Enasalgolla Past Pupils Association

Enasalgolla Past Pupils Association என் இரண்டாம் உலகத்தை காட்டிய அறிவுச்சுரங்கம்......

✨ *வண்ணக்கரங்கள் – Hands of a Colorful Tomorrow* ✨சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களால் பல மாணவர்கள் தங்கள...
10/12/2025

✨ *வண்ணக்கரங்கள் – Hands of a Colorful Tomorrow* ✨

சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களால் பல மாணவர்கள் தங்களுடைய கற்றல் பொருட்களை முழுமையாக இழந்துள்ளனர்.
அவர்களின் கல்வி பயணம் தடையின்றி தொடர, Deltota Higher Education Student Association சார்பில் கற்றல் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை சேகரித்து வருகின்றோம்.

உங்களால் முடியுமான அளவில் வழங்கும் ஒவ்வொரு பங்களிப்பும், கல்வியில் தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரு மாணவனின் வாழ்வில் புதிய ஒளியாக மாறும்.
கற்றல் பொருட்களை வழங்கும் இந்த நற்செயலில் நீங்களும் இணைந்து கொள்ள வண்ணக்கரம் உங்களுக்குச் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

🎓 கல்வி—எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகப் பெரிய கருவி

ஒரு பேனா, ஒரு புத்தகம், ஒரு பை போன்ற சிறிய பொருள் கூட ஒரு குழந்தையின் கல்விப் பயணத்தில்
மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் சக்தி கொண்டது.

உங்கள் பங்களிப்புகள்,
• அவர்களின் நம்பிக்கையை உயர்த்தும்,
•அவர்களின் இலக்குகளுக்கு வழிகாட்டும்,
•அவர்களின் நாளையை வண்ணமயமாக்கும்.

📌 பணமாகவும் பொருளாகவும் உங்கள் உதவிகளை வழங்கலாம்.

*பொருட்களாக பங்களிப்பு செய்திட*
📘 தேவையான கற்றல் பொருட்கள்:

Pens, Pencils, Erasers, Sharpeners, Scissors, School bags, Markers, Exercise books,
Drawing pads, Scrap books, Geometry boxes, Pencil boxes/cases, Crayons, Glue,
Rulers, Color pencils, Folders/Files
Lunch boxes, Water Bottles.

📞 தொடர்பு எண்கள்:

R.M. Imran (President) – 0769188860
A.M. Arham (Treasurer) – 0769007323

*பணமாக பங்களிப்பு செய்திட*
🏦 வங்கி விபரம் (Treasurer):

A.M. Arham
People’s Bank – Deltota
257200110060901

اللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ، مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
"ஒருவர் தனது சகோதரனுக்கு உதவினால், அல்லாஹ் அவனுக்கு உதவுவார்."

உங்களுடைய சிறிய உதவி கூட,
📚 ஒரு மாணவனின் கல்வியை பாதுகாக்கும்,
💡 அவர்களின் கனவுகளை மீட்டெடுக்கும்,
🎨 அவர்களின் நாளையை வண்ணமயமாக மாற்றும்.

நாம் ஒன்றிணைந்து, இந்த சிறிய இதயங்களுக்கு ஒரு அழகான நாளையை உருவாக்குவோம்.
— Organized by Deltota Higher Education Student Association(HESAD)

K/ENASALGOLLA CENTRAL COLLEGE*ANNUAL GENERAL MEETING- 2025*NOV 23, 2025 | SUNDAY | 2:00 PMAT SCHOOL MAIN HALLNOTE: NEW S...
12/11/2025

K/ENASALGOLLA CENTRAL COLLEGE

*ANNUAL GENERAL MEETING- 2025*

NOV 23, 2025 | SUNDAY | 2:00 PM
AT SCHOOL MAIN HALL

NOTE: NEW SDEC COMMITTEE WILL BE FORMED

More info: Secretary Mr. D.M. Thawfeek - 0778672767

அன்பார்ந்த  பெற்றோர்கள்!பாடசாலை பழைய மாணவர்களே!பாடசாலை பற்றுள்ள  நல் உள்ளம்  கொண்ட  சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் அஸ்ஸலா...
02/09/2025

