ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை பாரதிபுரம், ஐயங்கேணி.

  • Home
  • Sri Lanka
  • Chenkalady
  • ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை பாரதிபுரம், ஐயங்கேணி.

ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை பாரதிபுரம், ஐயங்கேணி. "அன்பு நெறியே அறநெறி"

ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.
24/09/2025

ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

24/09/2025

தேசிய ஆக்கத்திறன் விருது 2025
மேற்படி போட்டியில் நமது ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவி செல்வி.பரமேஸ்வரன் தீக்ஷனா மாகாண நிலையில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய நிலைப் போட்டிக்குத் தெரிவாகி பெருமை சேர்த்துள்ளார் .

அவருக்கு எமது பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவிப்பதோடு
அவரைப் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி.துர்காயினி மனோகரன் அவர்களுக்கும் மற்றும் சகல ஆசிரியர்களுக்கும் வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்வதுடன்.

மாணவியை பயிற்றுவிக்க ஒத்துழைப்பு வழங்கிய தீக்ஷனாவின் பெற்றோருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

க.சுவர்ணேஸ்வரன்
பொறுப்பாசிரியர்

மாவட்ட மட்ட ஆக்கத்திறன் போட்டியில் எமது அறநெறிப்பாடசாலையினை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிநூல் மனனம் தரம் 4 மாணவி *செல்வி....
24/09/2025

மாவட்ட மட்ட ஆக்கத்திறன் போட்டியில் எமது அறநெறிப்பாடசாலையினை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிநூல் மனனம் தரம் 4 மாணவி *செல்வி.பரமேஸ்வரன் தீக்ஷனா *முதலாமிடத்தினையும்* தரம் 5 மாணவி *செல்வி.ஜயந்தன் டஸ்வினி இரண்டாம்* இடத்தினையும் கதாபிரசங்க போட்டியில் மாணவி *செல்வி.விஜயபாலன் விர்ஷாலி மூன்றாம் இடத்தினையும்* மேலும்
*நாடகமானது மூன்றாம்* இடத்தினை பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வதோடு போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

 #மகா  #சிவராத்திரி  #விரதம் 2025"கலை நிகழ்வும் பரிசளிப்பும்"பாரதிபுரம், ஐயங்கேணி, செங்கலடி ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார்...
14/03/2025

#மகா #சிவராத்திரி #விரதம் 2025

"கலை நிகழ்வும் பரிசளிப்பும்"

பாரதிபுரம், ஐயங்கேணி, செங்கலடி ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் மகா சிவராத்திரி விரதம் 2025 "கலை நிகழ்வும் பரிசளிப்பும்" ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.

ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை பாரதிபுரம், ஐயங்கேணி செங்கலடி. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒழுங...
13/03/2025

ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை பாரதிபுரம், ஐயங்கேணி செங்கலடி.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒழுங்கு செய்து நடாத்திய தேசிய ஆக்கத்திறன் விருது போட்டி 2024 இல் குழு நடன போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பெருமை சேர்த்த மாணவிகளுக்கும் நடனப் பயிற்சி வழங்கிய ஆசிரியர் செல்வி.நிதாயினி கந்தசாமி அவர்களுக்கும் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவிப்பதோடு ஒத்துழைப்பு நல்கிய சக ஆசிரியர்களுக்கும் பெற்றாருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பொறுப்பாசிரியர்
சிவஸ்ரீ க.சுவர்ணேஸ்வரன்

26.01.2025 அன்று எமது அறநெறி பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பெற்றது. மாணவர்களுக்க...
27/01/2025

26.01.2025 அன்று எமது அறநெறி பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பெற்றது. மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கித்துள் அண்ணாமலையார் சடைச்சாமி திருமடாலய நிர்வாகி சுவாமி ஜோதிர்மயாநந்தா ஐயா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. சுவாமிக்கு அறநெறிப்பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஸ்ரீ ஆதிமாணிக்க பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு வருடா வருடம் வழங்கப்படுகின்ற பொங்கல் பொதியானது ...
24/01/2025

ஸ்ரீ ஆதிமாணிக்க பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு வருடா வருடம் வழங்கப்படுகின்ற பொங்கல் பொதியானது 10.01.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐயங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவின் முன்னாள் கிராம உத்தியோகத்தர் திரு.டிவாஸ்கர் மற்றும் தற்போதைய கிராம உத்தியோகத்தர் திரு.சதுசன் அவர்களும் கலந்து கொண்டனர் அவர்களுக்கும் இப் பொதியினை வழங்குவதற்கு குருகுலம் அறக்கட்டளை ஊடாக உதவி புரிந்த திரு,திருமதி சிவரூபன் அவர்களுக்கு எமது அறநெறிப் பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- #பொறுப்பாசிரியர்-

எமது அறநெறிப் பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்களுடனான கலந்துரையாடல் இன்று(24/01/2025) எமது அறநெறிப் பாடசாலை கட்டடத்தில் பொற...
24/01/2025

எமது அறநெறிப் பாடசாலை மாணவர்களுடைய பெற்றோர்களுடனான கலந்துரையாடல் இன்று(24/01/2025) எமது அறநெறிப் பாடசாலை கட்டடத்தில் பொறுப்பாசிரியர் சிவஸ்ரீ க.சுவர்ணேஸ்வரன் ஐயா தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியரும் ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குருவும் மட்/சிவா...
15/03/2024

ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியரும் ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குருவும் மட்/சிவானந்தா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருமான சிவஸ்ரீ கந்தவேல் சுவர்ணேஸ்வரன் ஜயா அவர்கள் இன்று மட்/செங்கலடி மத்திய கல்லூரியின் அதிபராக தமது கடமைகளை பொறுப்பேற்றார். அவர்களுக்கு எமது அறநெறிப் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களினை தெரிவித்துக் கொள்வதோடு சிறப்பான முறையில் சேவையை தொடர தேகாரோக்கியமும் மன வலிமையும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

 #மகா  #சிவராத்திரி  #விரதம் 2024"கலை நிகழ்வும் பரிசளிப்பும்"பாரதிபுரம், ஐயங்கேணி, செங்கலடி ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார்...
10/03/2024

#மகா #சிவராத்திரி #விரதம் 2024

"கலை நிகழ்வும் பரிசளிப்பும்"

பாரதிபுரம், ஐயங்கேணி, செங்கலடி ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் மகா சிவராத்திரி விரதம் 2024 "கலை நிகழ்வும் பரிசளிப்பும்" ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.

10/03/2024

#மகா #சிவராத்திரி #விரதம் 2023
#கலை #நிகழ்வும் #பரிசளிப்பும்

#கலை #நிகழ்வு
நாடனம்

பயிற்றுவிப்பாளர்
கந்தசாமி நிதாயினி
(பட்டதாரி, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்)

அவர்கட்கு நன்றிகளினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

Chenkalady

Opening Hours

08:30 - 12:30

Telephone

+94779354523

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை பாரதிபுரம், ஐயங்கேணி. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ஆதி மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை பாரதிபுரம், ஐயங்கேணி.:

Shortcuts

Share

Category