Vivekananda College of Technology

Vivekananda College of Technology Registered TVEC NVQ Technical & Vocational College in Batticaloa, Sri Lanka.
(4)

Offering IT, Graphic Design, AI Prompt Engineering, and Professional Diploma Courses. நம் தேசத்தின் தூண்களான இளைஞர், யுவதிகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக தொழில்நுட்பத் திறன் விருத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்கும் தலைசிறந்த ஒரு தொழில்நுட்ப தொழில்பயிற்சி தொழில்க்கல்வி நிறுவனமாக திகழல். Becoming a prominent institution which paving path for socio-economic development of youth of both sex, through vocational and technical education, as they are the pillars of the nation.

காரைதீவு சாரதா இல்ல வளாகத்தில் எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் (VCOT) சமுதாயக் கல்லூரியில் (Community College)...
15/09/2026

காரைதீவு சாரதா இல்ல வளாகத்தில் எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் (VCOT) சமுதாயக் கல்லூரியில் (Community College) CareerFit and IT Course நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

45 பயிலுனர்கள் தமது பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 12.09.2026 சனிக்கிழமை காரைதீவு சாரதா இல்ல வளாகத்தில் நடைபெற்றது.

மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் மற்றும் மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில், பயிலுனர்களான Kerthana மற்றும் Harshivatha ஆகியோர் இந்த பயிற்சி தமது வாழ்க்கையில் ஏற்படுத்திய நேர்மறையான மாற்றங்கள் தொடர்பில் அனுபவப் பகிர்வுகளை வழங்கினர்.

எமது விவேகானந்த தொழில்நுட்பவில் கல்லூரியின் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிகழ்வில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன், கல்லடியின் உதவி முகாமையாளர் சுவாமி உமாதீசானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கியதுடன், மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். மனிதநேய நிதியத்தின் தலைவர் திருமதி அபிராமி கயிலாசபிள்ளை மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு. கயிலாசபிள்ளை அரவிந்தன் ஆகியோரும் சிறப்புரையாற்றி சான்றிதழ்களை வழங்கினர்.

மேலும், சிரேஷ்ட ஊடகவியலாளர் மற்றும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சகாதேவராஜா, மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் வடமாகாண இணைப்பாளர் திரு. நடேசானந்தன், பாடசாலை அதிபர்கள், பயிற்சி நிலைய பொறுப்பாளர், VCOT முதல்வர், சேவையாளர்கள், பெற்றோர் மற்றும் பயிலுனர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இலவச AI செயல்முறை பயிற்சிப் பட்டறைA/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக எமது விவேகானந்த தொ...
10/09/2026

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இலவச AI செயல்முறை பயிற்சிப் பட்டறை

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘AI for Future’ இலவச AI செயல்முறை பயிற்சிப் பட்டறை 07.09.2026 அன்று எமது புதுக்குடியிருப்பு கிளையில் நடைபெற்றது.

காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் பல மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இதன்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படை விளக்கங்களும், நவீன AI கருவிகளைப் பயன்படுத்தக்கூடிய முறைகள் தொடர்பான நடைமுறை வழிகாட்டல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், எதிர்காலத்தில் பல்வேறு தொழில் துறைகளிலும் AI தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதுடன், எதிர்கால தொழில் வாய்ப்புகளுக்கு AI தொடர்பான அறிவும் திறன்களும் முக்கியமானதாக அமையும் என்பது தொடர்பிலும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கல்வி நடவடிக்கைகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் எதிர்கால தொழில் முனைவுத் துறைகளில் AI எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பயிற்சி அமைந்திருந்தது.

