31/07/2025
2025.07.30
OUR STUDENTS TEACHERS GRADUATION
NDT in Teaching
Education is not preparation for life; education is life itself.
சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதே எமது நோக்கம்
31/07/2025
2025.07.30
OUR STUDENTS TEACHERS GRADUATION
NDT in Teaching
Education is not preparation for life; education is life itself.
12/07/2025
For 2020/2022 Batch
30/06/2025
அகவை 60 எய்தி 30.06.2025 அரசபணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் எம் அன்பு ஆசான் பிரபாகரன்
(ஆங்கில விரிவுரையாளர் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி)
60 ஆவது பிறந்தநாள் - 01.07.2025
வாழ்த்தாகச் சில வார்த்தைகள்
..........................................
என் இனிய நண்பர் திரு. பிரபா அவர்கள் அகவை அறுபதை எய்தியுள்ளார் என்பதை இக்கணம் வரை நம்பமுடியாதுள்ளது. தமிழ் இலக்கியப் பரப்பில் சங்ககாலத்தில் தலை நரைக்காத புலவர்கள் இளமையோடு வாழ்ந்துள்ளனர். அவர்கள் அதற்கு முன்வைத்த ஒரே காரணம் கவலையற்ற பெருவாழ்வு என்பதேயாகும். பிரபாவிற்கும் இது பொருந்தும். கவலையை உள்ளத்தில் உட்கார வைக்காத மனிதர் அவர்.
நண்பர் பிரபாவுடன் பல தளங்களில் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. ஆசிரிய கலாசாலைக் கற்கைக்காலம், பல்கலைக்கழக டிப்ளோமா கற்கை காலம், கல்வி முதுமாணிக் கற்கைக் காலம், ஆசிரிய கல்வியாளர் சேவை நியமனம் என இவை யாவற்றிலும் அவரும் நானும் சகபயணிகள். இதனைவிட குடும்ப உறவு சார்ந்த பிணைப்பும் எமக்கு வரமாக அமைந்தது என்பேன். தேசிய கல்வி நிறுவகம் நடத்தும் கல்விமாணி கற்கை நெறியில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிலையத்தில் அவர் கற்கை நெறி இணைப்பாளர். நான் அவரது தலைமைத்துவத்தில் விரிவுரையாளர்.
எதனையும் வெளிப்படையாக நேர்படப் பேசும் துணிவு நண்பர் பிரபாவிற்குரிய பலம். எந்தச் சவாலையும் இலகுவாக எதிர்கொள்ளும் ஆற்றலும் அவருக்குரித்தான சிறப்பு ஆகும். இதனால் சேவை நிலையங்கள் மாற்றமுற்ற சந்தர்ப்பங்களிலும் அன்றலர்ந்த செந்தாமரை போன்ற முகமலர்ச்சியுடன் மாணவ ஆசிரியர்களுகக்குத் தளர்வுறாத கல்வியை பிரபா வழங்கினார்.
மனதில் எந்தச் சுமையையும் உள்வாங்காத மாண்புறு கொள்கையால் இன்றும் இளமையோடு அறுபதைக் கடக்கும் அன்பு நண்பருக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளை உரைப்பதில் உவகை கொள்கின்றேன்.
அன்புடன்
சந்திரமௌலீசன் லலீசன் (Copy Paste)
26/06/2025
👉❤சிறந்த ஆசிரியர்களின் 10 முக்கிய இயல்புகள்......
👉❤1. அர்ப்பணிப்பு (Dedication)
மாணவர்களின் வளர்ச்சிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பும், தொழில்திறன் மேம்பாட்டில் தொடர்ந்து ஈடுபாடும்
👉❤2. தெளிவான தொடர்பாடல் திறன் (Clear Communication Skills)
பாடங்களை எளிமையாகவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் விளக்கக்கூடிய திறன்
👉❤3. மாணவர்களை ஊக்கப்படுத்தும் திறன் (Ability to Inspire Students)
மாணவர்களில் ஆர்வம், நம்பிக்கை, மற்றும் உந்துதலை உருவாக்கும் திறன்
👉❤4. மனிதநேயம் மற்றும் பொறுமை (Empathy and Patience)
மாணவர்களின் நிலையை புரிந்து, அவர்களுடன் பொறுமையாக தொடர்பு கொள்ளும் மனநிலை
👉❤5. நேர்த்தியான திட்டமிடல் (Effective Planning and Organization)
வகுப்புகளை முறையாக திட்டமிடும் மற்றும் கற்றல் நடவடிக்கைகளை சீராக அமைக்கும் தன்மை
👉❤6. தெளிவான குறிக்கோள்கள் (Clear Goals and Expectations)
மாணவர்கள் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதையும், எதை அடைய வேண்டும் என்பதையும் தெளிவாகத் தரும் இயல்பு
👉❤7. தன்னிலைப் பரிசோதனை (Self-Reflection)
தங்கள் பணியில் தவறுகள் ஏற்பட்டால் அதை உணர்ந்து திருத்தி மேம்படும் திறன்
👉❤8. மாற்றத்திற்கு திறந்த மனம் (Openness to Change)
புதிய கற்பித்தல் முறைகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றை ஏற்கும் திறன்
👉❤9. நேர்மையும் நீதிமையும் (Integrity and Fairness)
மாணவர்களை சீராக மதித்து, ஒருவரையும் விரும்பி அல்லது வெறுப்புடன் அணுகாத தார்மீக நிலை
👉❤10. தொடர்ந்த கல்வி விருப்பம் (Lifelong Learning Attitude)
தங்கள் கல்வித் திறனை தொடர்ந்து மேம்படுத்தும், புதிய அறிவைப் பெறும் எண்ணக்கருவுடன் இருப்பது.
23/06/2025
Award Ceremony- 2025
Batch - 2020 - 2022 Academic Year
Vavuniya National College Of Education
2025.07.30 Evening
The final reunion of college life❤️
28/12/2024
1998/2001 BATCH ❤️GOLDEN MEMORIES
27/12/2024
மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருவது ஒரு நல்ல ஆசிரியரின் பண்பில் ஒன்று🏅
24/11/2024
One day More....
24/11/2024
ஒரு வருடம் ஏதும் எதிர்பார்ப்பின்றி சிறப்புற சேவைகளை செய்து முடித்து பிரிய முடியாத மன நிலையில் பிரிந்து செல்ல இருக்கின்ற அன்பான எம் கல்லூரியின் ஆசிரியர்கள்❤️
#2020/2022 Batch