Kirkoswald No 2 T.V Ppa

Kirkoswald No 2 T.V Ppa Official Page for Past pupils Association of Kirkoswald No 2 Tamil Vidyalaya, Bogawantalawa, Central Province in Sri Lanka.

எமது பழைய மாணவர் சங்க வருடாந்த ஒன்றுகூடலும் சினேக பூர்வ கிரிகட் போட்டியும் கடந்த 15,16 ஆம் திகதிகளில் கெர்கஸ்வோல்ட் மைதா...
26/04/2025

எமது பழைய மாணவர் சங்க வருடாந்த ஒன்றுகூடலும் சினேக பூர்வ கிரிகட் போட்டியும் கடந்த 15,16 ஆம் திகதிகளில் கெர்கஸ்வோல்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இதன் பொது இவ்வருடத்துக்கான செம்பியன்களாக 2017 சா. த தொகுதி அணியினர் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தை 2008 சா. த தொகுதி அணியினர் பெற்றுக்கொண்டனர்.
மூன்றாம் நான்காம் இடங்களை முறையே 2007 மற்றும் 2020 ஆகிய அணிகள் பெற்றுக்கொண்டன.

இதன் போது பாடசாலை பிரதான மண்டபதின் அதீத உஷ்ண நிலையினை தனிக்கும் வகையில் 8 மின் விசிறிகளையும் , இவ்வருடத்துக்கான பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டிக்கான தனிநபர் செம்பியன் கிண்ணன்கள் 20 ஐயும் வழங்கி வைத்ததுடன் மாணவர்களுக்கான ஜெகன்தாசன்-லில்லி கிரேஸ் ஞாபகார்த்த கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களும், சான்றிதழ்களும், கெடயங்களும் அத்துடன் கற்றல் உபகரணங்கள், புத்தகங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போதான சில விஷேட நிகழ்வுகளின் புகைப்படங்களை இங்கே காணலாம்.

எமது கெர்க்கஸ்வோல்ட் இல 2 த. வி பழைய மாணவர் சங்கத்தால் மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளை விருத்தி செய்யும் முகமாக 2...
26/04/2025

எமது கெர்க்கஸ்வோல்ட் இல 2 த. வி பழைய மாணவர் சங்கத்தால் மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளை விருத்தி செய்யும் முகமாக 2வது முறையாகவும் ஜெகன் தாசன் -லில்லி கிரேஸ் கலை இலக்கிய போட்டிகள் 2வது முறையாகவும் இவ்வருடம் நடாத்தப்பட்டது.

இப்பாடசாலையின் முன்னை நாள் ஆசிரிய அமரர்களான உதவி பணிப்பாளர் திரு. Jegandasan Annamuthu மற்றும் அதிபர் சந்தணம் லில்லிகிரேஸ் ஆகியோரின் ஞாபகர்த்தமாக இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டதுடன் தமிழ் தின போட்டிக்கு நிகரான சுற்றுநிருபத்துடன் கூடிய போட்டி நிகழ்ச்சி வேலைத்திட்டமாக இது மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
48 போட்டிபிரிவுகளில் தரம் 01-11 வரை 5பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இப்போட்டிகள் நடாத்தப்பட்டன.

இதற்காக இதுறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த பழைய மாணவர்களும், ஆசிரியர்களும் நடுநிலைமை வகித்ததுடன் மாணவர்களும் அதிகளவில் பங்குப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

ஒத்துழைப்பு வழங்கிய அனைருக்கும் நன்றிகள் 🙏🙏

2025 ஆண்டின் முதல் கட்டமாக இவ்வருடம் க. பொ. த சா/த பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கடந்த 2வருடங்களாக எமது சங்க...
26/04/2025

2025 ஆண்டின் முதல் கட்டமாக இவ்வருடம்
க. பொ. த சா/த பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கடந்த 2வருடங்களாக எமது சங்கத்தால் நடாத்தப்பட்ட கணித விஞ்ஞான இலவச கருத்தரங்கை இம்முறையும் கடந்த மாதம் 08,09 ஆம் திகதிகளில் எமது பாடசாலையில் நடாத்தப்பட்டது.இக்கருத்தரங்கில் இருப்பாடங்களுக்கும் பரீட்சை வழிகாட்டல் கையேடுகளும், மாதிரி வினாபத்திரங்களும் ஒவ்வொரு
மாணவருக்கும் அச்சிட்டு வழங்கப்பட்டன.

மாணவர்கள் சோர்வின்றி கற்பதற்காக எம்மால் முடிந்தளவில்
இவ்விரு தினங்களும் மதியம் பான் மற்றும் பால் தேனீரும் (milk tea) மாலை சிற்றுண்டியும் தேநீரும் வழங்கப்பட்டன.

