Arafa Alumni Association

Arafa Alumni Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arafa Alumni Association, Education, Rural Court Road, Eravur.

04/09/2025

சித்தியடைந்த மாணவர்களுக்கும், அவர்களுடைய அடைவுக்காய் அயராது பாடு பட்ட ஆசிரியர்கள், அவர்களை திறன்பட வழிநடாத்திய அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வலய மட்டத்தில் 04 ஆம் இடத்தினைப் பெற்ற எமது பாடசாலைக்கு, பாடசாலையின் பழ...
12/07/2025

நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வலய மட்டத்தில் 04 ஆம் இடத்தினைப் பெற்ற எமது பாடசாலைக்கு, பாடசாலையின் பழைய மாணவர்கள் சார்பாக இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் ❤️

Arafarian Cricket Blast Season -2 Coming soon! 🏏 Get ready, Arafa's old students—it's time to show your unity and pride ...
28/05/2025

Arafarian Cricket Blast Season -2

Coming soon! 🏏 Get ready, Arafa's old students—it's time to show your unity and pride as true Arafarians! 💪🔥

27/05/2025

Big Announcement for Arafa Old Students 📢📢📢📢

04/03/2025

அனைத்து அறபாவின் பழைய மாணவர்களுக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வவ
பழைய மாணவர்கள் நிருவாகத் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்
மேற்படி 2025ம் ஆண்டுக்கான பழைய மாணவர் சங்கத்தை முறையாக நிருவி எமது பாடசாலையின் வளர்ச்சிக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் நிருவாகத் தெரிவு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பின்வரும் ஒழுங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலம் :-07.03.2025 வெள்ளிக்கிழமை
நேரம் :- பி. ப. 4.30
இடம் :- பாடசாலை பிரதான மண்டபம்
குறித்த நிகழ்விற்கு ஒவ்வோர் Batch சார்பாகவும் இரண்டு பேர் வீதம் கலந்து கொள்ளவும்.

செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
மட்/ மம/ஏறாவூர் அறபா வித்தியாலயம்

06/08/2024
02/08/2024
பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது,உங்களது தாய்ப் பாடசாலை.
01/08/2024

பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது,
உங்களது தாய்ப் பாடசாலை.

Arafarian Cricket Carnival2022 காலப்பகுதிகளில் அன்றைய அதிபர் அவர்களின் முயற்சியுடனும் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை...
24/07/2024

Arafarian Cricket Carnival

2022 காலப்பகுதிகளில் அன்றைய அதிபர் அவர்களின் முயற்சியுடனும் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் என அனைவரும் முயற்சி செய்தும் ஆரம்பிக்கப்பட்ட எமது OBA போட்டிகளுக்கான ஆரம்பப்புள்ளி நிதியினை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தில் கை கூடாமலே இடையில் நிறுத்தப்பட்டது எமது பழைய மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் மனக்கவலையை ஏற்படுத்தியிருந்தது.

ஆனபோதிலும் பல கட்ட கலந்துரையாடல் மற்றும் அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் தற்போதைய கலாசாலையின் அதிபர் UL. பதியுதீன் Sir அவர்களின் பூரண ஆதரவுடனும் வழிகாட்டலுடனும் ஏற்கனவே கைவிடப்பட்ட இப்போட்டியை 2024 ம் ஆண்டு எப்படியாவது ஊரே மெச்சும் அளவுக்கு நடாத்த வேண்டும் என்ற அன்புக்கட்டளைக்கு ஏற்ப அவசரமாக தற்காலிக OBA குழு அமைக்கப்பட்டு மீண்டும் இதற்கான ஆரம்ப புள்ளி இடப்பட்டது.

இவ்விடத்தில் கலாசாலை அதிபர் அவர்களே Hero
One man Army போன்று தன்னிச்சையாக எடுத்த துணிவு மிக்க தீர்மானங்களே இத்தகைய சிறப்பான முடிவினை பெற்றுத்தத்தது எனலாம்.

மீண்டும் நிதிப்பற்றாக்குறையினால் இப்போட்டி கைகூடாமல் போய்விடுமோ என்ற பயம் ஒரு புறம் இருந்த வேளை எமது தற்காலிக OBA அமைப்பின் உறுப்பினர் சகோ. Usaith Mohamed அவர்கள் முழுமையான நிதிப்பொருப்பினை தாமாக முன் வந்து ஏற்றுக்கொண்ட பிற்பாடு அவருடன் கைகோர்த்த எமது பழைய மாணவர்கள் Mohamed Rilhan, Jazumy rinoos மற்றும் Ahmath Jurais ஆகியோர் அர்ப்பணிப்புடன் இப் பிரம்மாண்ட ஏற்பாட்டுக்கு தேவையான நிதியினை முழுமையாக திரட்டி இந் நிகழ்வுக்கான அத்திவாரத்தினை மேலும் உறுதிப்படுத்தினர்.
இவர்களுக்கு அதிபர் அவர்கள் வழங்கிய முழுமையான ஆதரவு சொல்லிலடங்காதது

