தரம் 5 புலமை பரிசில் பரீட்சை2025/08/10 🌱😃
பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் வாழ்த்துக்களும் ஆசிகளும்.
Sri Lankan Students Media Centre
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Lankan Students Media Centre, Education, Colombo.
10/08/2025
சதாமியாபுரம் அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசலினால் மாணவர்களுக்கு பாராட்டு விழா
புத்தளம் சதாமியாபுரம் அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில், 08.08.2025 ஜும்ஆ தொழுகையின் பின்னர், 2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்குக்கான பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பள்ளிவாசலின் தலைவர் எம்.ஆர்.எம். ராபி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில், என்.ஸைத் (ஹாஷிமி) "கல்வியும் பண்பாடும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். , அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசலின் கௌரவ செயலாளர் மபாஸ் (இஹ்யாஈ) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்வுகள் நெறிப்படுத்தப்பட்டன.
பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் தனவந்தர்கள் மற்றும் மஹல்லாவாசிகள் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. இது, மாணவ மாணவிகளின் எதிர்கால வாழ்வுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாகவும், அவர்களின் நம்பிக்கையை உருவாக்கும் நிகழ்வாகவும் அமைந்தது.
கெளரவிக்கப்பட்ட மாணவர்கள்:
- எம்.என். பாதிமா
- ஆர்.எப். ஷிப்னா
- டி.ஆர்.எப். ரூமா
- யு.எப். அஸ்லா
- என்.ஏ.எப். ஸுஹா
- எம்.என்.எம். நஸ்கான்
- ஆர்.எப். ரிலா
- எம்.ஆர்.எம். முஸ்பிக்
- எம்.ஆர்.எம். அதீப்
- எம்.எம். ரிப்தி
ஊடக தகவல்: அஷ்ஷெய்க் அப்துல் மலிக் (மன்பஈ)
10/08/2025
சௌமியா சர்மாவின் வெற்றிக் கதை
கடின உழைப்பாலும், விடா முயற்சியினாலும் வெறும் நான்கு மாதங்களில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சௌமியா சர்மாவின் வெற்றிக் கதை தான் இது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியை சேர்ந்த செளமியா சர்மா தன்னுடைய 16 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழந்ததால் “காது கேட்கும் கருவியின்” உதவியுடனே தனது பள்ளி படிப்பை முடித்தார்.
பள்ளி படிப்பை அதிக உற்சாகத்துடன் முடித்த செளமியா, டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைந்து தனது இளங்கலை பட்டத்தை பெற்றார்.
தனது கல்லூரி பட்டப்படிப்பின் போதே, காது கேளாதோரின் இட ஒதுக்கீட்டிற்காக அப்போதைய தலைமை நீதிபதிக்கு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதினார்.
அப்போது மாற்றுதிறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் கண் பார்வை குறைப்பாடு உள்ளவர்களும், உடல் ஊனமுற்றவர்களும் மட்டுமே பயன்பெற்று வந்த நிலையில், செளமியாவின் இடஒதுக்கீடு கோரிக்கையை எந்தவொரு சட்ட போராட்டங்களும் இல்லாமல் நீதிபதி ஜி. ரோஜினி நிறைவேற்றினார்.
கல்லூரி படிப்பை முடித்த செளமியா ஷர்மா, 2017ம் ஆண்டுக்கான UPSC தேர்வில் களமிறங்கினார். தேர்வுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில், தன்னுடைய சரியான திட்டமிடல் மற்றும் தினமும் 6 முதல் 6 மணி நேர கடின உழைப்பின் காரணமாக முதல் முயற்சியிலேயே முதல்நிலை தேர்வில் வெற்றி அடைந்தார்.
தொடர்ந்து விடாமல் போராடி செளமியா, தனது உடல்நிலை குன்றிய இருந்த போதிலும் இரண்டாம் கட்ட தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
தான் போராடி பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு வாய்ப்புகள் இருந்த போதிலும், அதனை பயன்படுத்தாமல் பொது பிரிவின் கீழ் போராடி UPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று இந்திய அளவில் 9வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
நாக்பூரில் துணை ஆணையராக(DCP) உள்ள செளமியா ஷர்மா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சித் சந்தக்கை திருமணம் செய்து செய்துள்ளார்.
