I thought it is good article from my whats group....
சைவ சமயத்துக்கும், இந்து மதத்துக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது!
சைவ சமயம் எல்லோரும் இன்புற்றிருக்கும் அன்பு மலை!
இந்து மதம் வருண அடிமைக் கொடுமை அதல பாதாள மடு!
சைவம் சிவத்துடன் தொடர்பு கொண்டது! மனிதன் மனிதனாக வாழும் வகையில், மனிதர் மனதைச் சமைத்து, மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை நீக்கி, அன்பே சிவம் என்று அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த பக்குவப்படுத்தும் அன்பு சமயம் சைவ சமயம்!
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்!
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்!
அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின்,
அன்பே சிவமாக அமர்ந்திருந்தாரே! - திருமந்திரம்.
அன்பு, சிவம் ஆகிய இரண்டும் வேறு வேறு என்பவர்கள் அறிவு இல்லாதவர்கள்! இவர்கள் அன்புதான் சிவமாக இருப்பதை அறிய மாட்டார்கள்! அன்புதான் சிவம் என்பதை இவர்கள் ஒருமுறை அறிந்து கொண்டு விட்டார்கள் என்றால், இவர்களும் அன்பு வடிவமாக, அன்பே சிவமாக மாறி, நிலையாக அமர்ந்து விடுவார்கள்!
இந்து மதம் மனிதனைப் பிறப்பின் அடிப்படையில் நால்வருணங்களாக - பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனப் பிரித்து, பிராமணர்களுக்கு ஏனையோர் அடிமைகளாக வாழ, சமூகத்தைக் கட்டமைக்கும் கொடிய மதம்!
சைவ சமயம் ஓர் இறைக் கொள்கை கொண்டது! சிவபெருமான் ஒருவனே இறைவன்; திருமால் உள்ளிட்ட ஏனையோர் உயிர் வர்க்கங்கள்!
இந்து மதம் பல தேவர்களை(தெய்வங்கள்) வழிபாடுகள் செய்யும் பல கடவுளர் வழிபடு வேத மதம்! (Pantheism).
சைவ சமயத்தில் சிவபெருமான் வேறு! - உயிர்கள்(ஆன்மாக்கள்) வேறு!
பிற்கால இந்து மத உபநிஷத்துக்கள் உருவாக்கிய ஓர் இறை என்னும் 'பிரமம்' -ஆன்மா - வேறுவேறு அன்று (அகம் பிரம்மாஸ்மி; தத்வமஸி!)
எங்கும் நிறைந்துள்ள சைவ சமயத்தின் இறைவன் சிவபெருமான், மனிதர்கள் உடலில் வாழ்பவன்! (அனைத்து உயிர் உடல்களுடனும்!)
இந்து மதத்தின் 'பிரமத்துக்கு' உலகங்களும், மனித உடல்களும் தீட்டானவை!
சைவ சமயத்தின் 'சிவபெருமான்', உயிர்களின் (ஆன்மா) மேல் கொண்ட அன்பால், கருணையால்,பல உலகங்களையும் கடந்த விண் எனும் தூய வெளியிலிருந்து இறங்கி வந்து, உயிர்கள்-வாழும்-உடல்களுடனேயே வாழ்ந்து, வினை நீக்கி அருளும் எளியவன் (சௌலப்பியன்)!
விண்ணின்று இழிந்து, வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்நின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உள்நின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே!
- திருமந்திரம்:உபதேசம்.1
சிவபெருமான் விண்ணிலிருந்து இறங்கிவந்து, வினைப்பயன் காரணமாக பிறவி எடுத்த உயிர்களின் மேல், தன் திருவடிகளால் காவல் தந்து, அவ்வுடலினுள் தானும் புகுந்து, அவ்வுயிருக்கு அறிவூட்டி, குற்றங்களை எல்லாம் நீக்கி, பேரின்பம் நல்கினான் என்கிறார் திருமூலதேவ நாயனார்.
வான் பழித்து, மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்!
ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்!