இப்பயிற்சிப் பட்டறையின் மற்றுமொரு சிறப்பம்சமாக, எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் உருவாக்கப்பட்டு வரும் ‘Plant Talk’ தொழில்நுட்ப செயற்றிட்டம் மாணவர்களுக்கு செயன்முறை வடிவில் செய்து காண்பிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு AI தொழில்நுட்பத்தை வெறுமனே கோட்பாட்டு ரீதியாக அறிமுகப்படுத்தாமல், விவசாயம் மற்றும் இயற்கையுடன் AI எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட முடியும் என்பதை நேரடியாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை Plant Talk demonstration வழங்கியது.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்...
09/09/2026

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற CareerFit & IT பாடநெறிக்கான மாணவர்களின் இறுதி அறிக்கை சமர்ப்பித்தல் நிகழ்வு எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.

பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள், இளைஞர் யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவருக்கும் அடிப்படை ஆங்கிலம் அடிப்படைக் கணினி வாழ்வியல் பயிற்சிகள் மற்றும் தொழில் வழிகாட்டல் உள்ளடங்கலாக 3 மாத காலசெயற்பாடாக முன்னெடுக்கப்படுகின்றCareerFit & IT பாடநெறி பயிலுனர்களின் இறுதி மதிப்பீடாக 22 பயிலுனர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சக கல்வி நிலையங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டதோடு அங்கு நடைபெறும் பயிற்சி நெறிகள் மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்தனர்.

நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சேவையாளர்களும் கலந்துகொண்டதோடு மாணவர்களின் அறிக்கை சமர்ப்பித்தல் அவர்களின் களவிஜயம் தொடர்பான அனுபவப்பகிர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான பின்னூட்டல்களும் வழங்கப்பட்டது.

பாடசாலை வாழ்க்கையைத் தொடர்ந்து வெளியுலகில் கால்பதிக்கும் மாணவர்களுக்கும் பாடசாலையை விட்டு இடைவிலகியிருந்தாலும் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் CareerFit & IT பயிற்சிநெறியானது சிறந்த அடித்தளமாக அமைவதோடு மட்டுமன்றி களவிஜயங்கள் மூலம் மாணவர்களை குழுச்செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சபைக்கூச்சம் மற்றும் முன்வந்து பேசும் திறனுக்கும் இப்பாடநெறி மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல் வழிவகுக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

‘Haniel Child Development Project’ எனும் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கடமையாற்றும் பணியாளர்களுக்கான AI for Off...
08/09/2026

‘Haniel Child Development Project’ எனும் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கடமையாற்றும் பணியாளர்களுக்கான AI for Office Productivity ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வு 01.09.2026 அன்று வாகரை, மருதநகர் பகுதியில் எமது விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியினால் நடைபெற்றது.

காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் 29 பேர் கலந்துகொண்டனர்.

அலுவலகப் பணிகளில் AI தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி, உற்பத்தித்திறனை (Productivity) பல மடங்கு உயர்த்தும் நோக்கில் இப் பயிற்சி அளிக்கப்பட்டது. 📊⚡

📝 AI மூலம் அதிவேகமாக ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் தயாரித்தல்
📧 தொழில்முறை மின்னஞ்சல் (Professional Email) மேலாண்மை
📊 தரவு பகுப்பாய்வு (Data Analysis) & விளக்கக்காட்சி (Presentation) வடிவமைப்பு
🤖 அன்றாட அலுவலகப் பணிகளை துல்லியமாகவும் விரைவாகவும் செய்து முடிக்கும் நவீன முறைகள் குறித்த நேரடி செயன்முறை விளக்கங்கள்!

டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்தி, அலுவலக உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான AI திறன் மேம்பாட்டு செயலமர்வுகளை எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

📞 உங்கள் அலுவலகங்கள், நிறுவனங்கள் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு (NGOs) இவ்வாறான AI பயிற்சிப் பட்டறைகள் தேவையெனில், எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

Hot Line : 075 0790790
Email : [email protected]

🎓 A/L Students – Special Opportunity!A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான சிறப்பு அறிவித்தல்!🤖 FREE AI WORKSHOPஇலவச AI செயல...
06/09/2026

🎓 A/L Students – Special Opportunity!
A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான சிறப்பு அறிவித்தல்!