08/08/2025
அட்டாளைச்சேனை ஆலங்குளம் றஹூமானியா வித்தியாலயத்தில் கடந்த 2024 க.பொ.த.(ச/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும்
அவர்களுக்காக கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (08) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் KLM. Munas (SLPS). அவர்களின் தலைமையில் நடைபெற்றது
04/08/2025
மாணவர் அரசியலுக்கு தடை இல்லை, ஆனால் வன்முறை பகிடிவதைக்கு மன்னிப்பு வழங்கப்படாது
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் மாணவர் அரசியலுக்கு எந்த வகையிலும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும், ஆனால் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
29/07/2025
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண மட்ட சிங்கள மொழித்தின போட்டி நிகழ்ச்சிகளில் முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்றைய காலை ஆராதனை நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
29/07/2025
அகில இலங்கை தமிழ்மொழி தினம் மாகாண மட்ட போட்டிகளில் நுவரெலியா கல்வி வலயம் சென்கிளயார் த.ம.வி மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக குழு நடன போட்டி (பொம்மலாட்டம்) பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். பாடசாலையில் நடனப்பிரிவு ஆரம்பித்து குறுகிய காலத்தில் நடனத்துறையில் மாகாண மட்டத்தில் இவ்வெற்றியை பெற்றுத்தந்த ஆசிரியை திருமதி.S.ரஞ்சனி மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர்.வே.தினகரன் தலைமையில் நடைபெற்றது.
29/07/2025
27/07/2025
கல்விச் சுற்றுலா - 2025
**************************
எமது கமு/கமு/அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 2025 ம் கல்வியாண்டிற்கான இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஐந்து கல்வி சுற்றுலாக்கள் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில் எமது நான்காவது மூன்று நாள் கல்விச் சுற்றுலா 01-07-2025ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணியளவில் அதிபர் Al-haj AC. Haamithu sir அவர்களின் தலைமையில் தரம் 10 மற்றும் 11 இல் கல்வி பயிலுகின்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்குபற்றுதலுடன் இச் சுற்றுலாவானது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகியது.
முதலாம் நாள்:
பராக்கிரமபாகு சமுத்திரம், பொலநறுவை மெழுகு நூதனசாலை, பேராதனை பல்கலைக்கழகம்
போன்றவற்றினை பார்வையிட்டு அன்று இரவு மாவனல்லை சாகிரா கல்லூரியில் தங்கியிருந்தனர்.
இரண்டாம் நாள்:
கொழும்பு நகரில் பாராளுமன்றம், கோள் மண்டலம், விகார மகா தேவி பூங்கா, தாமரை கோபுரம், Galle Face போன்றவற்றை பார்வையிட்டு அன்று இரவு கொழும்பு அல்- ஹிக்மா கல்லூரியில் தங்கினர்.
மூன்றாம் நாள்:
கொழும்பு துறைமுகம், ஜனாதிபதி மாளிகை, காலி கோட்டை, மாத்தறை நகரம் போன்றவற்றை பார்வையிட்டு நிந்தவூரை வந்தடைந்தனர்.
இச் சுற்றுலாவில் மாணவிகள் பல்வேறு இடங்களை பார்வையிட்டு பயன்பெற்றனர்.
இக்கல்விச் சுற்றுலா வெற்றிகரமானதாகவும் சிறப்பானதாகவும் அமைய ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்.
ஊடகப்பிரிவு,
கமு/கமு/அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலை
27/07/2025
புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு...
27/07/2025
கண்டி திகன இரஜவலை இந்து தேசிய கல்லூரியில் 19/07/2025 அன்று நிறைவுபெற்ற மத்திய மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் இரஜவலை பாடசாலை 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன், 6 போட்டிகளில் தேசிய மட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
27/07/2025
அதிகாலை வரை டியூசன் இவர்கள் சிறுவர்களா? அல்லது இயந்திரமா? -ஜனாதிபதி
குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள், பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள், திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.
பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டார்.
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752 உள்ளன.
அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141, 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாகவுள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3,144 உள்ளன.
குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.
சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்க வேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Colombo