BT/PD/Cheddiplayam Maha Vidyalayam

BT/PD/Cheddiplayam Maha Vidyalayam மட்/பட்/செட்டிபாளையம் மகாவித்தியாலம?

செந்நெல் விளைநிலமும், செந்தமிழ்மொழி பேசி வாய் சிவக்க வெற்றிலையும் சிந்தை சிறக்க கல்வியையும் தன்னகத்தே கொண்டு கிழக்கே வங்கக்கடலையும், மேற்கே மீனினம் பாடும் வாவிக்கரையையும் வடக்கும் தெற்கும் மக்கள் குடியிருப்புக்களாலும் சூழப்பெற்ற சைவப்பழங்குடி வாழ் பதியாம் செட்டிபாளையம்

01/06/2024
கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்வில் 9 தங்கப்பதக்கங்களை பெற்று மட்/பட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயம் பதக்கப்பட்டியலில் ம...
23/09/2023

கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்வில் 9 தங்கப்பதக்கங்களை பெற்று மட்/பட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயம் பதக்கப்பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டது
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கடந்த 5 நாட்களாக திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டரங்கில் நடந்தேறி இன்றுடன் முடிவுக்கு வந்த 2023 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் பங்கு கொண்ட பாடசாலைகள் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் அடிப்படையில் அதிக தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை நிலைநாட்டி மீண்டும் எழுவோம் விழ விழ எழுவோம் என்பதை நிலை நிறுத்தி காட்டியுள்ளது மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயம்.

அந்த வகையில் மட்/ பட் / செட்டிபாளையம் மகா வித்தியாலயம் இம்முறை கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்வில் மெய்வல்லுனர் போட்டி நிகழ்வில்
09🥇 தங்கம்
02 🥈வெள்ளி
03 🥉வெண்கலங்களையும் பெற்று பதக்க பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்து சாதனை நிலை நாட்டியதுடன்
மட் /பட் /களுதாவளை ம.வி தேசிய பாடசாலை
8🥇தங்கம்
12🥈வெள்ளி
16🥉வெண்கல பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அத்துடன் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தை பிரதி நிதித்துவப்படுத்தி 18 வயது பெண்கள் பிரிவில் கலந்துகொண்ட J. ரக்சயா மற்றும் 20 வயது பெண்கள் பிரிவில் கலந்துகொண்ட J. வாசனாஞ்சலி ஆகியோர் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கோலூன்றி பாய்தலில்
20 வயது ஆண்கள் பிரிவில் வி. தனுஜன் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன்
18 வயது பெண்கள் பிரிவில் கோலுன்றிப்பாய்தலில் பங்கு கொண்ட
க. வட்ஷாஜினி முதலாம் இடத்தினை பெற்றதுடன் கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்வில் கோலுன்றிப்பாய்தலில் பட்டிருப்பு கல்வி வலய வீராங்கனை ஒருவர் முதலாவது இடத்தினை பெறும் முதல் சந்தர்பமும் இதுவாகும்

இவ் விளையாட்டு நிகழ்வில் பாடசாலைகள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில்
மட் /பட் /களுதாவளை
ம. வி தேசிய பாடசாலை 102 புள்ளிகளுடன் முதலாம் இடத்தினையும்
மட் /பட் /செட்டிபாளையம் ம. வி 62 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினையும்
அம் /திரு /தாண்டியடி ம. வி 49 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தினை பெற்று கொண்டது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் கல்வி வலயங்கள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயம் 179 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தையும் அக்கரைப்பற்று கல்வி வலயம் 92 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும் திருக்கோவில் கல்வி வலயம் 92 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

இவ் விளையாட்டு நிகழ்வில் பங்கு கொண்டு சாதித்துக்காட்டிய செட்டிபாளையம் மகாவித்தியாலய மாணவர்கள் வழிப்படுத்திய விளையாட்டு ஆசிரியர்கள் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் வித்தியாலய கல்விச்சமூகத்திற்கும் பெற்றோர்களுக்கும் அனுசரணை வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உருத்தாகட்டும்

Shared : kado kappu

நேற்று நடைபெற்ற பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டியில் 1AB பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் ...
26/07/2023

நேற்று நடைபெற்ற பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டியில் 1AB பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் முதலாவது இடத்தை எமது பாடசாலை பெற்றுக்கொண்டது

Address

Main Street
Cheddipalayam
30194

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94652250623

Alerts

Be the first to know and let us send you an email when BT/PD/Cheddiplayam Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category