ஆரம்பம் முதல் இருதி நாள் வரை எம்முடன் உடனின்ற எமது OBA குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டு ரீதியாக எம்முடன் இணைந்துகொண்ட எமது 23 Batch பழைய மாணவ மாணவியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். குறைந்தது 30,000/= இலிருந்து இலட்சங்களை தாண்டிய தொகையில் ஒவ்வொரு Batch ஆக 23 க்கு மேற்பட்ட Projects களை பல million அளவான தொகையில் செய்து பாடசாலையின் பௌதீக வள தேவையை Cricket carnivel க்கு முன்னதாகவே நிவர்த்தி செய்ததானது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வரலாற்று சாதனையாகும்.

அதன் பின்னர் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பலர் கூட்டாக மேற்கொண்டார்கள்
1. மைதான ஒழுங்கமைப்பை வியாழன் வெள்ளி சனி ஞாயிறு என நான்கு நாட்களும் அருகில் நின்று கவனித்து கொண்ட சகோதர்கள் Mohamad Rilhan, Mohamed Jurais , usaith Mohammed ஆகியோர் இந்த போட்டிக்கான மைதான ஒழுங்கமைப்பு வேலைகளை செய்து முடித்ததானது இப்போட்டியை செவ்வனே செய்து முடித்திட ஏற்பாட்டுக்குழுவுக்கு இலகுபடுத்திக்கொடுத்தது.
2. போட்டி நேர அட்டவணையை தயார் செய்து யாருக்கும் சிக்கல் ஏற்படுத்தா வண்ணம் திறம்பட ஒழுங்கமைத்த சகோதரர் Irsath Hani மற்றும் Mohamed Rilhan ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்
3. கொடிக்கம்பங்களை திறம்பட ஒழுங்கமைத்து தந்த பாடசாலை விளையாட்டுத்துறை ஆசிரியர் குழாத்திற்கு மிக்க நன்றி.
4. உரிய நேரத்துக்கு போட்டிகளை ஒழுங்கமைத்து நடாத்தித்தந்த நடுவர் குழாம் மற்றும் புள்ளிக்கணிப்பாளர்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்
5. போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்கிய Voice of Eravur குழுவினரின் நள்ளிரவு தாண்டிய அர்ப்பணிப்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.
6. Sound system, MA Photography, Live telecast Team என நிகழ்வினை மேலும் அலங்கரித்த அனைவருக்கும் நன்றிகள்.
7. இப்போட்டிக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் Marketing வேலைகளை பொருப்பெடுத்து Facebook மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்திய Media team சகோ.Aflal சகோ.மதீத் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்
8. போட்டி தொடர்பான ஆரம்ப கட்டம் முதல் இருதி நிகழ்வு வரை நம்மோடு இருந்து வழிகாட்டல் செய்த உடற்கல்வி விளையாட்டு துறை ஓய்வு நிலை ஆசான் Nazeer Sirக்கும் மனமார்ந்த நன்றிகள்

மிக மிக முக்கியமாக பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகம், இவர்களின் ஒத்துழைப்பு நள்ளிரவு வரையான மைதான கண்காணிப்பு என்பன வார்த்தைகளால் கூற முடியாத தியாகங்கள்
இதற்காக பாடசாலை அதிபர் உட்பட அனைத்து நிர்வாகத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வுக்காக கை கோர்த்தமை எங்கள் பலத்தை மேலும் அதிகரித்ததுடன் இலகுவாக்கியும் தந்தது. அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

நிகழ்வு ஆரம்ப நாள் முதல் இருதி நாள் நிகழ்வு வரை உடனிருந்து ஒழுங்கமைப்பு உதவி செய்த பாடசாலை மாணவர்கள், மாணவ தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஆக மொத்தத்தில் நிதியுதவியில் ஆரம்பித்து ஏற்பாடுகள் வரை பல கைககள் ஒன்றினைந்தனால் தான் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்து முடிக்க முடிந்தது.

ஒற்றுமையே எமது பலம் என்பதை அறபாவின் சொந்தங்கள் முழு உலகுக்கும் பறை சாற்றியுள்ளனர்.

இன்சா அல்லாஹ் அடுத்த வருடங்களிலும் இதே ஒற்றுமையுடன் இதை விட பிரம்மாண்டமாக இந் நிகழ்வினை நடாத்தி முடிக்க ஒன்றினைவோம்

Cricket Carnival

22/07/2024

Congratulations 🎉👍
2018 Batch Boys

Congratualtions 2018 Adaavadi Boys❤️🔥
21/07/2024

Congratualtions 2018 Adaavadi Boys❤️🔥

Address

Rural Court Road
Eravur
30300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafa Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Arafa Alumni Association:

Shortcuts

Share

Category