01/06/2026
Our little butterflies
The Headmistress, teachers, and parents of Mangaiyar Maria Montessori organized a Vesak Perahera to remember the birth of Lord Buddha and to promote understanding, respect, and appreciation of different traditions among our little butterflies, fostering an awareness of cultural diversity from an early age.
31/05/2026
சாதனைப் பெண்களின் மீண்டுமொரு முயற்சி
கோலாகலமாக நிறைவெய்திய Majesta fun fair 2026
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய சூழல் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக திருவிழா கோலந்தான்.
வித்தியாலயத்தின் மாணவத் தலைவியர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "Majesta fun fair 2026 " மே மாதம் 29,30 ஆகிய திகதிகளில் சிறப்புற அமைந்தது.
திட்டமிட்ட மிகச் சிறந்த ஏற்பாடுகள் பாராட்டும் படியாக அமைந்திருந்தன.
வெறுமனே கற்றல் என்ற செக்கு மாட்டுத்தனத்தில் சலிப்படைந்திருந்த எமது தலைநகர் குழந்தைகளுக்கு முழுக்க முழுக்க ஒரு வேறுபட்ட பொழுது போக்கை இந்த இரண்டு நாட்களும் உண்டாக்கித் தந்ததை யாரும் மறுக்க முடியாது.
இந்த இடத்தில் எங்கள் பாடசாலை ஒரு சிறந்த பயிற்சி கூடமாகவும் இருப்பதை சொல்லியாக வேண்டும் .
தங்களுக்குள் அணிபிரிந்து மிகவும் பொறுப்பாக எங்கள் மாணவியர்கள் தத்தமது கடமைகளை செவ்வனவே செய்து கொண்டார்கள்.
பார்வையாளர்களை அஞ்சி உறைய வைத்த Horror House ஒருபுறம். மாய வித்தைகளால் எங்கள் கண்களில் மண்ணைத் தூவிய Magic show ஒரு புறம்.
பாதாள உலகத்திற்கு பயங்கர சாகசங்களை நிகழ்த்தி பயணப்பட்டு மீண்டதாய் திளைக்க வைத்த 12 D காட்சிகள் ஒரு புறம். திகட்ட திகட்ட நிறைந்து கிடந்த தீன் பண்டங்கள் ஒரு புறம். கண்ணை கவரும் வண்ண கோலமாய் துணிமணிக் கடைகள். வேடிக்கை வினோதங்கள். என்று ஒரே உல்லாச மயம்தான்.
இந்த ஒட்டு மொத்த சிறப்பிற்கும் வேராய் நின்ற அத்தனை பெரு மக்களையும் பாராட்டுவது என் கடமை என்று கருதுகிறேன்.
சின்ன வயதிலேயே நல்ல பொறுப்புக்களை சுமந்து பழகும் எங்கள் மாணவ செல்வங்களுக்கு எதிர்காலம் நலமே அமையும் என்ற மகிழ்ச்சியோடு அவர்களையும் நெஞ்சார வாழ்த்துவோம்.
மொத்தத்தில் இந்த வெற்றிக்கு காரணமான அத்தனை பேருக்கும் ஒரு Salute 🫡
இவ்வண்ணம்
கம்பநேசன்
" சாதனை செய்க பரா சக்தி "
Special appreciation & thanks to our media team, ‘Radio Saivians’, for making Majesta'26 a highly engaging and lively event. The event was further energized through exciting music, interactive interviews, and effective promotion of vendors, which greatly enhanced the overall experience.
I sincerely appreciate your creativity, enthusiasm, and tireless efforts in keeping both days entertaining and vibrant. Well done, and a big applause to the entire team for your dedication and outstanding contribution.
*Principal*
Closing Ceremony
30/05/2026
Today is the 2nd and last day of our Fun fair organised by the Perfects Guild
29/05/2026
Majesta’26, the fun fair organised by the Prefects’ Guild of Saiva Mangaiyar Vidyalayam, commenced on Friday(today), 29th May 2026, and will continue for two days.
The grand opening of the fun fair was inaugurated by our Manager, Mrs.Yaso Gunaseelan, and our Principal, Mrs. Arunthathy Rajavijayan.
