07/09/2020
மனிதர்களையும், ஜின்களையும் படைத்தது என்னை வணங்குவதற்கன்ரி வேறில்லை என்று நமக்கு அறுள்மறையாம் திருமரை கட்டளையிடுகின்றது!
இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் ரயீஸுல் முபஸ்ஸிரீன் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அறிந்து வணங்குவதற்கன்ரி வேறில்ஸை என்று கூறுகிரார்கள்!
ஆனால் இன்றுல்ல முஸ்லிம்களின் நிலையோ பரிதாபமானது, இறைவனின் நோக்கத்தை மறந்து மிகவும் சிரத்தையெடுத்து அமல் செய்கிரார்கள், அமலுக்கு கூலியுண்டு அது வேறு விடயம், ஆனால் அவனை அறியவேண்டும் என்ற அல்லாஹ்வின் நோக்கத்தை மறந்து தான் வணங்கக் கூடிய ரப்பை அறியாமல் சடத்துவ அமல் செய்பவர்களாக வாழ்ந்து வேற்றுணர்வுடன் தான் பெரிய அமலாலி என்று தாவா செய்யும் மூடர்களாகவே வாழ்ந்து மரணிக்கிரார்கள்!
தரீக்காக்கள் உருவாக்கப்பட்டது இறைவன் மனிதனை இப் பூவுலகிற்கு அனுப்பிய நோக்கத்தை அடைவதற்க்கே ஆனால் இன்று தரீகத்தின் நோக்கத்தை தரீகாவில் உல்லவர்களுக்கே தெரியவில்லை அதை அறிந்தவர்களை அனுகி அறியவேண்டும் என்றும் முயற்சிக்கவில்லை!
குதுபுல் அக்பர் அபுல்ஹஸன் ஷாதுலி இமாமவர்கள் கூறுகிர கீழ்வரும் பொன்மொழியை ஆலமாக சிந்தித்து தரீகத்தின் நோக்கத்தை அறிந்து இறைவனின் நோக்கத்தையடைய முயற்சிப்போம், இமாமவர்கள் கூறுகிரார்கள்,👇👇👇
உனக்கு துணியாவை காட்டித் தந்தவன் உன்னை ஏமாற்றிவிட்டான்!
உனக்கு அல்லாஹ்வை காட்டித்தராமல் அமலை மட்டும் காட்டித் தந்தவன்
உன்னை வறுத்தப்படுத்தி விட்டான்!
உனக்கு யார் அல்லாஹ்வை காட்டித் தந்தானோ அவனை உன் உற்ற நன்பனாக ஆருயிர் தோழனாக ஆக்கிக்கொள், அவன் மூலமாகவே உன்னுடைய எல்லாக் காரியங்களும் சித்தியடையும்..