23/04/2018
கண்ணீர் அஞ்சலி.
யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நீண்ட காலமாக விலங்கியல் ,இரசாயனவியல் ,விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு இராசையா இராச்செல்வம் அவர்கள் (புத்தூர் சந்தி மீசாலை)இயற்கையெய்திய செய்தி கேட்டு, அவரோடு இக்கல்லூரியில் கடமையாற்றிய ஆசிரியர்கள், கல்வி பயின்ற மாணவர்கள் தாங்கொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.இவ்வேளையில் அமரர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்தித்து எமது கண்ணீர் அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்