- திருவாசகம்: குயில் பத்து : 4(2–3)
"செய்த வினைப்பயன்கள் காரணமாக உயிர்கள் உடல்பிறவி எடுக்கட்டும்; வினையே செய்யாத நம் இறைவன் சிவபெருமானுக்கு உயிர் எடுக்கும் உடல் பிறவியில் புகுவதற்கு என்னைய்யா தலையெழுத்து?
நம் மீது கொண்ட கருணையால், அன்பால் அல்லவா அவனும் இவ் ஊனுடலில் புகுந்து, நம் உணர்வில் கலந்து அருள் செய்கிறான்! என்னே அவன் கருணை!", என்று உருகுகின்றார் மணிவாசகப் பெருமான்!
ஆனால், இந்து மதத்தின் 'பிரம்மம்' பல உலகங்களையும் கடந்து, குணங்கள் இல்லாத தூய வெளியில் மட்டுமே இருப்பதால், (உயிர்கள்) ஆன்மாக்கள் சென்று எளிதில் காண இயலாதவன்!
சைவ சமயத்தில், தாம் வாழும் உடலிலேயே உயிர்கள் (ஆன்மா) சிவபெருமானைக் காண இயலும்! (தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே! - திருமந்திரம்).
இந்து மதத்தில், ஆரியர்களின் 'பிரமம்', 'ஆன்மா'க்கள் பல உலகங்களையும் கடந்து, வானில் கடினப்பட்டுத் தேடிச் சென்று அடையவேண்டிய பொருள் என்கிறது!
சைவ சமயத்தில், தமிழ்க் கடவுள் சிவபெருமானோ, உயிர்கள்(ஆன்மாக்கள்) வாழும் உடலையே தேடி வந்து அருள் தரும் செம்பொருள் என்பதால், மாணிக்க வாசகர் சிவபெருமானை 'ஆதி பிரமம்' என்று சிறப்பித்து அழைக்கின்றார்.
"போதலர் சோலைப் பெருந்துறை, எம் புண்ணியன், மண்ணிடை வந்திழிந்து,
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம் பிரான் ஆவாரே!" - திருவாசகம்: திருவார்த்தை:1:2–4.
இந்து மதத்தில், தான் உடலல்ல என்பதைத் தானே தன் முயற்சியால் உணர்ந்து, உடலை நீங்கி, பல உலகங்களையும் கடந்து தூயவெளியான வானுக்குள் தான் 'ஆன்மா' 'பிரம'த்துடன் இணைய வேண்டும்! இந்து மதம் சொல்லும் ஆன்ம தரிசனம் மிகவும் கடுமையான பாதை!
திருமிகு. ரமேஷ் அவர்கள் கேட்ட வினா அனைவருக்கும் பயனுள்ளது என்பதால் இங்கு பகிர்கிறேன்.
திருமூலர் விளக்கும் தத்துவமசிக்கும் வேதம் விளக்கும் தத்துவமசிக்கும் வேறுபாடு இதுதான்!
திருமூலர் விளக்கும் 'தத்துவமசி'யில், உயிர் என்னும் ஆன்மா, 'எனக்குள் கடவுள்' என்கிறது!
ஆரிய வேதம் விளக்கும் 'தத்துவமசி'யில் ஆன்மா 'நானே கடவுளாக இருக்கிறேன்' என்கிறது!
'எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள் எனக்குள்ளும் இருக்கிறான்' என்பது இறையுணர்வின் உச்சம்! பார்க்கும் இடமெல்லாம் பரமனைக் காணும் பக்குவம்!
'நானே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளாக இருக்கிறேன்' என்பது அறியாமையின் வெளிப்பாடு! அகம்பாவத்தின் உச்சம்! பார்ப்பவனை எல்லாம் பலவகையிலும் ஏமாற்றி, 'நானே கடவுள்' என்று பிறரை முட்டாளாக்கும் கயவனாக மனிதனை மாற்றும்.
திருமிகு.இரமேஷ் அவர்களின் அறிவார்ந்த கேள்விக்கு நன்றி!