அத்துடன் அம்மாணவர்களின் பயன்பாட்டிற்காக லார்ஜ் சைஸ் கிளிப் சார்ட், மற்றும் A4 பண்டல், காகிதாதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

செயலமர்வுகளுக்காக இப்பாடங்களில் பயிற்றப்பட்ட மற்றும் அனுபவ அசிரியர் குழுவினர் தெரிவுசெய்யப்பட்டிந்த னர்.
இதில் எமது
பழைய மாணவர்களின் வளங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் வகையில்
திரு. P. திருச்செல்வம்
திரு. Y. சசிக்குமார் ஆகியோர் கணித பாடத்திற்காகவும்
திரு.ஆனந்தராஜ் (மோட்டிங்கம் த. வி )
ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட்டிருத்தனர்
இந்த செயற்பாட்டின் சிற்றுண்டி, மற்றும் வளவாளர் கொடுப்பனவுக்காக அனுசரணை வழங்கிய lions club of colombo மூலம் 15000/= ரூபா நிதி பெற்று தந்து உதவிய சகோதரி Maheswary Vijayananthan அவர்களுக்கு எமது நன்றிகள்.

எமது மாணவர்களின் நலன்கருதி இவேலைதிட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் பழைய மாணவர் சங்கமும், பாடசாலை சமூகமும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது.

நன்றி
செயலாளர்
சு. சிவராஜா

24/11/2024
கிருஷாந்திக்கு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்=================இம்முறை நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் எமத...
07/10/2024

கிருஷாந்திக்கு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்
=================
இம்முறை நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் எமது பாடசாலை சார்பாக தேசிய மட்டத்தில் இரண்டாம் பிரிவு பேச்சுப்போட்டிக்கு தெரிவாகி அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தை செல்வி.சிவநேசன் கிருஷாந்தி பெற்றுக்கொண்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கை மட்டுமில்லாது இணை பாட விதான செயற்பாடு விருத்திக்கான முயற்சிகள், வேலைத்திட்டங்கள் நிகழ்காலத்தில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் நிகழ்காலத்தில் பாடசாலை சூழலோடு தொடர்புடையதான அக,புற காரணிகளால் நிலவிவரும் அசௌகரிய சூழ்நிலைகளினால் உள ரீதியான உழைச்சல்கள் அதிகரித்திருக்கும் நிலையிலும், முறையான பயிற்றுவித்தலுக்கும் உளரீதியான தன்னம்பிக்கைக்கும் வாய்ப்பில்லாத சூழ்நிலையிலும் இவர் பெற்றுக்கொண்ட வெற்றியை உயரிய வெற்றியாக கருதுகின்றோம்.

மத்திய மாகனத்திற்கும், ஹட்டன் கல்வி வலயத்திற்கும், பொகவந்தாலாவ பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இவர் கடந்த முறை தமிழ் மொழி தின போட்டிகளிளிலும் வாசிப்புப்போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவரை தொடர்ச்சியாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சலைத்து விடாதே தங்கையே..இது போற்றத்தக்க சாதனை.தடகளை தகர்த்தெறி..வீருகொண்டு முன்னேறு..

இன்னும் பல வெற்றிகளுடன் முன்னோக்கி செல்ல பழையமாணவர் சங்கமும் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது..

எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீனிவாசன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கட்...
04/07/2024

எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிருஷ்ணமூர்த்தி - ஸ்ரீனிவாசன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கட் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின் போது எமது பாடசாலையின் வளர்ச்சிப்பாதையில் பாடசாலையின் நற்பெயருக்காக பங்களிப்பு வழங்கியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில்
1.எமது பாடசாலையின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத பாரிய பங்களிப்பை வழங்கி இன்று அமரத்துவம் அடைந்தும் எம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அமரர்களான அ. ஜெகன்தாசன் ஆசிரியர் (முன்னாள் ஹட்டன் வலய உதவி கல்விப்பணிப்பாளர் ), மற்றும் அமரர் செல்வி. லில்லிகிரேஸ் ஆசிரியை (முன்னாள் அதிபர் ) ஆகியோரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அமரர்அ.ஜெகன்தாசன் அவர்களின் துணைவியார், மற்றும் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து பொன்னாடை போர்த்தி சேவை பாராட்டல் நினைவு சின்னம் ஒன்றினையும்,அதே போன்று அமரர் லில்லிகிரேஸ் ஆசிரியையின் குடும்பத்தாரிடத்திலும் அவருக்கான சேவை பாராட்டு நினைவு சின்னம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கபட்டது.

2. சுமார் 4 தசாப்தங்கள் ஆசியர் சேவையில் இருந்த எமது பாடசாலையின் ஆரம்ப தொகுதி ஆசிரியர் குழாமின் அங்கத்தவரும்,முன்னாள் பிரதி அதிபரும், இருதியாக அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற, எமது தோட்டத்தில் பிறந்து வளர்ந்த எமது அடையாளமாக திகழும் அதிபர். S. P. S. விக்டர் அவர்களை கௌரவித்து பொன்னாடை போர்த்தி சேவை பாராட்டு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

3.எமது பாடசலையின் வரலாற்றில் அகில இலங்கை தமிழ் மொழி தினபோட்டிகளில் இம்முறை தேசியமட்டத்தில் வாசிப்பு போட்டியில் முதலாம் இடம் பெற்ற செல்வி சி. கிருஷாந்தியை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கேடயம் வழங்கி வைக்கப்பட்டது.