அன்பார்ந்த பெற்றோர்கள்!
பாடசாலை பழைய மாணவர்களே!
பாடசாலை பற்றுள்ள நல் உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகளே
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

க /எனசல்கொல்ல மத்திய கல்லூரி
எமது பாடசாலை அதிபர் ஓய்வு பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதால் எமது பாடசாலைக்கு தகுதியான அதிபரின் தேவை உணரப்பட்டுள்ளது இது சம்மந்தமாக முன்னதாக உங்கள் கவனத்துக்கு எத்திவைப்பதோடு இது சம்மந்தமாக நாம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வதற்காக
எதிர்வரும்

05/09/2025 வெள்ளிக்கிழமை பி.ப 2.15 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறும்

கூட்டத்திற்கு கட்டாயமாக சமூகமளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்

D. M. தவ்பீக் GS
செயலாளர்
க /எனசல்கொல்ல மத்திய கல்லூரி ( பாடசாலை நிறைவேற்றும் குழு)

பெற்றோர்கள் பிள்ளைகள்மீது கொஞ்சம் கவனமெடுத்தால்பாடசாலையில் வீண் பிணக்குகளைத் தடுக்கலாம்.--------------------------------...
07/08/2025

பெற்றோர்கள் பிள்ளைகள்மீது கொஞ்சம் கவனமெடுத்தால்
பாடசாலையில் வீண் பிணக்குகளைத் தடுக்கலாம்.
----------------------------------------------------------------------------------
அன்பான பெற்றோர்களே!
எமது பிள்ளைகள் பாடசாலைக்கு ஆயத்தமாகிச் செல்லும்போது கவனம் செலுத்துகிறீர்களா?
பிள்ளையின்
* தலைமுடி பாடசாலை மாணவர்களுக்குப்
பொருத்தமானதாக வெட்டப்பட்டுள்ளதா?
* சீருடை நேர்த்தியாக உள்ளதா?
* பாடசாலை இலச்சினை
கழுத்துப்பட்டி முறையாகக்
கட்டியுள்ளாரா?
* பாதணிகளை அணிந்துள்ளாரா?
* புத்தகங்கள், புத்தகப்பை ஒழுங்காக
உள்ளதா?
* தேவையற்ற பொருட்கள் ஏதாவது
உள்ளதா?
* பாடசாலைக்கு சென்றடைவதற்குப்
போதிய நேரத்தில்
பயணமாகிறாரா?
* சேர்த்து செல்லும் நண்பர்,நண்பிகள்
யார்?
* பாடசாலை முடிந்து உரிய நேரத்திற்கு
வீடுவந்து சேர்கிறார்களா?

போன்ற விடயங்களில் பெற்றோர்கள் கவனமெடுக்காதபோது பாடசாலையில் இவைகளுக்காக அதிக நேரமொதுக்க வேண்டி ஏற்படுகிறது.
கண்டும் காணாமல் விடமுடியாது. இதனைச் சரிசெய்யும் முயற்சிகளின் போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே தொடர் முரண்பாடு தோன்றுகிறது.

மாணவர்களை ஏதோவொரு முறையில் கட்டுப்படுத்த முற்படும்போது பெற்றோர்கள் ஒத்துழைக்க மறுப்பதன் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடு உருவாகிறது.
இதனால் ஆசிரியர்கள் கண்டும் காணாமல் கற்பித்தலோடு நின்று விடுகின்றனர். இது மாணவர்கள் ஒழுக்கவீனங்களுக்கு வித்திடுகிறது.

மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் அடைவு மட்டம் தொடர்பாக கலந்துரையாடலுக்கு பெற்றோர்களை அழைக்கும்போது யாரோடு விடயங்களைக் கலந்துரையாடவேண்டிய தேவை உள்ளதோ. குறிப்பாக அப்பெற்றோர் கூட்டத்திற்கு வருவதில்லை.
ஆனால் பிள்ளைகளின் ஒழுக்கம்பற்றி ஆசிரியர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால். சட்ட வல்லுனர்களாக சண்டைக்கு வருவது அவர்களே!
ஆசிரியர்கள்மீது குறைபாடிருந்தால் பெற்றோர்கள் கேட்கவேண்டும். அவ்வாறே பிள்ளைகளின் விடயம் சம்பந்தமாக பெற்றோர்களை அழைக்கும்போதும் பாடசாலைக்குள் வரவேண்டும்.

எனது பிள்ளையின் ஒழுக்கத்திற்கு நானே முதலில் பொறுப்பேற்கவேண்டும்.
பிள்ளையின் அடைவுகள்,பாராட்டுக்கள், வெற்றிகளைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சியடைய வேண்டும்.
மாறாக பிள்ளைகள் வழிதவறும்போது நல்வழிப்படுத்தவேண்டியதும். தோல்வி அடையும்போது தட்டிக்கொடுத்து சரியான பாதைக்கு வழிகாட்ட

க/எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்(2005 O/L )முஹம்மது சியாட் சுல்தான்செயலாளர் - நுவரெலியா பிரதேச சபை_(நானுஓய)மு...
07/08/2025

க/எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர்
(2005 O/L )

முஹம்மது சியாட் சுல்தான்
செயலாளர் - நுவரெலியா பிரதேச சபை_(நானுஓய)
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், உயர் சேவை. (Management servicers officers service -super Grade )

இவர் தெல்தோட்டை பிரதேசத்திற்குட்பட்ட மெடிஹென எனும் கிராமத்தின் திரு. முஹம்மது சுல்தான் மற்றும் திருமதி சித்தி மர்லியா தம்பதிகளின் மகனாவார்.

க/எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் தனது ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை எமது பாடசாலையில் தொடர்ந்த இவர், பல்வேறு அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகளை வகித்தவர்.
அந்தவகையில்....

▪️மத்திய மாகாண சபையின் பிரதான மற்றும் கல்வி அமைச்சில் (8 வருடம் )சேவையாற்றி மத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு தனது உயர்ந்த பட்ச சேவையை வழங்கியிருந்தார்.
பின்னர் கம்பளை கல்விப் பணிமனையிலும் (3வருடம் )
பணியாற்றினார்.
இறுதியாக இலங்கையின் உயர் சட்ட பீடமான பாராளுமன்றத்தில் (11.5 மாதங்கள் ) பணியாற்றி

2025.08.01ம் திகதி நுவரெலிய பிரதேச சபையின்
(நானுஓயா) செயலாளர் பதவிக்கான நியமனக் கடிதத்தை மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயாலாளரிடமிருந்து பெற்றுக் கொண்டார். இன்று 07/08/2025 உத்தியோக பூர்வமாக பதவி ஏற்கின்றார்.. அல்ஹம்துலில்லாஹ்

2022-2024
க/எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினராகவும் கடமையாற்றினார்

சமூக சிந்தனையில் ஆழ்ந்த சிந்தனையுடைய
இவரது பயணத்தை அல்லாஹ் மென்மேலும் சிறந்ததாக ஆக்கி வைப்பானாக.
ஆமீன்

INTER SCHOOL PREMIER LEAGUE (EIPL)- Season 102-08-2025 @ WANAHAPUWA ANNOOR LAKESIDE PLAY GROUNDஎமது பாடசாலையின் மாணவ தலை...
03/08/2025