சைவ சமயக் கொள்கை!
சைவ சமயத்தில்
இறைவன் (பதி),
உயிர்கள் (பசு - உடலுடன் கட்டப்பட்ட உயிர் என்பதால் பசு எனப்படுகிறது),
தளைகள் (பாசம் - அறிவுப் பொருட்களான இறைவனும், உயிர்களும் இயங்கும் பல்வேறு சடப்பொருள்களாலான உலகங்கள் மாயை என்னும் சடப்பொருளால் இறைவனின் ஆணைப்படி உருவானவை!)
என்னும் மூன்றும் இணைந்ததே அனைத்தும்!
இவை மூன்றின் உறவுகளும், தொடர்புகளுமே சைவ சமயத் தத்துவத்தின் அடிப்படை; திருமூல தேவ நாயனாரால் தெளிவாக வரையறுக்கப்பட்டது!
பதி, பசு, பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல், பசு-பாசம் அநாதி!
பதியினைச் சென்றடையா பசு-பாசம்!
பதி அணுகில் பசு-பாசம் நில்லாவே! - திருமந்திரம்.
சைவ சமயத்தின் இறைக்கொள்கை, படைப்புக்கொள்கை இரண்டும் இந்த ஒரு திருமந்திரத்தில் சொல்லப்பட்டுவிட்டது.
இவ்வுலகில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இறை(பதி), உயிர்கள்(பசு), தளைகள்(பாசம்) என்ற மூன்றாகப் பிரித்துவிடலாம்.
இறைவனும், உயிர்களும் அறிவுப் பொருட்கள்!
ஏனைய இயங்கும், இயங்காப் பொருட்கள் அனைத்தும் தளைகள் என்னும் சடசக்திகள்(பாசம்) அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத மாயை என்னும் சடசக்தி மூலம் இறைவனின் ஆணைப்படி உருவாக்கப்படுபவை!
இறைவன் வாலறிவன்! கருவி, கரணங்கள் மூலம் அறிவிக்காமலேயே அனைத்தும் அறிபவன்!
உயிர்கள் சிற்றறிவு கொண்டவை! அறிவித்தால் மட்டுமே அறிபவை!
அறியாமை இருளில் இருக்கும் (உயிர்களின் பால் கொண்ட கருணையால், அன்பால்), உயிர்கள் அறிவதற்காக, இறைவன் மாயையிலிருந்து, உடல்களையும், உயிருடல்கள் இயங்கும் உலகங்களையும் படைக்கிறான்.
மனித உயிர்களைப் பொருத்தவரை, ஐம்பொறிகள்-ஐம்புலன்கள் கொண்ட உடல் என்னும் Hostel-லில் தங்கி, நூறாண்டு வாழ்க்கை என்னும் முழுமையான அறிவு பட்டப்படிப்பு படிக்க, உலகம் என்னும் University-யில் கிடைத்த Admission-னே பிறப்பு!
இந்துமதம் - வேதமதம் உயிரின் நூறாண்டுப் உடல்-உலக வாழ்வு பயணத்தையும் மாயை(illusion) என்று பழித்து, பயணமுடிவில் அடையும் இலக்கு(destination) குறித்த கற்பனையிலேயே வாழுமாறு சொல்லி, அறிவுப் பயணத்தின் இன்பத்தை (denying the joy of journey of knowledge) மறுத்து, வாழ்வையே நரகமாக்குகிறது!
சைவ சமயம், உயிரின் நூறாண்டுப் உடல்-உலக வாழ்வுப் பயணம் இடம்,காலம்(time & space) என்ற புள்ளியின் அனுபவ உண்மை ever changing entity) என்று மாயையைப் போற்றிவாழக் கற்றுக்கொடுத்து, இன்ப-துன்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ஏற்கக் கற்றுக்கொடுத்து, முடிவில், பத்திரமாக இலக்குக்குக்(destination) கொண்டு சேர்த்து, அறிவுப் பயணத்தின் இன்பத்தை (enjoying the journey of knowledge) நுகரச்செய்து, வாழ்வையே இன்பமயமாகுகிறது! புவி வாழ்வையே சொர்க்கமாக்குகிறது!
