05/08/2026
வாழ்த்துக்கள்!
அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் பங்கேற்று, எமது பாடசாலையின் தரம் 9 ஐ சேர்ந்த மாணவி செல்வி M. R. Maryam மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார் என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்மாணவியின் இச்சிறப்பான சாதனைக்காக அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், தேசிய மட்டப் போட்டியிலும் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மேலும், இம்மாணவியை சிறப்பாக வழிநடத்திய சமூக விஞ்ஞானப் பாட ஆசிரியர்களான Mrs. M.R. Lizana , Mrs.Lojana , Mrs. Murshidha மற்றும் Mrs. K.F. Maheesha ஆகியோருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- பழைய மாணவர் சங்கம்
நஸ்ரியா மத்திய கல்லூரி