Numerous vendors featuring food stalls, games, clothing and entertainment activities have partnered to make this event colourful and enjoyable for everyone.
This fun fair has been organised to provide students with mental relaxation and enjoyment apart from their academic activities and hectic learning schedules.
All are cordially invited to come and enjoy Majesta’26.
27/05/2026
அகில இலங்கை தமிழ்மொழித்தினம் 2026.
இவ்வருடம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில்....
கடந்த வாரம் நடைபெற்ற கோட்ட மட்டப்(Divisional level) போட்டிகளில் 21 போட்டி நிகழ்ச்சிகளில் எமது பாடசாலை கலந்து கொண்டு பெற்ற வெற்றிகள்...
முதலிடங்கள் - 15
இரண்டாம் இடங்கள் -2
மூன்றாம் இடங்கள் - 2
இதனடிப்படையில் வலய மட்டப் போட்டிகளுக்காக கோட்ட மட்டத்தில் வெற்றியீட்டிய 17 போட்டிகளும் அத்துடன் 4 குழு நிகழ்ச்சிகளுமாக 21 போட்டிகள் தெரிவு செய்யப்பட்டு
வலய மட்ட போட்டிகளில்(Zonal level ) கலந்து கொண்டன. அதனடிப்படையில்...
1ம் இடம்
1. தமிழறிவு பிரிவு 2
2. தமிழறிவு பிரிவு 3
3. நாட்டார் பாடல்
4. இலக்கிய நாடகம்
5. நடனம் தனி பிரிவு 1
6. நடனம் தனி பிரிவு 2
7. நடனம் தனி பிரிவு 3
8. நடனம் தனி பிரிவு 4
9. நடனம் குழு 1
10. இசை குழு 1
2ம் இடம்
1. பேச்சு பிரிவு 2
2. பாவோதல் பிரிவு1
3. இசை தனி பிரிவு 1
4. இலக்கிய விமர்சனம் பிரிவு 4
5.தமிழறிவு பிரிவு 4
6. நாட்டிய நாடகம்
3ம் இடம்
1. இலக்கிய விமர்சனம் பிரிவு 3
2.இசை தனி பிரிவு 3
3. பேச்சு பிரிவு 1
முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட 10 போட்டி நிகழ்ச்சிகளும் மாகாண மட்டப்(Provincial level) போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.
இதில் பங்குபற்றிய எமது மாணவச் செல்வங்களிற்கும் பயிற்றுவித்த ஆசான்களிற்கும்
பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
26/05/2026
40 ஆண்டுகாலம் தமிழுக்கும் சைவத்திற்கும் கொழும்பு இராமக்கிருஷ்ணமிஷன் மூலம் பெருந்தொண்டாற்றி ஓய்வு பெற்று ஆன்மீக தவவாழ்வு மேற்கொள்ள இந்தியா செல்லவுள்ள சுவாமி இராஜேஸ்வரானந்தஜி மகாராஜ் அவர்களை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டனர்.
சைவமங்கையர் கழகத்தின் புதிய தலைவியாக பதவியேற்கவுள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் எமது பாடசாலையின் முன்னாள் சிரேஷ்ட மாணவத்தலைவியுமான திருமதி யசோ குணசீலனுடன் கழக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
14/05/2026
Your golden opportunity is here! Join hands with us and add your flavor to *MAJESTA’26.* 🌟🍔🛍️ Book a stall now — thrills, treats & good vibes await. 💥
’26
/27
.Empower.Elevate
10/05/2026
Little Friends Camp
Together we learned, played, and created beautiful memories at the successful Little Friends Camp 2026. Proudly completed the Little Friends Camp with teamwork, fun, and happy memories. 🌈
Little Friends Camp was a great success!
Well done teachers
Mrs. Niransana Aravinthan
Mrs. Mathyroobi Jeyabalan
Mrs. Anusha Pragash
Mrs. Janany Prasanna
Maithily subramaiyam
Miss. Ashvina Vasanthamanoharan
Mrs. Sinthugowry Abarajithan