Sivan Kids Home Cheddipalayam

Sivan Kids Home Cheddipalayam சிவன் பாலர்பாடசாலை

நன்றி சகாதேவராஜா ஐயா
14/10/2025

நன்றி சகாதேவராஜா ஐயா

மழலைகளின் குதுகலத்தால் களைகட்டியது செட்டிபாளையம் சிவன் பாலர் பாடசாலையின்சிறுவர் விளையாட்டு நிகழ்வு======================...
13/10/2025

மழலைகளின் குதுகலத்தால் களைகட்டியது செட்டிபாளையம் சிவன் பாலர் பாடசாலையின்
சிறுவர் விளையாட்டு நிகழ்வு
=======================

நகர்ப்புற பாடசாலைகளிலுள்ள நவீன வசதிகளை உள்ளடக்கிய வகையில் தற்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய சமநிலை ஆளுமை உள்ள சமூகத்தை எதிர்கால சந்ததிக்கு பெற்றுக் கொடுக்கும் உன்னத நோக்குடன் செட்டிபாளையம் சிவன் ஆலயத்தினால் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிவன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த
விளையாட்டு விழாவானது 12/10/2025 திகதி மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலய மைதானத்தில் பாடசாலை அதிபர்
திரு.க.துரைராசா தலைமையில்
ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின்
தவிசாளர் ஜனாப் எம்.எ.அமீர்டீன்
அவர்களும் சிறப்பு அதிதியாக மட்/பட்/செட்டிபாளையம் ம.வி அதிபர்
திரு.வி.பேரின்பநாயகம் அவர்களும்
கௌரவ அதிதிகளாக. மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின்
விரிவுரையாளர் திரு.பி.குபேந்திரராஜா மற்றும் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக
ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் விரிவுரையாளர் திரு.சு.இளங்கீரன் அவர்களும் விசேட அதிதியாக. சிவன் ஆலயத்தின் கௌரவ தலைவர் மு.பாலகிருஷ்ணன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு செ.சக்திநாயகம் அவர்களுடன் ஆலயங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

காண்போரை கவரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி கண்காட்சி ஆக்கத் திறன் விருத்தியை மையமாகக் கொண்ட போட்டி நிகழ்வுகள் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறப்பு விசேட விளையாட்டுக்கள் முதலானவை சிறப்பாக இடம் பெற்று பரிசளிப்பு விழா விருந்தினர் கௌரவிப்பு அதனைத் தொடர்ந்து செயலாளர் ம.புவிதரன் அவர்களின் நன்றியுரையுடன் விளையாட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.

மழலைகள் குதூகலம் காண..அனைவரும் வருக..
11/10/2025

மழலைகள் குதூகலம் காண..
அனைவரும் வருக..

அனைவரும் வருக ...
25/01/2025

அனைவரும் வருக ...

17/10/2024
Part-01Annual Concert and Prize Giving of  Sivan  Kids  Home,  Cheddipalayam (Batticaloa) was held on 07th of April   20...
08/04/2024

Part-01

Annual Concert and Prize Giving of Sivan Kids Home, Cheddipalayam (Batticaloa) was held on 07th of April 2024 With the Presiding
Mr.K Thurairajah Principal of SKH

CHIEF GUEST

Dr.S.Saravanan,
Consultant VOG
Teaching Hospital, Batticaloa

SPECIAL GUEST

Mrs.Supasini Rumanan,
Attorney -at-law
Lecturer - Department of Law
University of Jaffna.

GUSTs OF HONOUR

Mr.T.Arulrajah
Principal,
BT/PD/Cheddipalayam.M.V.

Mr.N.Delakjan,
Director,
NKD Rathnam (PVT) LTD,
Batticalao

செட்டிபாளையம் சிவன் பாலர் பாடசாலையின் 10வது பரிசளிப்பு விழா சிவன் முன் பள்ளி பாலர் பாடசாலையின்
அதிபர் திரு.க.துரைராஜாஅவர்களின் தலைமையில் மட்/பட்/செட்டிபாளையம் மவி ஒன்று கூடல் மண்டபத்தில் 07.04.2024 அன்று இடம்பெற்றது.

பதிவுகள்...

