Bt/Bc/valaichenai Y.Ahamed Vidyalaya

Bt/Bc/valaichenai Y.Ahamed Vidyalaya MOTTO:

நல்லதை விதை தீயதை புதை



OUR VISION:

அறிவு, ஆளுமை,ஆண்மீகம், மேம்பாடு கொண்ட சமூகம்.

இரு தங்கங்களை வென்று வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப் சோட்ட...
10/08/2022

இரு தங்கங்களை வென்று வாழைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப்

சோட்டோக்கான் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 12வது தேசிய சோட்டோக்கான் கராத்தே போட்டிகளில் பங்கு பற்றிய வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப் 8வது பிரிவில் 2 தங்கப்பதக்கங்களை வென்று கற்கும் பாடசாலைக்கும் வாழைச்சேனை பெருமை சேர்த்துள்ளார்.

இவர் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் போசகரும் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர் யாசீர் அரபாத் மற்றும் பாத்திமா ஆகியோரின் புதல்வராவார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2019Y.Ahamed Vidyalaya, Valaichenai.அதிபர் வாழ்த்துகிறார்.தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களா...
07/10/2019

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2019
Y.Ahamed Vidyalaya, Valaichenai.
அதிபர் வாழ்த்துகிறார்.

தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களாக பல மாணவர்கள் சித்தியடையும் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இம்முறை 19 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலாகவும் பெரும்பான்மையான மாணவர்கள் பெற்றுள்ளார்கள் , இம்மாணவர்களை மகிழ்வுடன் வாழ்த்தும் அதேவேளை , இம்மாணவர்களுக்கு தரம் 4,5இல் கற்பித்த ஆசிரியர்களான Mr.MTM.Nithas, Moulavi MI.Nahbudeen ஆகியோருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவிப்பதுடன் இம்மாணவர்களை தரம் மூன்று வரை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

மேலும் இப்பாடசாலை முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கும் கல்வி அதிகாரிகள், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் , ஒத்துழைப்பு வழங்கி வரும் SDC மற்றும் பெற்றோர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ்❤

அதிபர்,
அல்ஹாஜ் NM.Gazzali.

இன்று காலை விவசாயத்திணைக்களத்தினால் பாடசாலைக்கு 10 கன்றுகள் வழங்கப்பட்டன!அதில் மாங்கன்று, நெல்லிக்கன்று, மாதுளம்கன்று போ...
21/11/2018

இன்று காலை விவசாயத்திணைக்களத்தினால் பாடசாலைக்கு 10 கன்றுகள் வழங்கப்பட்டன!
அதில் மாங்கன்று, நெல்லிக்கன்று, மாதுளம்கன்று போன்ற மரங்கள் அடங்குகின்றன!

இதனை பாடசாலை சுற்றுவலாகத்தில், பாடசாலை ஆசிரியர்களான P.தயாபரன்(ஆசிரியர்) , MTM.நிதாஸ்(ஆசிரியர்) , MI.நவ்புதீன்(பிரதி அதிபர்) மற்றும் NM.கஸ்ஸாலி(அதிபர்) ஆகியோர் நட்டுவைத்தனர்! பாடசாலை சார்பாக விவசாயத்திணைக்களத்திற்க்கு நன்றிகளை தெறிவித்து கொள்கின்றோம்!

-வை-அகமட் வித்தியாலயம் மீடியா-

Address

Y. Ahamed Road , Valaichenai
Batticoloa

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 12:00

Telephone

065-5672007

Alerts

Be the first to know and let us send you an email when Bt/Bc/valaichenai Y.Ahamed Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category