17/10/2025
🎉 க.வ. கெங்கல்ல தமிழ் வித்தியாலயம் – பெருமைமிகு தருணம்! 🎉
எமது வித்தியாலயத்தின் பழைய மாணவரும், கண்டி City Tex உரிமையாளருமான திரு. சுந்தரமூர்த்தி ஐயா அவர்களின் பெரும் நிதி பங்களிப்பின் மூலம் எமது பாடசாலையின் மைதான புனர்நிர்மாணப் பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பழைய மாணவர் ஒருவரினால் செய்யப்படும் இந்த மகத்தான சேவை எமது பள்ளியின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாகும். 💐
இப்பணியின் சில முக்கிய தருணங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன. 📸
அவருக்கு எமது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மென்மேலும் சகல வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ எமது வாழ்த்துக்கள். 🙏
“கல்வி மட்டுமன்றி, விளையாட்டு துறையிலும் எமது குழந்தைகள் பிரகாசிக்க வேண்டும்” என்ற தூர நோக்குடன் இந்தப் பணி முன்னெடுக்கப்படுவது உண்மையிலே பெருமைக்குரியது. 🏫⚽🏆