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்....
05/04/2024

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்....

கொட்டும் மழையிலும்  சிவன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் தசாப்த விழா எளிமையான முறையில்   கொண்டாடப்பட்டது.........................
20/01/2024

கொட்டும் மழையிலும் சிவன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் தசாப்த விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது................................................,.

சிவன் முன்பிள்ளைப் பாடசாலை
ஆரம்பிக்கப்பட்டு பத்து வருட பூர்த்தியினை சிறப்பித்து பல நிகழ்வுகள் இவ்வருடம் பூராக நடாத்துவதற்கு ஆலோசிக்கப்படுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக 20.01.2024 திகதி சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு செட்டிபாளையம் சிவனாலயத்தில் விசேட பூசை வழிபாடு பாடசாலை அதிபர் திரு.க. துரைராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் பூசை வழிபாட்டினை தொடர்ந்து சிவன் ஆலய பிரதம குரு அவர்களின் ஆசியுரையும் முன் பள்ளி பாடசாலையின் அதிபர் அவர்களின் தலைமையுரையும் சிவன் ஆலய திருவருள் சங்க செயலாளர் அவர்களின் விசேட உரையும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து பத்து தீபச்சுடர்கள் பாலர் பாடசாலை சிறுவர்களாலும், ஆசிரியர்களாலும்,பெற்றோர்களாலும், உப தலைவர், ஆலய நிருவாக சபையினர் மற்றும் தொண்டர்களினால் சுடர விடப்பட்டமமை குறிப்பிடத்தக்கது.

தசாப்தம் ஒன்றினை கொண்டாடும் செட்டிபாளையம்சிவன் கிட்ஸ் ஹோம். 2014 - 2024...............................................,....
19/01/2024

தசாப்தம் ஒன்றினை கொண்டாடும் செட்டிபாளையம்
சிவன் கிட்ஸ் ஹோம். 2014 - 2024...............................................,.

சிவன் முன்பிள்ளைப் பாடசாலை
ஆரம்பிக்கப்பட்டு பத்து வருட பூர்த்தியினை சிறப்பித்து பல நிகழ்வுகள் இவ்வருடம் பூராக நடாத்துவதற்கு ஆலோசிக்கப்படுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக 20.01.2024 திகதி சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு செட்டிபாளையம் சிவனாலயத்தில் விசேட பூசை வழிபாடு பாடசாலை அதிபர் திரு.க. துரைராஜா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் பூசை வழிபாட்டில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

18/01/2024
எமது பாலர் பாடசாலையின் ஏழாவது விளையாட்டு விழா கடந்த 09/09/2023 ஆம் திகதி மட்/செட்டிபாளையம் மகா வித்தியாலய விளையாட்டு மைத...
10/09/2023

எமது பாலர் பாடசாலையின் ஏழாவது விளையாட்டு விழா கடந்த 09/09/2023 ஆம் திகதி மட்/செட்டிபாளையம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சிவன் பாடசாலை முதல்வர் திரு க. துரைராஜா அவர்களின் தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம் கோபாலரெத்தினம் அவர்களும் சிறப்பு அதிதியாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் திரு கி. தனரூபன் அவர்களும் விசேட அதிதியாக போரதீவு பற்று கோட்ட கல்வி அதிகாரியம் மட்/செட்டிபாளையம் மவி அதிபருமாகிய திரு.த. அருள்ராஜா அவர்களும் ஆன்மீக அதிதியாக சிவனாலய பிரதம குரு சிவஸ்ரீ ஜனார்த்தனன் ஐயா மற்றும் கௌரவ அதிதிகளாக சிவன் ஆலய தலைவர் திரு. மு.பாலகிருஷ்ணன் சித்தி விநாயகர் ஆலய தலைவர் திரு.க.கிரிதரன் அவர்கள் உட்பட திருவருள் சமூக மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதிகள் சமூக நலன் விரும்பிகள் பெற்றோர்கள் சிவன் கிட்ஸ் கோம் பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அனைவரும் வருக! !!!!
07/09/2023

அனைவரும் வருக! !!!!

Address

Main Street
Cheddipalayam
30194

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivan Kids Home Cheddipalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category