Old Students'Association of Chenkalady Central College

Old Students'Association of Chenkalady Central College Official Site for Old Students' Association of Bt/Chenkalady Central College-National School President : Mr. Official group.

It is official facebook site for Old Students' Association of BT/ Chenkalady Central College-National School.
இது மட்/ செங்கலடி மத்திய கல்லூரி-தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோக பூர்வ முகப்புத்தகப் பக்கமாகும். T.Kugathasan ( Principal of C.C.C)

Secretary :
Assistant Secretary:
Treasurer :

SCHOOL DETAILS BELOW . School Name: Chenkalady Central College, National School
Address : Chenkalady, Batticaloa
School Type: National School
Zone: Kalkudah
District : Batticaloa
Phone : +94 65-2240123

நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட மேசைப்பந்து  போட்டியில்  மட்/ககு/செங்கலடி  மதிய கல்லூரி 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில்...
19/07/2026

நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட
மேசைப்பந்து போட்டியில் மட்/ககு/செங்கலடி மதிய கல்லூரி
16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. மாணவர்கள்,அதிபர், உடற்கல்வி ஆசியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும்

26,27,28.06.2026 ஆகிய தினங்களில் கின்னியாவில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் மட்/ககு/செ...
18/07/2026

26,27,28.06.2026 ஆகிய தினங்களில் கின்னியாவில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் மட்/ககு/செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் பங்குபற்றி 17 வயது பிரிவு ஆண்கள் 2ம் இடத்தையும், 20 வயது ஆண்கள் 3ம் இடத்தையும் பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉

இவர்களை வழிப்படுத்திய அதிபர் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

பயிற்றுவிப்பாளர்கள்:
1.Jeyakumar Prasannath
2.lokithan Kishopan
3.Sivabalan Harikesh
4.Vijayasuthakar Sathurjakanth
5.Sivalingam Abilaxshan
6.Kumaranathan Anojan

மாகாண மட்ட ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எமது பாடசாலை சிறப்பாகப் பங்கேற்று மூன்றாம் இடத்தை வென்றிர...
18/07/2026

மாகாண மட்ட ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் எமது பாடசாலை சிறப்பாகப் பங்கேற்று மூன்றாம் இடத்தை வென்றிருப்பது எமக்கெல்லாம் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

இவ்வெற்றிக்காக அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் உழைத்த அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் உளங்கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இச்சாதனை எமது பாடசாலையின் விளையாட்டுத் திறனையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் சிறப்புமிக்க மைல்கல்லாக அமையட்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற பல வெற்றிகளைப் பெற்று எமது பாடசாலைக்கு மேலும் புகழ் சேர்க்க எமது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

02/07/2026

#அறிவித்தல்

2027 கல்வியாண்டிற்கான தரம் 1 மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், “பழைய மாணவர்களின் பிள்ளைகள்” எனும் தகுதியின் கீழ் விண்ணப்பிக்க முடியும். இதனடிப்படையில் விண்ணப்பிக்க விரும்பும் பழைய மாணவர்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து கொள்வது நேர்முகப் பரீட்சையின்போது உதவுமென்பதை அன்புடன் அறிவிக்கின்றோம்

1. இதுவரை பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம் பெறாத பழைய மாணவர்கள்:

அங்கத்துவக் கட்டணம் – ரூ. 1,000.00
2026ஆம் ஆண்டிற்கான சந்தாப்பணம் – ரூ. 1,000.00
மொத்தம் – ரூ. 2,000.00

2. ஏற்கனவே பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள உறுப்பினர்கள்:

2026ஆம் ஆண்டிற்கான சந்தாப்பணம் – ரூ. 1,000.00

மேற்குறிப்பிட்ட தொகையை கீழே குறிப்பிடப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்து, வைப்புச் சீட்டு (Deposit Slip) அல்லது பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை பொருளாளர்
திரு. எஸ். சுஜந்தன் (+94 (77) 328 5229) அவர்களிடம் சமர்ப்பித்து, அதிகாரப்பூர்வ ரசீதினைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வங்கிக் கணக்கு விபரங்கள்