4.கடந்த வருட நிதியில் பாடசாலை பரிசளிப்பு விழாவுக்கான 30,000/= பெருமதியான பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

5.நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒத்துழைப்பு வழங்கி பெருமதியான சேவையினை வழங்கிய ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌவிக்கப்பட்டனர்.

எமது பாடசாலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாட்டு திறன்களை விருத்திசெய்யும் நோக்கில் பழைய மாணவர் சங்கதின் ஏற்பாட்டில் வ...
03/07/2024

எமது பாடசாலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாட்டு திறன்களை விருத்திசெய்யும் நோக்கில் பழைய மாணவர் சங்கதின் ஏற்பாட்டில் வரலாற்றில் முதல் முறையாக கலை இலக்கிய போட்டிகள் நாடாத்தப்பட்டன.
எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்களான அமரர் அ.ஜெகன்தாசன்ஆசிரியர்(முன்னாள் ஹட்டன் வலய உதவிக்கல்வி பணிப்பாளர் ),
அமரர் செல்வி. S லில்லிகிரேஸ் ஆசிரியை (முன்னாள் அதிபர் )ஆகியோரை நினைவு கூறும் வகையில் ஜெகன்தாசன் -லில்லிகிரேஸ் ஞாபகார்த்த கலை இலக்கியப் போட்டி எனும் பெயரில் நடாத்தப்பட்ட இந்நிiகழ்வில் 24போட்டி பிரிவுகளில் பாடசாலை மாணவர்களை தரங்களின் அடிப்படையில் 5பிரிவுகளாக பிரித்து போட்டிகள் இடம் பெற்றன.
எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி -ஸ்ரீனிவாசன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கட் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு கடந்த 2024.06.21மற்றும் 22ஆம் திகதிகளில் கெர்க்கஸ்வோல்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது இபோட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள், வெற்றிக்கேடயங்கள் ஆகியன வழங்கி ஊக்குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விசேட சந்தரப்பங்கள் சிலவற்றின் புகைப்படங்கள் கீழே.

இன்று நாம் நல்ல தூர நோக்கத்துடன் விதைக்கும் இவ்விதைகள் நாளை வளர்ந்து விருட்சங்களாகி எமது சமூக முன்னேற்றத்திற்கு நிழல் தரட்டும்.
தூற்றுவோர் தூற்றட்டும்..
வரலாறு ஒரு நாள் இந்நாள் பற்றி பேசும்வரை.. 🙏

எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிருஷ்ணமூர்த்தி -ஸ்ரீனிவாசன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கட் போட...
03/07/2024

எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிருஷ்ணமூர்த்தி -ஸ்ரீனிவாசன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கட் போட்டி மற்றும் வருடார்ந்த பரிசளிப்பு விழாவின் போது கடந்த வருடம் எமது பாடசாலையில் இருந்து தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி 100புள்ளிகளுக்கு மேல் வெட்டுப்புள்ளிகளை பெற்றுக்கொண்ட 16 மாணவர்களையும் பாடசாலை வரலாற்றிலேயே க. பொ. த சா /தர பரீசைக்கு தோற்றி அதி உயர் பெறுபேற்றுடன் உயர்தரதிற்கு தெரிவாகிய 38 மாணவ மாணவிகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் கௌரவிக்கப்பட்டனர். இம்மாணவர்களுக்கு பரீட்சைக்கு முன்னர் தரமான ஆசிரியர்களை கொண்டு பரீட்சை வழிகாட்டி செயலமர்வுகளை நாடாத்தி அவர்களுக்கு பரீட்சை வழிகாட்டி வினா பத்திரங்களையும்,கையேடுகளையும்
பழைய மாணவர் சங்கம் வழங்கி சிறந்த பெறுபேறுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எமது பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி -ஸ்ரீனிவாசன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கட் போட...
03/07/2024

எமது பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி -ஸ்ரீனிவாசன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கட் போட்டி மற்றும் பார்சளிப்பு நிகழ்வு கடந்த 2024.06.21மற்றும் 22ஆம் திகதிகளில் கெர்க்கஸ்வோல்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வும், நடைபெற்ற போட்டிகளின் போதான விசேட சந்தரப்பங்கள் சிலவற்றின் புகைப்படங்கள்.

Address

Kirkoswald
Bogawantalawa
22060

Alerts

Be the first to know and let us send you an email when Kirkoswald No 2 T.V Ppa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kirkoswald No 2 T.V Ppa:

Shortcuts

Share

Category