04/08/2023
Much awaited a comprehensive dress making course conducted by a reputed & qualified instructor, will be commenced in our training centre.
We welcome all our young & interested ladies who could seek some additional income or who are keen to stitch their own dresses to come & join this course.
Course is designed with basic to advanced skill improvement.
Don’t miss this opportunity, come join & register your self for this invaluable course.
04/02/2023
On behalf of KIEC, We Welcome Everyone to Grace this Occassion!
04/02/2023
*நீங்கா நினைவுகள்.*
அன்று 04.02.2018 காலை 8.00 மணியிருக்கும். தொலைபேசியில் எனக்கோர் அழைப்பு வந்தது. *"ரஸீன், குறைஷா டீச்சரின்( முன்னாள் அஹதிய்யா பாடசாலை சிரேஷ்ட ஆசிரியை) ஹஸ்பன்ட் (Husband) மௌத்தாகி விட்டார். அவங்கள பார்க்கப் போகனும், அவங்கட வீட்டுக்குப் போக வேண்டிய வழியை சொல்லுங்க." என்றது மறுபுறம் இருந்து வந்த குரல். நானும் எனது மனைவியும் போக வேண்டிய பாதையை ஒருவாராகச் சொல்லி முடித்தோம். பின்னர் காலை 9.00 மணியளவில் மற்றுமொரு தொலைபேசி அழைப்பு என் நண்பர் Faizer இடமிருந்து வந்தது. "எனது மாமி மௌத்தாகி விட்டார்." என்றதும், அதைக் கேட்ட எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
அன்று வரைக்கும் தேவை நிமித்தம் அவரின் வீடு செல்லும் போதெல்லாம் தேநீர் தராது அவர் என்னை அனுப்பியதே இல்லை. அல்லது ஏதாவதொன்று சாப்பிடத்தந்து அனுப்புவதே அவரின் வழக்கம். யாரையும் உபசரிப்பதிலும் சரி, தானதருமங்கள் வழங்குவதிலும் சரி, அல்லது மற்றவர்களைப் பாராட்டுவதிலும் சரி அவர் எந்தவித கஞ்சத்தனத்தையும் காட்டியதில்லை. கடைபாதையில் யாருக்காவது பணத்தட்டுப்பாடுகள் ஏற்படின், அவ்வப்போது கடனாகவும், இனாமாகவும் திருப்பித் தருவார்கள் என்ற எந்தவித எதிர்பார்ப்புமின்றி உதவிகளைச் செய்யும் நல் உள்ளம் படைத்த பெண்மணியாகத் திகழ்ந்தவர்.
நானறிந்த வகையில், தனது எல்லாப் பேரப் பிள்ளைகளையும் அரவணைத்துச் சீராட்டி வளர்ப்பதில் எந்தவித பாகுபாடும் காட்டாது அயராது பாடுபட்டு வந்தவர். அவரது மகள்களாகட்டும், மகன்களாகட்டும் "உம்மா பார்ப்பார்கள்" என்ற நம்பிக்கையில் அவர்களின் பிள்ளைகளை இவரிடம் விட்டுச் செல்வது வழக்கம். அதே போன்று தன் குடும்பத்திலுள்ள சகோதர சகோதரிகளின் எல்லா விடயங்களிலும், அது பிரச்சினைகளை தீர்ப்பதிலாகட்டும் அல்லது அவர்களின் நலனில் பங்கு கொள்வதிலாகட்டும் எப்படி இருப்பினும் எவ்வித தயக்கமும் இன்றி எச் சந்தர்ப்பத்திலும் பின் வாங்காது குடும்ப எஜமானியாக இருந்து மும்முரமாக இயங்கிய ஒருவர் என்றே நான் உறுதியாகக் கூறுவேன்.
