #கொம்பாஸ், #பாடசாலை #தண்ணீர் #போத்தல்
👞 #பாதணிகள்
👗 #புதிய #பாடசாலை #ஆடைகள் மற்றும் ஏனைய புதிய ஆடைகள் (ஆண், பெண் ஆடைகள்)

🎯 உங்கள் உதவியால் ஒரு மாணவனின் எதிர்காலம் பிரகாசிக்கலாம்!

📍 உங்களது பிள்ளையினால் இன்னுமொரு பிள்ளையின் கல்வி நடவடிக்கை தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்களுக்கு உங்கள் உதவிகளை வழங்குங்கள்.

⌛03.12.2025 புதன்கிழமை காலை 08.00 மணி தொடக்கம் பி. ப. 2.00 மணி வரை
எமது பாடசாலையில் பொருட்களை கொண்டு வந்து ஒப்படைக்கலாம்.

வாருங்கள், நம் குரலையும் கரத்தையும் ஒன்றுபடுத்தி, கல்வியை மீட்டெடுப்போம்!

📍கல்விக்கு உதவுவது (ஸதகதுல் ஜாரியா )நிலையான தர்மமாகும் மற்றும் அல்லாஹ் எமது பிள்ளைகளின் கல்வி அறிவையும் வாழ்வையும் சிறப்பாக்கித் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த உதவியை உங்கள் அனைவரிடமும் இருந்து எதிர்பார்கிறோம்.

அதிபர்
மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயம் .

 #தேசிய  #ரீதியில்  #மாபெரும்  #சாதனைஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசார போட்டி - 2025 நிகழ்வுகள் இன்று ( ...
01/11/2025

#தேசிய #ரீதியில் #மாபெரும் #சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசார போட்டி - 2025 நிகழ்வுகள் இன்று ( 01-11-2025) சனிக்கிழமை கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது.

இப் போட்டியில் எமது மட்டக்களப் #மத்தி கல்வி வலயத்தை பிரதிநிதுத்துவப்படுத்தி எமது பாடசாலையான மட்/மம/ #ஏறாவூர் #அறபா #வித்தியாலயம் சார்பாக #கிராஅத் போட்டியில் கலந்து கொண்ட இரு மாணவச் செல்வங்களும் #வெற்றி பெற்று எமது வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையீட்டித் தந்துள்ளார்கள்.

#செல்வன். #முகம்மட் #தாஹிர் #அம்னான் #முதலாமிடத்தையும்

#செல்வி. #முகம்மது #சலீம் #பாத்திமா #திக்ரா #இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

இம்மாணவச் செல்வங்களை பயிற்றுவித்த எமது பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியரும் மௌலவியுமான திரு. ULM. #ஹம்சா அவர்களுக்கும் இவருக்கு துணையாய் நின்ற சிரேஷ்ட ஆசிரியை திருமதி. AGF. #பஹீமா அவர்களுக்கும் இம்மாணவச் செல்வங்களை தேசிய ரீதியில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் பயிற்றுவித்த எமது பாடசாலையின் பழைய மாணவனும் மௌலவியுமான அல்ஹாபில். TM. #ஹிசாம் அவர்களுக்கும், இம்மாணவச் செல்வங்களின் பெற்றோர்களுக்கும், இஸ்லாம் பாடத்திற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு. MLM. #சபூர் அவர்களுக்கும், எமது வலயம் ஒர் உச்ச நிலையைப் பெற வேண்டும் என்ற சவாலோடு தமது நேரகாலங்களை நமது வலயத்திற்காக ஒதுக்கி அயராது பாடுபடும் எமது வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்ஷேஹ் MM. #ஜவாத் சேர் அவர்களுக்கும் எமது பாடசாலை ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதிபர்
மட்/மம/ஏறாவூர் அறபா வித்தியாலயம்

Address

Rural Court Road
Eravur

Telephone

+94652240690

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARAFA Vidyalayam Eravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ARAFA Vidyalayam Eravur:

Shortcuts

Share

Category