🤖 FREE AI WORKSHOP
இலவச AI செயல்முறை பயிற்சி!

“AI கற்றுக்கொள் • எதிர்காலத்தை உருவாக்கு!”
Learn practical AI tools and discover how AI can support your education, career & future business.

➕ FREE AI INNOVATION CLUB MEMBERSHIP

AI Innovation Club உறுப்பினர் வாய்ப்பு!

✨ AI Tools & New Technology Introduction
✨ Practical AI Learning Experience
✨ Innovation & Creative Opportunities
✨ First 25 Students Only – Limited Seats!

📍 TWO BRANCH • TWO WORKSHOPS

🗓️ September 07, 2026
📍 Puthukudiruppu Branch
புதுக்குடியிருப்பு கிளை

🗓️ September 09, 2026
📍 Kommathurai Branch
கொம்மாத்துறை கிளை

📞 Register Now!
📍 Puthukudiruppu: 075 773 8872
📍 Kommathurai: 075 560 0666

🔥 Seats are limited – Register today!
உங்கள் எதிர்காலம் AI உடன் ஆரம்பமாகிறது!

🚀 இது வழக்கமான பொது ஆங்கில (General English) பயிற்சி அல்ல!புத்தகங்களையும் இலக்கண விதிகளையும் மட்டும் மனனம் செய்யும் பழைய...
05/09/2026

🚀 இது வழக்கமான பொது ஆங்கில (General English) பயிற்சி அல்ல!

புத்தகங்களையும் இலக்கண விதிகளையும் மட்டும் மனனம் செய்யும் பழைய முறைகளுக்கு விடைகொடுங்கள். அடிப்படை ஆங்கில அறிவோடு, நவீன செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களையும் ஒரே நேரத்தில் கற்றுத் தரும் புதிய தலைமுறைப் பாடநெறி இது!

VCOT பெருமையுடன் வழங்கும்: Certificate in AI-Assisted English Communication

அடிப்படை பொது ஆங்கிலத்தை AI தொழில்நுட்பத்தோடு இணைத்துக் கற்று, உங்கள் தகவல்தொடர்பு மற்றும் டிஜிட்டல் திறன்களை இரட்டிப்பாக்குங்கள்.

"Learn English. Use AI. Shape Your Future."

இப்பாடநெறி ஏன் முற்றிலும் வேறுபட்டது?

AI வழி பொது ஆங்கிலம்: AI தொழில்நுட்ப உதவியுடன் இலக்கணம், புதிய சொற்கள் மற்றும் வாக்கிய அமைப்புகளை மிக விரைவாகவும் சுலபமாகவும் கற்றல்.

இரட்டைத் திறன் வளர்ச்சி: ஆங்கில எழுத்து மற்றும் வாசிப்புத் திறனுடன் சேர்த்து, நவீன AI கருவிகளை இயக்கும் திறனையும் பெறுதல்.

Task-Based Activities: வெறும் கோட்பாடுகளாக இல்லாமல், அன்றாட மற்றும் தொழில்முறைத் தேவைகளுக்கான நடைமுறைப் பயிற்சிகள்.

Life Skills for the Future: தெளிவான சிந்தனை, நவீன தகவல் தொடர்பு மற்றும் தலைமைத்துவ வாழ்க்கைத்திறன்கள்.

பாடநெறி விபரங்கள்:

கால அளவு: 3 மாதங்கள் (12 வாரங்கள்)

வகுப்பு நேரம்: வார இறுதி நாட்கள் மட்டும் (Weekends Only) | காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை

பயிற்சியின் நோக்கம்: Communicate Clearly | Think Creatively | Lead with AI

இப்போதே பதிவை உறுதிசெய்து கொள்ளுங்கள்!

