10/05/2026
அகில இலங்கை அஹதியா மத்திய சம்மேளனத்தினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட அஹதிய்யா இடைநிலை தேசிய சான்றிதழ் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த பரீட்சையில் எமது அல் ஹிக்மா அஹதியா பாடசாலை சார்பாக 10 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
மாஷா அல்லாஹ்! பரீட்சைக்குத் தோற்றிய 10 மாணவர்களும் மிகச் சிறந்த முறையில் சித்திபெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
எமது பாடசாலை மாணவிகளான:
🥇 AA Hajara
🥇 MF Aasiya
ஆகிய இருவரும் மூன்று பாடங்களிலும் 'A' சித்தி (3A) பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்களைச் சிறந்த முறையில் வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 💐
நிர்வாகம்:
அல் ஹிக்மா அஹதியா பாடசாலை