21/01/2025
வாகன பயணத்தில் வாந்தி, தலை சுற்றல் (Motion Sickness) ஏற்படும் ஒருவர்; அவராகவே Drive பண்ணும்போது அவ்வாறு உணர்வதில்லை. ஏன்⁉️
இயக்க நோய் அல்லது Motion Sickness என்பது ஒரு வாகனம், கப்பல் அல்லது விமானம் போன்ற ஒரு நகரும் பொருளில் பயணிக்கும் போது ஏற்படும் ஒரு பொதுவான உடல்நலக் குறைபாடு.
இது பொதுவாக வாந்தி, தலைச்சுற்றல், தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் தொடர்புடையது.
இயக்க நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலின் சமநிலை அமைப்பு மற்றும் மூளை இடையே ஏற்படும் ஒரு தகவல் தொடர்பாடலில் உள்ள குளறுபடி (conflicting signals).
⁉️ #உள்காது: நம் உள் காதின் Semi Circular Canalsஇல் (அரை வட்டக் கால்வாய்கள்) உள்ள திரவங்கள்
நம் உடலின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் நகரும்போது, உள் காது பகுதியில் உள்ள திரவங்கள் நகர்ந்து, நம் மூளைக்கு சமநிலை குறித்த சமிக்ஞைகளை அனுப்புகின்றன.
🎯 #கண்கள்: நாம் பார்க்கும் பொருட்கள் நகரும்போது, நம் கண்கள் அந்த நகர்வுகளைப் பின்பற்றுகின்றன. இந்த தகவல்கள் நம் மூளைக்கு அனுப்பப்படுகின்றன.
🎯 #மூளை: மூளை இந்த இரு தகவல்களையும் ஒப்பிட்டு, நம் உடலின் நிலையைப் பற்றிய ஒரு முழுமையான படத்தை உருவாக்குகிறது.
இயக்க நோயின் போது என்ன நடக்கிறது⁉️
📛 தகவல் முரண்பாடு: (Conflicting Signals)
நாம் ஒரு வாகனத்தில் பயணிக்கும் போது, நம் உள் காது நமக்கு நகர்வது போன்ற உணர்வைத் தருகிறது. ஆனால், நாம் கண்களால் பார்க்கும் பொருட்கள் நிலையாக இருக்கும்.
இந்த இரண்டு தகவல்களுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடு நம் மூளைக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, இயக்க நோயை உண்டாக்குகிறது.
📛 நரம்பு மண்டலம்: இந்த குழப்பம் நம் நரம்பு மண்டலத்தை பாதித்து, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
இயக்க நோயைத் தடுப்பது எப்படி⁉️
✅ முடிந்த அளவு வாகனத்தின் முன் இருக்கையில் அமரவும்: முன் இருக்கையில் அமர்ந்தால், வாகனத்தின் நகர்வுகளை நேரடியாக உணர முடியும். குலுக்கம் குறைவாக இருக்கும்.
(பஸ் பயணத்தை விட கார் போன்ற சிறிய வாகனங்களில் பயணிக்கும்போது Motion Sickness அதிகமாக ஏற்படலாம். காரணம் சிறிய வாகனங்களில் வளைவுகளின் போது உடல் அதிக கோணத்தில் Acute angle இயங்கும்)
✅ படிப்படியாக வேகத்தை அதிகரிக்கவும்: வாகனத்தை மெதுவாக இயக்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்கவும். அத்துடன் வேகத்தை கூட்டிக் குறைக்காமல் மிதமான உலகத்தில் செல்வதும் Motion Sicknessஐ குறைக்கும்.
✅ பயணிக்கும் போது புத்தகம் வாசிப்பதையோ தொலைபேயை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதையும் தவிர்க்க வேண்டும். (குறிப்பாக அதிக வளைவுள்ள பாதைகளில்) இது மூளைக்கு கண், காது இரண்டிலும் இருந்து வெவ்வேறான சமிக்கிகளை அனுப்பும்.
✅ சாலை நோக்கிப் பார்க்கவும்: சாலை நோக்கிப் பார்க்கும் போது, கண்கள் மற்றும் உள் காது இடையே ஏற்படும் தகவல் முரண்பாடு குறையும். சாலையிலும் அருகில் உள்ள பொருட்களை பார்ப்பதை விட தூர உள்ள பொருட்களை பார்ப்பது சிறந்தது.