கணக்குப் பெயர்:Old Students' Association of Chenkalady Central College
வங்கி: People's Bank – Chenkalady Branch
கணக்கு இலக்கம்: 227100180060186

மேலதிக தகவல்களுக்கு:

செயலாளர்
திரு. மோகன் டிலான்
பழைய மாணவர் சங்கம்

பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்துவத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும், க.பொ.த. உயர்தர கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்...
22/06/2026

பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்துவத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும், க.பொ.த. உயர்தர கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தேவையான நிதி திரட்டும் நோக்கத்துடனும் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர் சங்க நட்புறவுக் கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான பயிற்சிப் போட்டி,நமது கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இச்சுற்றுப்போட்டியில் பல்வேறு பழைய மாணவர் பிரிவுகள் ஆர்வத்துடனும் விளையாட்டு ஒழுக்கத்துடனும் கலந்துகொண்டு போட்டியின் சிறப்பை உயர்த்தினர்.
இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய 2021 O/L & 2024 A/L பிரிவு மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றினர். மேலும், 2016 O/L & 2019 A/L பிரிவு மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

இப்போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பழைய மாணவர்களுக்கும், நடுவர்களுக்கும், ஏற்பாட்டுக் குழுவினருக்கும் மற்றும் நேரில் வருகை தந்து உற்சாகமளித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளை, 2021 O/L & 2024 A/L பிரிவு மாணவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் அவர்களது விளையாட்டுணர்விற்காக எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

செங்கலடி மத்திய கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய முதல் நாள் நற்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட்டி -  ...
20/06/2026

செங்கலடி மத்திய கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்
இன்றைய முதல் நாள் நற்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட்டி - கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், சிறப்பாவும் அமைந்தன. வீரர்களின் அதிரடி ஆட்டமும், மைதானத்தின் உற்சாகமும் அனைவரையும் ஈர்த்தது.


ஆத்ம சாந்தி பிராத்தனைஎமது பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் சுதாகர் திவிதன் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவின் காரணமாக ...
13/05/2026

ஆத்ம சாந்தி பிராத்தனை

எமது பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் சுதாகர் திவிதன் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவின் காரணமாக நேற்று 12.05.2026 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

14/04/2026

அறிவித்தல்

விசேட பொதுக்கூட்டம்

எதிர்வரும் 03.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு எமது பாடசாலையின் சப்தம் மண்டபத்தில் விசேட பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் பற்றிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அனைத்து பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்:
🔹 காலை 10.00 – இறை வணக்கம்
🔹 10.02 – தலைமை உரை
🔹 10.15 – செயலாளர் உரை
🔹 10.20 – கணக்கறிக்கை சமர்ப்பித்தல்
🔹 10.30 – இவ்வருடத்திற்கான நிகழ்ச்சிகள் பற்றிய கலந்துரையாடல்
🔹 10.45 – நன்றி உரை

செயலாளர்
பழைய மாணவர் சங்கம்

15/10/2025

கடந்த 12.10.2025 திகதி அன்று மட்/ செங்கலடி மத்திய கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கக்கோவை வலுவாக்கல் சம்பந்தமான கலந்துரையாடல் பாடசாலையின் அதிபர் திரு க.சுவர்ணேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்கள் ஒழுக்கத்தைப் பேணுதல் , நேர்த்தியான சீருடை அணிதல் , பாடசாலைக்கேற்ற தலைமுடி , போதைப்பொருள் பாவனையை எவ்வாறு தவிர்ப்பதும் , சமூக ஊடகங்களின் ஆதிக்கம் மாணவர்களின் அடுத்த கட்ட கல்வி மேம்படுத்தல் தொடர்பாகவும் அதிகம் பேசப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கக்கோவையினை வலுப்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் கல்குடா கல்வி வலயம், பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸ் திணைக்களம், சுகாதார பரிசோதகர் திணைக்கள அதிகாரிகள் மற்றும்
பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க நிருவாக குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மதகுருமார்கள், வர்த்தகர் சங்கம், சிகை அலங்கார கடை உரிமையாளர்கள் சங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு இத்தீர்மானங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கினார்.

Address

Chenkalady
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old Students'Association of Chenkalady Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share