கிறித்துவர் அல்லாத, இசுலாமியர் அல்லாத அனைவரும் இந்துக்கள்' என்று ஆங்கிலேயன் சொன்ன இந்துமதம் நேற்றுப் பெய்த ஆங்கிலேய ஆட்சி மழையில் முளைத்த நச்சுக் காளான்.
சீக்கியர்களும், புத்தமதத்தினரும், சமண மதத்தினரும் 'நாங்கள் இந்துக்கள் அல்லர்' என்று போராடி வெளியே வந்துவிட்டனர்.
திராவிட அரசியலுக்கும், சைவ சமயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழர்களின் சைவ சமயக் கோயில்களை இந்து அறநிலையத்துறையில் அடைத்து, காஞ்சி ஸ்மார்த்த மடத்தலைமையை சைவர்களின் சிவபெருமான் கோயில்களுக்கு நேர்ந்துவிட்ட பாவத்தை செய்த பாவிகள் திராவிட ஆட்சியாளர்கள்.
சமண, பௌத்த சமயங்களை எதிர்க்க, ஆரிய வேதமதத்துடன் இணக்கமான போக்குடன் இணைந்து, சைவ சமயம் பக்தி இயக்கத்தை முன்னெடுத்தது.
சைவம் சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுள், உடற்பிறவி எடுக்காத இறைவன், ஏனைய அனைவரும் உயிர் வர்க்கம் என்பது.
வேதமதம், பக்தி இயக்க காலத்தில், சிவபெருமானையும் முக்குணங்கள் கொண்ட மூவரில் ஒருவராக, தமோ குணம் கொண்ட வேத மதத்தின் 'உருத்திரன்' என்ற கடவுளுடன் இணைத்து, அவமானப்படுத்தியது.
வேதமதக்காரனுக்கு 'பிரம்மம்'தான் முழுமுதற் கடவுள். 'பிரம்மம்' மட்டுமே நிர்குணன். சிவன் வெறும் சகுணப் பிரம்மம்.சைவ சமயம் இந்து மதத்தில் ஒரு பிரிவு என்று சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் எது சொல்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
திருநாவுக்கரசர் 'ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!' என்று ஏன் சொல்ல வேண்டும்? இரு இனங்களும் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம் என்று ஒப்புரவு(சமாதானம்) செய்யவே அருளினார். வேதமதத்தில், சைவ சமயத்தை கரைத்துவிட அன்று.
"பக்கத்துவீட்டுக்காரனும், நீயும் ஒற்றுமையாக இரு என்று நீதானே சொன்னாய். அதனால், என் வீட்டை அவனுக்குக் கொடுத்துவிட்டு, நான் திண்ணையில் வாழ்கிறேன்", என்று சொல்வதைப்போல உள்ளது நீங்கள் சொல்வது.
"நானே கடவுள்' 'அகம் பிரம்மாஸ்மி' என்று சொல்லும் உமது அகங்கார தண்டத்துடன் சிவபெருமான் திருக்கோயிலுக்குள் நீர் நுழையக்கூடாது! தண்டத்தை விட்டுவிட்டுக் கோயிலுக்குள் வந்தால் மட்டுமே உமக்கு வரவேற்பு" என்று 1979-ல் காஞ்சி சங்கராச்சாரியாரை திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குள் கோயில் சிவாச்சாரியார்கள் நுழையவிடவில்லை. அவர்கள் சைவர்கள் இல்லையா? தூய தமிழ் அந்தணர்கள், தூய சைவர்கள்.
திருவாசகம் "இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்" என்று சொல்கிறதே, என்ன பொருள்? இருக்கு வேதம் வேறு, தமிழ் தோத்திரம் வேறு என்பதுதானே.
வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கலாம். சைவம் என்ற அடையாளத்தைத் தொலைத்து, வேதமதத்தில் கரைந்து போவதில்லை ஒற்றுமை! அது சைவ சமய அழிப்பு!