✅ பயணத்தின்போது லேசான உணவை உட்கொள்ளவும்: அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.
✅ ஜன்னலை திறந்து புதிய காற்றை சுவாசிக்கவும். சிலருக்கு Air Conditioner மணம் அதனால் உண்டாகும் உளவியல் மாற்றத்தாலும் வாந்தி தலை சுற்றல் உண்டாகலாம்.
✅ மோஷன் சிக்னஸ் மாத்திரைகள்: மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மோஷன் சிக்னஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். (Eg: Promethazine - Avomine)
🛑 Motion Sickness மாத்திரைகள் பொதுவாக தூக்கத்தை ஏற்படுத்தவல்லவை என்பதை மறக்க வேண்டாம்.
🛑🛑🛑🛑🛑
இவ்வாறான Motion Sickness பிரச்சினை உள்ள ஒருவர் தானே வாகனம் ஓட்டும்போது அந்த உணர்வுகள் ஏற்படாமல் இருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
இதற்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம்:
❤️ கட்டுப்பாட்டு உணர்வு: தானே வாகனம் ஓட்டும்போது, நாம் வாகனத்தின் மீது கட்டுப்பாடு செலுத்துகிறோம் என்ற உணர்வு இருக்கும். இது நமது மூளைக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வை அளித்து, வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்ற உணர்வுகளை குறைக்கிறது.
(உதாரணமாக வாகனத்தின் குலுக்கம், சடுதியான பிரேக் போன்றவற்றால் பயணிகள் அடையும் உடலியல் தொந்தரவை விட வாகன ஓட்டுனர் குறைவாகவே அனுபவிப்பார்.)
❤️ கவனச்சிதறல்: வாகனத்தை ஓட்டும்போது, நாம் சாலை, மற்ற வாகனங்கள், போக்குவரத்து விதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதால், உடலின் மற்ற உணர்வுகளில் இருந்து கவனம் திசை திருப்பப்படுகிறது.
❤️ எதிர்பார்ப்பு: நாம் வாகனம் ஓட்டும்போது, ஏற்படக்கூடிய அசைவுகள் மற்றும் மாற்றங்களை எதிர்பார்த்து இருப்பதால், அந்த மாற்றங்களுக்கு நம்முடைய உடல் முன்கூட்டியே தயாராகி விடுகிறது.
(உதாரணமாக வளைவுகளில் திரும்புதல், சடுதியான Break, வேக அதிகரிப்பது & குறைப்பு)
❤️ உள் காது: உள் காது நமது சமநிலையை பராமரிக்க உதவுகிறது. வாகனத்தில் பயணம் செய்யும்போது, உள் காதுக்கு கிடைக்கும் தகவல்கள் மற்றும் கண்களால் பார்க்கும் தகவல்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டு, வாந்தி மற்றும் தலை சுற்றல் ஏற்படுகிறது. ஆனால், தானே வாகனம் ஓட்டும்போது இந்த முரண்பாடு குறைவாக இருக்கும்.
📛 முக்கிய குறிப்பு: 📛
சிலருக்கு வாகனம் ஓட்டும்போதும் வாந்தி அல்லது தலை சுற்றல் ஏற்பட்டலாம். குறிப்பாக அதிக வளைவுள்ள பாதைகள், மேடுபள்ளமுள்ள பாதைகள் பயணிக்கும்போது; இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக வாகனத்தை நிறுத்தி, பாதுகாப்பான இடத்தில் இறங்கி ஓய்வெடுக்கவும்.
💞 மருத்துவ ஆலோசனை: இந்த பிரச்சனை தொடர்ந்து இருந்தால், ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
By: Dr Ziyad Aia
Consultant in Health Informatics
சிறு பருவத்தில் ஊஞ்சலாடுவது Motion Sicknessஆல் உண்டாகும் எதிர் வினைக்கு உடலை பழக்கப்படுத்த உதவும்.
(சிலருக்கு ஊஞ்சல் கூட தலை சுற்று வாந்தியை உண்டாக்கிவிடும்.)
காற்றோட்டமுள்ள திறந்த வெளியில் ஊஞ்சலில் மெது மெதுவாக வேகத்தை அதிகரித்து உடலை பழக்கப்படுத்தலாம்.
#மெய்யழகன்