04/06/2024
அல்ஹம்துலில்லாஹ் ❤️
துல்ஹஜ் மாதமானது அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களுள் ஒன்றாகும். இம்மாதத்தில் ஹஜ் விதியாகிறது. சுற்றுலாக்களின் உலகில் ஹஜ் ஒரு தனித்துவமான பயணமாக இருக்கின்றது. ஹஜ் எனும் வதிவிட பயிற்சி நெறி மனிதனை புடம்போட்டு நெறிப்படுத்துகின்றது. 'தக்வா' இன்றிய ஹஜ்ஜும் குர்பானியும் பூச்சியமே அன்றி வேறில்லை.
றப்பானியின் 'துல்ஹஜ் விஷேட இதழ்' ஹஜ்ஜோடு சம்மந்தமான பன்னிரு தலைப்புக்களைச் சுமந்ததாக மலர்கிறது. இங்கு 'அல்-குர்ஆனில் ஹஜ்' பற்றிய சுருக்கமான அறிமுகம்; அல் ஹஜ்ஜு அரபா எனும் நபி மொழிக்கான விளக்கம்; கஃபாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பு; ஹஜ் எனும் கிரிகைக்குள் புதைந்திருக்கும் இரகசியங்கள்; இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்தின் குடும்ப வாழ்வு; ஹஜ்ஜாஜிகளும் ஹஜ் முகவர்களும் போன்ற தலைப்புகள் அலசி ஆராயப்பட்டுள்ளன.
PDF இனைப் பெற்றுக் கொள்ள:
https://wa.link/o6d24k