ஆரியர்கள் எறிந்த வேதக் கல்லினால் குழம்பியிருக்கும் உங்கள் மனம் என்னும் குளம் விரைவில் தெளிய எம்பெருமான் சிவபெருமான் உங்களுக்கு ஞானம் அருளட்டும்.
யாமார்க்கும் குடியல்லோம்! யாதும் அஞ்சோம்! - திருநாவுக்கரசர் பெருமான்.
Kanmany Teacher - Educator
Inspiration Education Invention Growth
"மணிமேகலையைத் தெரியுமா?" என்று ஒரு சிங்கள நண்பனிடம் கேட்டேன்.
" இல்லை யாரது?" என்றான்
"நீயெல்லாம் எதுக்குடா பௌத்தனா இருக்கிறாய்?" என்றேன்.
"நான் எதுக்குடா மணிமேகலையை என்ற நபரை தெரிஞ்சுக்கணும்?" என்றான்.
"சரி சங்கமித்தையை தெரியுமா?" என்று கேட்டேன்.
"ஆமா புனித போதியை (வெள்ளரசு மரம்) இலங்கைக்கு கொண்டுவந்த பௌத்த பெண் துறவி" என்றான்.
"சரி, இப்ப சொல்லு மணிமேகலையை தெரியுமா தெரியாதா?"
"ஆ... தெரியும் தெரியும்... சங்கமித்தையின் மறுபெயர்தானே மணிமேகலை?"
"போடா டேய்" கடுப்பாகிட்டேன்.
(சிறிது நேரத்தின் பின்னர்)
"உனக்கு கண்ணகியை தெரியுமா?"
"ஓ... பத்தினி தெய்வம்தானே? விகாரைகளில இருக்கு. நாங்க வணங்குவோம். எங்க குல தெய்வம் என்பார்கள்."
"ஓ பத்தினியையும் உங்க தெய்வமாக்கிட்டிங்களோ? சரி இருக்கட்டும் கண்ணகிக்கு ஒரு கணவன் இருந்தான் தெரியுமா?"
"அதெல்லாம் தெரியா மச்சான், தலதா மாளிகால பத்தினிக்கு தனி கோவில் இருக்கு. நம்ம ஆக்கள் மாளிகாவுக்கு சென்றால் அங்கயும் கண்டிப்பா போவாங்க" என்றான் சலிப்புடன்.
"சரி சொல்லுறன் வடிவா கேள். நீங்க பத்தினி என்று வணங்கும் தெய்வம் ஒரு தமிழ் பெண். பெயர் கண்ணகி. பார்தால் பசு, பாய்ந்தால் புலி. அவளது தகப்பன் ஒரு பேமஸ் Businessman. தன் நண்பனும் ஒரு பேமஸ் Businessman என்பதால் அவனது மகன் கோவலன் என்ற வளர்ந்துவரும் Businessmanக்கு கண்ணகியை நல்ல சீதனபாதனத்தோட கட்டிக் கொடுத்தான்.
அந்த நேரம் சிற்றரசுகள் தவிர மூன்று பெரிய நாடுகள் தமிழருக்கு இருந்தது. சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் கண்ணகியும் கோவலனும். கோவலன் கொஞ்சம் குழப்படி. மாதவி என்ற ஆட்டக்காரியுடன் காதலுற்று மணிமேகலை என்ற பெண்ணுக்கு தகப்பனாகிறான். தன் மனைவியையும் Business எல்லாத்தையும் மறந்து மாதவியே கதியென கிடந்து வறுமைப்படுகிறான். இதனால் மீண்டும் பழைய குருடி கதவை திறவடி என்று கண்ணகியிடம் வந்து பிழைப்புக்காக பாண்டி நாட்டுக்கு புலம்பெயர்கிறான். அங்குதான் அவனை விசாரணையில்லாமல் கள்ளப்பட்டம் சூட்டி கொன்றனர். இதனால் கண்ணகி பாண்டி நாட்டின் தலைநகர் மதுரையை எரிக்கிறாள். கோவலன் இல்லாத காலத்திலும் குழப்படி இல்லாமல் இருந்ததனால் கற்புக்கரசியாகி, அதாவது பத்தினி ஆகி அதன் வலிமையினாலேயே மதுரையை எரிக்கிறாள். அதனால் பத்தினித் தெய்வமாகிறாள்....
