20/05/2026
க/அல் அக்பர் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது..
🔴🟣🔵🟠🟡🔴⚫🟣🟣
க/அல் அக்பர் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த “செயற்பட்டு மகிழ்வோம்” நிகழ்வு, “ஒன்றிணைவோம்… பலம் பெறுவோம்…” எனும் மகுட வாசகத்தின் கீழ் பாடசாலை முதல்வர் திரு S.I.M. நஸ்மின் ஆசிரியர் அவர்களின் தலைமையில் 2026.05.19 அன்று ரல்லிமங்கொட அல்-அமான் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் *பிரதம அதிதியாக க/உடபிடிய அல்ஹுஸ்னா முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் க/எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய அல்ஹாஜ் எம்.ஜீ. நயீமுல்லாஹ் சேர்* அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், *விசேட அதிதியாக கண்டி கல்வி பணிமனையின் சுகாதார மற்றும் உடற்கல்விப் பாட வளவாளர் திரு எம்.ஜீ. நூருல்லாஹ் ஆசிரியர்* அவர்களும், எமது பாடசாலைக்கான பொறுப்பாசிரியை *திருமதி A.W.J. மிஸ்ரியா ஆசிரியை* அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும், நிகழ்வுகள் யாவும் *ஆசிரியர் திரு M.B.M. ஜெஸீல்* அவர்களினால் சிறப்பாகவும் கட்டுப்பாடுடனும் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், எமது பாடசாலையில் கடமைப்புரிந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான *திருமதி M.S.N. ஸபீனா ஆசிரியை மற்றும் திருமதி A.F. ஹஸ்ஸானா ஆசிரியை* ஆகியோரும் விசேட விருந்தினர்களாக கலந்து நிகழ்வின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கினர்.
அத்தோடு, கண்கவர் வினோத உடைப் போட்டியும் உற்சாகமூட்டிய Drill Display நிகழ்வும் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்த சிறப்பம்சங்களாக அமைந்தன.
இந்நிகழ்வின் வெற்றிக்குப் பின்னால் ஜெஸ்மின் இல்ல பொறுப்பாசிரியர்களான *திருமதி ரபீகா ஆசிரியை, திருமதி ஷாகிரா ஆசிரியை* ஆகியோரின் அர்ப்பணிப்பும், லோட்டஸ் இல்ல ஆசிரியர்களான *திருமதி நுஸ்ரத் மற்றும் செல்வி பஹ்மிதா ஆசிரியை* ஆகியோரின் பங்களிப்பும் முக்கிய பங்காற்றின.
ஜெஸ்மின் மற்றும் லோட்டஸ் இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற “செயற்பட்டு மகிழ்வோம்” போட்டிநிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நடப்பாண்டிற்கான வெற்றிக்கிண்ணத்தை ஜெஸ்மின் இல்லம் பெருமையுடன் சுவீகரித்துக்கொண்டது.
மேலும், வெற்றி பெற்ற அணிக்கான வெற்றிக் கிண்ணம் பிரதம அதிதியினால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
*“ஒன்றிணைவோம்… பலம் பெறுவோம்…”*