INTER SCHOOL PREMIER LEAGUE (EIPL)- Season 1
02-08-2025 @ WANAHAPUWA ANNOOR LAKESIDE PLAY GROUND

எமது பாடசாலையின் மாணவ தலைவர் சபையின் ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி தொடர் 02/08/2025 வனஹபுவ அன்னூர் விளையாட்டு கழக மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

பழைய மாணவர் சங்கமும், உறுப்பினர்கள் சிலரும் பங்களிப்பு செய்தமை சிறப்பம்சமாகும்.
ஏற்பாட்டு குழுவிற்கு பாராட்டுக்கள்

BoaBoard of Prefects- K/Enasalgolla Central College

K/ ENASALGOLLA. C. C.Inter School Premiere League Cricket Tournament -2025Season -0102-08-2025At Wanahapuwa Annoor Lakes...
01/08/2025

K/ ENASALGOLLA. C. C.
Inter School Premiere League Cricket Tournament -2025
Season -01

02-08-2025
At Wanahapuwa Annoor Lakeside playground

All are warmly welcome

🌟 POWER WITH PURPOSE 🌟💼 A Leadership Campaign for PrefectsPresented by HESAD – Deltota📍 Venue: Enasalgolla Central Colle...
04/07/2025

🌟 POWER WITH PURPOSE 🌟
💼 A Leadership Campaign for Prefects

Presented by HESAD – Deltota

📍 Venue: Enasalgolla Central College
📅 Date: 5th – 6th July 2025
🕘 Time: 9:00 AM onwards

Are you ready to take your leadership to the next level? 🚀

🔑 Topics Covered:
✅ Real-world leadership & responsibility
✅ Overcoming challenges as a student leader
✅ Becoming a role model through daily actions

Join us for an inspiring two-day event organized by HESAD - Deltota, featuring dynamic key speakers who will ignite the leader within you!

🎙️ Haja Riyas Mohammed
🎙️ M.U. Najath Ahamed

📅 5th - 6th July 2025
🕘 From 9:00 AM onwards
📍 Enasalgolla Central College, Deltota

Empowering young leaders to lead with confidence and purpose. Don’t miss out! 💼🔥

விசேட தேவையுடையபிள்ளைகளும் உளவளத்துணைச் சேவையின் அவசியமும்எனும் தலைப்பில் இந்நூல் உருபெறுகின்றது.விசேட தேவையுடைய பிள்ளைக...
24/05/2025

விசேட தேவையுடையபிள்ளைகளும் உளவளத்துணைச் சேவையின் அவசியமும்

எனும் தலைப்பில் இந்
நூல் உருபெறுகின்றது.
விசேட தேவையுடைய பிள்ளைகளும் உளவளத்துணைச் சேவையின் அவசியமும்,
கேட்டல் குறைப்பாடுடைய பிள்ளைகள், பார்வைக் குறைப்பாடுடைய பிள்ளைகள், அதீத
செயற்பாடும் அவதானக் குறைப்பாடுமுடைய பிள்ளைகள், விசேட தேவையுடைய
பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆகியோருக்கு உளவளத்துணைச் சேவையின்
அவசியத்தை, விஞ்ஞான பூர்வமான முடிவுகளை தொகுத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய பிள்ளைகளுடன் செயலாற்றும் நபர்கள் மற்றும் உளவளத்துணைச்
சேவை வழங்குபவர்கள் தம்மை இற்றைப்படுத்திக்கொள்ள இந்நூல் பெரிதும் உதவியாக
இருக்கும் என நம்புகிறேன்.

தாஹிர் நூருல் இஸ்ரா
(உளவளத்துணை ஆலோசகர்)
உதவி விரிவுரையாளர்
உட்படுத்தல் கல்வித்துறை
தேசிய கல்வி நிறுவகம்
மகரகம


Highlights

27/04/2025

"கல்லூரித் தினம்-2025"
க /எனசல் கொல்ல மத்திய கல்லூரி
day


Address

KANDY Road
Deltota
20430

Alerts

Be the first to know and let us send you an email when Enasalgolla Past Pupils Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category