14/05/2026
" Awurudhu utsawa 2026 "
தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வு.
இந்த நிகழ்வை நிறைவாகச் செய்ய நல்ல காலநிலையையும், ஆசீர்வாதத்தையும் அருளிய இறைவனுக்கு முதற்கண் எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏
மேலும், நிகழ்விற்கு வருகை தந்து எங்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்து கொண்ட மதிப்பிற்குரிய அதிபர் அவர்களுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த இரு அருட்சகோதரிகளுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் 🌸
அத்துடன், இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கிய நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் ஒவ்வொரு சங்க உறுப்பினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் ❤️
இதேபோல் இனி நடைபெறவுள்ள எங்கள் அடுத்தடுத்த நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்த, உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் என்றும் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் 🔥🫂🔥
- பழைய மாணவியர் சங்கம்