அது மட்டுமல்லாது எமது அஹதிய்யா பாடசாலையின் அனைத்துப் பிள்ளைகளையும் வெறுமனே கற்றலில் மாத்திரம் ஈடுபாடு காட்டாது பாடசாலையின் பல நடவடிக்கைகளிலும் பங்களிப்புச் செய்வதற்கு ஆர்வமூட்டி அவர்களை வழி நடத்திய ஒரு சிறந்த தலைவியாக, தாயாக இருந்தவர். எமது பாடசாலையின் பாலர் வகுப்பு ஆரம்பிப்பதற்குப் பணத்தேவை ஏற்பட்ட போது அதை அறிந்து கொண்ட அவர் சுயமாகவே முன்வந்து அப்பணத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறியதோடு அப்போது எமது கொம்பனித் தெரு இஸ்லாமியக் கல்வி நிலையத்தின் உதவி செயலாளராகப் பணி புரிந்த *ஜே. எம். ஏ. காதர் மாஸ்டரிடம்* ஒரு தொகைப் பணத்தைத் தந்து உதவி அந்தப் பாலர் பாடசாலையை ஆரம்பிப்பதில் உதவி புரிந்தவர்களில் ஒருவர்.
அல்லாஹ் தஆலாவின் உதவியோடு, இன்று வரைக்கும் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக *"பைத்துள் ஹிக்மா"* பாலர் பாடசாலை தொடர்ந்து நடைபெறுவதற்கு மைல் கல்லாக விளங்கியவர்.
தனது 5 பிள்ளைகளான *மின்சாப் , முப்தியா மஜீதா , இர்ஷாத் ,மிப்ராஹ் , இர்ஃபான்* ஆகியோரின் முன்னேற்றத்தில் பாரிய பங்குகளை வகித்தவர் மட்டுமின்றி தனது கணவரான *அப்துல் ஹமீத் Uncele ளுடன் தோலோடு தோல் நின்று அயராது பாடுபட்டவர்.
இன்றுடன் அவர் மரணித்து ஐந்து வருடங்களாகினாலும் கூட எனதுள்ளத்தில் அவரைப் பற்றிய எண்ணங்கள் *நீங்கா நினைவுகளாக* இருக்கின்றது. அவர் தான் "ஜன்னா உம்மா" என்றழைக்கப்படும் ஜன்னத்துல் சிபாயா ( ஜன்னத் Aunty).
*யா அல்லாஹ் , அவரின் முன் ,பின் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவரின் கப்ரை விசாலமானதாக்கி ஒளிமயமாக்கி வைப்பாயாக !
அவரின் ஸதக்காக்கள், தான தர்மங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக! யா அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்க்கத்தை அவருக்கு வழங்குவாயாக. ஆமீன்!*
இப்படிக்கு,
என்றும் நீங்கா நினைவுகளுடன்
*கொம்பனித்தெரு எம் ரஸீன் மொஹிதீன்*
தலைவர் - கொம்பனித்தெரு இஸ்லாமிய கல்வி நிலையம்
(அஹதிய்யா பாடசாலை )
கொழும்பு 02.
04.02.2023.
21/01/2023
Students of KIEC Aahadiyya during their presentation on SLBC Students Majlis Programme.
KIEC Ahadhiyyah Student SLBC Programme
KIEC Ahadhiyyah Student SLBC Programme
21/01/2023
Today we had inaugurated our first Mobile Phone Repairing Course through KIEC Vocational Training Institute in the presence of Chief Guest Mr. Naizer Buhary, Chief Advisor of KIEC Al Haj SAFWAN A AZEEZ, President of KIEC Mr. M. RAZEEN MOHIDEEN, Secretary of KIEC Deshamanya A.R.M. SAFEEN, Executive committee members Mr. A.R.M. SHIYAM, Mr. M.F. FIRDAUSE, Mr. M.A. AZHAR, Mr. M.M.M. MUNEER, Course Instructor Mr. M RIZVI, Student Coordinator Mr. NASRULLA, Special Invitees AL HAJ M.R.M. ZAROOK & Mr. SHIBLY HASSIM & the students.
This is a milestone in our journey of empowering the youth with knowledge & skills.
06/12/2022
To download the application reach out below link & what’s app the application to 0771-839929.
https://kiec.lk/academic/vocational-training/mobile-phone-repairing