"அட அப்ப பத்தினித் தெய்வம் தமிழா?" என்று கேட்டான்.
"ஓமடா பக்கி, நீங்கள் இப்படித்தான் இராவணனையும் சிங்களவனாக்கி வைத்திருக்கிறீங்கள்."
"சரி மணிமேகலை பற்றி ஏன் கேட்டாய்?" என்றான்.
"சொல்லுறன் இனி கவனமாக கேள். தன் காதல் கணவன் கோவலன் இறந்த செய்தியை அறிந்த மாதவி ஆட்டங்களை நிறுத்திவிட்டு பௌத்த துறவியாகிறாள். அத்துடன் கோவலனுக்கு பிறந்த தன் மகள் மணிமேகலையையும் துறவியாக்குகிறாள். அப்போது தமிழ் பௌத்தர்கள் சோழநாட்டில் அதிகமாக இருந்தார்கள். மணிமேகலை புத்தருக்கு மாலை கட்டும்போது தகப்பனை நினைத்து அழுகிறாள். அழுத கண்ணீர் மாலையில் பட்டுவிட்டது. மாலை புனிதமிழந்துவிட்டதென்று புதிய பூக்கள் பறிப்பதற்காக தோழியுடன் செல்கிறாள். அங்குதான் சோழ மன்னனின் மகன் உதயகுமாரன் என்பவன் மணிமேகலையை தேடி வருகிறான்.
துறவியாக இருந்த மணிமேகலை காதல் மயக்கத்தில் சற்று தடுமாறுகிறாள். இருந்தாலும் தன்னை உணர்ந்தவள் அதற்கு தீர்வு தேடுகிறாள். அதன் விளைவாக மணிமேகலா என்ற பௌத்த தெய்வத்தால் மணிபல்லவ தீவுக்கு (யாழ்ப்பாணம் நயினாதீவு) மயக்க நிலையில் கொண்டுசென்று விடப்படுகிறாள். அங்கு வந்தவளுக்கு புத்தபெருமான் தன் மறு வடிவமான பீடம் ஒன்றை கொடுக்கிறாராம். ஏற்கனவே அங்கு நாக வழிபாட்டில் இருந்த நாகர்கள் (இன்றைய ஈழத் தமிழரின் மூதாதையர்) மத்தியில் பௌத்த அறக் கருத்துக்களை விதைக்கிறாள்.
அவள் விட்டுச்சென்ற எச்சம்தான் இன்றைய நயினாதீவின் நாகவிகாரை. அது தமிழரின் பௌத்த கோவில். உங்கள் தேரர் ஒருவர் மகாவம்சத்தில் உருட்டி புரட்டி பொய் வரலாறை எழுதியுள்ளார். மணிமேகலை என்ற தமிழ்ப் பெண் துறவி உங்கள் வட இந்திய சங்கமித்தைக்கு முந்தியவள். புனிதமான புத்த பெருமான் பிறந்த அதே நாளில் அவளும் பிறந்ததனால் சிந்தாதேவி என்ற இன்னுமொரு பௌத்த தெய்வத்தின் அருளால் கிடைக்கப்பெற்ற அமுதசுரபி எனும் அட்சய பாத்திரத்தை வைத்து பலர் பசியை போக்கியவள்.
உனக்கு ஒன்று தெரியுமா? இன்று பௌத்த விகாரைகளில் கண்ணகி, விஷ்ணு, முருகன், பிள்ளையார் என்று இந்துக் கடவுள்களை கும்பிடுகிறீர்கள், தமிழ் பௌத்தர்கள் வணங்கிய தெய்வங்களான மணிமேகலா, சிந்தாதேவி எல்லாம் எங்கே? அவர்களையாவது தெரியுமா?