புதுக்குடியிருப்பு கிளை: 075 0790790
கொம்மாதுறை கிளை: 075 560 0666

உங்கள் செங்கலடி பிரதேசத்தில் எதிர்கால தொழில்நுட்ப உலகில் காலடி எடுத்து வைக்க VCOT வழங்கும் இலவச AI செயலமர்வு (Free AI Wo...
03/09/2026

உங்கள் செங்கலடி பிரதேசத்தில் எதிர்கால தொழில்நுட்ப உலகில் காலடி எடுத்து வைக்க VCOT வழங்கும் இலவச AI செயலமர்வு (Free AI Workshop) மற்றும் AI Innovation Club இலவச உறுப்புரிமை!

திகதி: செப்டெம்பர் 9, 2026

பங்குபற்றுவோர்: உயர்தர (A/L) பரீட்சை எழுதிய மாணவர்கள்

பயிற்சி உள்ளடக்கம்: செய்முறை AI கருவிகள், நவீன தொழில்நுட்ப பயன்பாடுகள்

விசேட நன்மை: AI Innovation Club இன் இலவச உறுப்புரிமை

அனுமதி: முதல் 25 மாணவர்களுக்கு மட்டுமே!

📞 தொடர்புகளுக்கு: 075 0790 790

👉 இன்றே விண்ணப்பித்து உங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!
உங்கள் வளர்ச்சிக்கான முதல் படியை இன்றே தொடங்குங்கள்!

📞 Main Hotline: 075 0 790790

📍 கொம்மாதுறை: 075 560 0666

வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த சுயதொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்திகளை சிறந்த முறையில் சந்தைப்படுத்தி, டிஜிட்டல்...
03/09/2026

வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த சுயதொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்திகளை சிறந்த முறையில் சந்தைப்படுத்தி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகளின் ஊடாக விற்பனையை அதிகரிப்பது தொடர்பான செயலமர்வு இன்று 02.09.2026 புதன்கிழமை நடைபெற்றது.

ஏறாவூர்பற்று பிரதேச செலகத்தின் விதாத வளநிலையம் மற்றும் உற்பத்தி திறன் மேம்பாட்டு பிரிவின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு, சுயதொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான அடிப்படை உத்திகள், வாடிக்கையாளர்களை அடையாளம் காணுதல், உற்பத்திகளுக்கான சந்தையை விரிவுபடுத்துதல் மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கான நடைமுறைகள் தொடர்பில் விளக்கங்களை வழங்கினார்.

📢 Special Announcement for Recent A/L Students!Step into the world of future technology! VCOT proudly presents a Free AI...
01/09/2026

📢 Special Announcement for Recent A/L Students!

Step into the world of future technology! VCOT proudly presents a Free AI Workshop along with exclusive free membership to our AI Innovation Club!

Date: September 7, 2026

Target Audience: G.C.E. A/L Exam Completed Students

Workshop Content:Practical AI Tools & Modern Technology Applications

Special Benefit: Free Membership to the AI Innovation Club

Intake: Strictly limited to the first 25 applicants only!

👉 Apply today and secure your seat! Take the first step toward your growth now!
---

Contact Details:

* 📞 Main Hotline: 075 0790 790
* 📍 Puthukkudiyiruppu: 075 7738 872
* 📍 Kommathurai: 075 560 0666

01/09/2026

வெற்றிகரமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட, சரியான வழிகாட்டலும் திறன்களும் மிக அவசியம்.

விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் (VCOT) பயின்று, இன்று தொழில்சார் உலகில் சிறந்த முறையில் சாதித்து வரும் எமது முன்னாள் மாணவரின் உண்மையான அனுபவப் பகிர்வு

இப்போது உங்களுக்கான வாய்ப்பு! எமது Mid-Year Intake இற்கான புதிய மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.

Address

Main Road, Puthukkudiyiruppu
Batticaloa
30000

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+94777105569

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda College of Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vivekananda College of Technology:

Shortcuts

Share