Shivananda Vidyalaya Past Pupils' Association-Sri Lanka

Shivananda Vidyalaya Past Pupils' Association-Sri Lanka This is the official page of Shivananda vidyalaya (National School) past pupil association

இந்து சமய அற நெறி பாடசாலை மாணவர்களுக்கான  தேசிய ஆக்கத்திறன் - 2024யில் இராமகிருஷ்ண மிஷன் அறநெறி பாடசாலை சார்பாக எமது பாட...
18/08/2026

இந்து சமய அற நெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் - 2024யில் இராமகிருஷ்ண மிஷன் அறநெறி பாடசாலை சார்பாக எமது பாடசாலை மாணவன் சிவாநந்தியன் P. அகிலேஷ் அகில இலங்கை ரீதியில் பேச்சு போட்டி மற்றும் நாடக போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கல்வி அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் 800m பாடசாலை சுற்றுமதில் அமைக்கும் பணிகள் தற்பொழுது இடம்பெற்றுவருகிறது.
17/08/2026

கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 800m பாடசாலை சுற்றுமதில் அமைக்கும் பணிகள் தற்பொழுது இடம்பெற்றுவருகிறது.

மட்டக்களப்பு  பண்டாரியாவெளியை பிறப்பிடமாக  கொண்ட பேராசிரியர் கலாநிதி சிவஞானம் மகேஸ்வரன், சிவானந்தா வித்தியாலய பழைய மாணவன...
11/08/2026

மட்டக்களப்பு பண்டாரியாவெளியை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் கலாநிதி சிவஞானம் மகேஸ்வரன், சிவானந்தா வித்தியாலய பழைய மாணவன், பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளதையிட்டு மட்டக்களப்பு மண் பெருமை கொள்கிறது. *வாழ்த்துகள் தெரிவிக்றோம்*

2028ம் ஆண்டு உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில்  மலையகத்தில் இருந்து 8 மாணவர்கள் எமது பாடசாலை விடுதியிலும் அக்கரைப்ப...
11/08/2026

2028ம் ஆண்டு உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் மலையகத்தில் இருந்து 8 மாணவர்கள் எமது பாடசாலை விடுதியிலும் அக்கரைப்பற்றில் இருந்து ஒரு மாணவி சகோதர பாடசாலை விவேகானந்தா கல்லூரியிலும் கல்வியினை மேற்கொள்ள சிவாநந்தியன் வைத்தியர் ராஜகோபால் ஐயா அவர்களின் நிதி அனுசரணை ஊடாக எமது சமூகம் - பிரித்தானியா அமைப்பினால் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் அனுசரணையில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டல் கையேடுகள் கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

GCE O/L மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்க அவர்களுக்கான மாதிரி பரிட்சைகளை மேற்கொள்ளவும், மாணவர்களுக்கான மாதிரி கையேடுகளை ...
10/08/2026

GCE O/L மாணவர்களின் பெறுபேறுகளை அதிகரிக்க அவர்களுக்கான மாதிரி பரிட்சைகளை மேற்கொள்ளவும், மாணவர்களுக்கான மாதிரி கையேடுகளை வழங்கவும் A4 Photo Copy Papers பெற்றுத்தருமாறு நாம் எம்முடன் எப்பொழுதும் கைகோர்க்கும் வகுப்புகளில் ஒன்றான 94 O/L and 97 A/L பழைய மாணவர்களிடம் வேண்டுகோளை முன்வைத்திருந்தோம். அதனடிப்படையில் அவர்கள் முதல் கட்டமாக 20 A4 Photo Copy Papers Reamsகளை வழங்கியிருந்தார்கள். 94 O/L and 97 A/L பழைய மாணவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாடசாலையில் மேலும் ஒரு புதிய பிரதி அதிபர் திரு. I. இலங்கேஸ்வரன்  அவர்கள் இரு வாரங்களுக்கு முன்னர்  இணைந்துள்ளார் அவரை இந...
09/08/2026

பாடசாலையில் மேலும் ஒரு புதிய பிரதி அதிபர் திரு. I. இலங்கேஸ்வரன் அவர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார் அவரை இந்த வேளையில் வரவேற்றுக்கொள்கிறோம்.

இன்று எமது பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுடன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்க பிரதி நிதிகளுக்கும் இடையிலான எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்றது. இதனை ஏற்பாடு செய்த பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

08/08/2026

*அறிவித்தல்: வகுப்பு அடிப்படையிலான விளையாட்டுப் போட்டிகள் – 2026*
எமது பாடசாலையின் வகுப்பு அடிப்படையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் *எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் சிறப்பாக நடைபெறவுள்ளன* .

இப்போட்டிகளில் வழமையாக இடம்பெறும் *கிரிக்கெட், கரப்பந்து (Volleyball) மற்றும் கயிறு இழுத்தல்* ஆகிய போட்டிகளுடன், மேலும் சில புதிய விளையாட்டுகளை இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
கூட்டம் பற்றிய விவரங்கள்:
📅 *திகதி* : 2026 ஆகஸ்ட் 15 (சனிக்கிழமை)
⏰ *நேரம்* : காலை 10:00 மணி
📍 *இடம்* : பாடசாலை
எனவே, இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக *ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் தலா இரு பிரதிநிதி (Class Representative)* இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
நன்றி!

மேலதிக தகவல்களுக்கு - சிவாநந்தியன் திரு. B. கஜேந்திரன் - விளையாட்டு இணைப்பு செயலாளர் - 77 538 3366

பாடசாலை விடுமுறை காலத்தில் இவ்வருடம் GCE O/L எழுத்தவுள்ள  விசேட கவனிப்புகளுக்கு உட்படுத்த வேண்டிய மாணவர்களின் பெற்றோருடன...
06/08/2026

பாடசாலை விடுமுறை காலத்தில் இவ்வருடம் GCE O/L எழுத்தவுள்ள விசேட கவனிப்புகளுக்கு உட்படுத்த வேண்டிய மாணவர்களின் பெற்றோருடனான கலந்துரையாடல் இன்று அதிபரின் தலைமையில் இடம்பெற்றது . அந்த வகையில் எதிர்வரும் திங்கள் கிழமை முதல் காலை 8 மணி தொடக்கம் மதியம் 1 மணிவரை வகுப்புகள் பாடசாலையினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டு நடத்தப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலை ஏற்பாடுசெய்த பிரதி அதிபர் திருமதி. யாழினி தனுசன், பகுதி தலைவர் திருமதி.சந்திரிக்கா மீனேஸ்வரன் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்று நடைபெற்ற மாவட்ட மட்ட ஆங்கில தின Recitation போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரன் சிவாநந்தியன்  U.பிரபஞ்சனிற்கு மனமார...
04/08/2026

இன்று நடைபெற்ற மாவட்ட மட்ட ஆங்கில தின Recitation போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரன் சிவாநந்தியன்
U.பிரபஞ்சனிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் தேசியம் வரை சாதிக்க இறைவனை பிராத்தனை செய்கிறோம். இவரை பயிற்றுவித்த அதிபர், பிரதி அதிபர்கள், ஆங்கில பாட பொறுபாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

Address

New Kalmunai Road, Kallady-Uppodai
Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when Shivananda Vidyalaya Past Pupils' Association-Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shivananda Vidyalaya Past Pupils' Association-Sri Lanka:

Shortcuts

Share

Category