வட இந்திய சக்கரவர்த்தி அசோகனுடன் கூட்டிணைந்து இலங்கைக்கு தேவநம்பியதிஸ்ஸன் பௌத்தத்தை கொண்டுவந்ததாக சொல்கிறீர்கள். ஆனால் மணிமேகலை அதற்கும் முந்தியவள். ஈழத் தமிழர்கள் இயற்கையை வழிபட்டவர்கள். விஷமென்று தெரிந்தும் கொல்லும் நாகத்தை தெய்வமாக பூசித்தவர்கள். தனியே சிவனை வழிபட்டவர்கள். அதனால் பௌத்தம் எம்மத்தியில் செல்வாக்கிழந்து உங்கள் மத்தியில் வட இந்திய தொடர்புடன் செல்வாக்குப் பெற்றுவிட்டது. கணிசமானளவு தமிழ் பௌத்தர்கள் சிங்களவர்களாக இனம்மாறிவிட்டனர். சிலவேளை நீயும் அதற்குள் அடங்கலாம். உங்கள் மூதாதையர்கள் வணங்கிய எங்கள்-அவர்கள் தெய்வங்களை இன்றும் பௌத்த விகாரைகளில் வைத்து வழிபடுகிறீர்கள்.
ஆனால் எல்லாவற்றையும்தாண்டிவந்து இது ஒரு சிங்கள-பௌத்த நாடு என்கிறீர்கள். காலம் செய்த கோலமடா"
"சொரி மச்சான்" ஏதோ நினைப்புடன் சொன்னான்.
"சரி இப்ப சொல்லு மணிமேகலை யார்?"
"தமிழ் பௌத்த துறவி" என்றான்.
"மறக்காமல் இதையும் கேள், நீங்கள் சொல்வீர்களே 'புத்தம் சரணம் கச்சாமி' என்று ஒரு மந்திரம். அதுகூட தமிழ் பௌத்தர்களிடமிருந்து வந்ததுதான். மணிமேகலை இங்கு வந்து பரப்பினாள். மணிமேகலை என்ற எங்கள் காவியத்தில் இருக்கிறது. இதையெல்லாம் உங்கள் ஆக்களுக்கு சொல்லி விளங்கப்படுத்து"
Copied from Shanmugarasa Vadivelu
05/08/2019
https://ideapod.com/born-creative-geniuses-education-system-dumbs-us-according-nasa-scientists/
We are born creative geniuses and the education system dumbs us down, according to NASA scientists The scientists gave the test to 1,600 children between the ages of 4 and 5. What they found shocked them.
இன்றைய தமிழ்ச் சொல்:
*Balance sheet - ஐந்தொகை/இருப்புநிலைக் குறிப்பு.*
தமிழில் பேச
*இன்றைய (தூயத் தமிழ்ச் சொல்) தகவல் அறிவோம்.*
1. நஷ்டம் - இழப்பு.
2. நிபுணர் - வல்லுநர்.
3. நிமிஷம் - மணித்துளி.
4. நியாயஸ்தலம் - வழக்கு மன்றம்.
5. நீதி - நடுநிலை
இன்றைய தமிழ்ச் சொல்:
*Cellophane tape - பளிங்கு ஒட்டு நாடா.*
இன்றைய தமிழ்ச் சொல்:
*Tar (தார்) road - கரிக்கீல் சாலை.*
தமிழ் வாழ்
Love it
இன்றைய தமிழ்ச் சொல்:
*Semester (system) - கல்விப் பருவம் (முறை).*
பல்லாயிரம் ஆண்டுகள்
இன்றைய தமிழ்ச் சொல்:
*Royalty - உரியம்/உரிமத்தொகை.*
பல்லாயிரம் ஆண்டுகள் தமிழ் மொழி
இன்றைய தமிழ்ச் சொல்:
*Scooter - குதியுந்து/ஈருருளி.*
இன்றைய தமிழ்ச் சொல்:
*Smart phone - திறன்பேசி.*
தமிழ்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Kandy And Jaffna
Colombo