BT/ R.K.M Shivananda Vidyalaya - National School

BT/ R.K.M Shivananda Vidyalaya - National School ☑️ Official page Of Shivananda National School , Batticaloa, SriLanka. official page of shivananda national school Batticaloa, Srilanka.

The Fifty Years

Sri ramakirishna mission was founded by swami Vivekananda with the main aim of the total spiritual re awakening of humanity. the two mai ideals of this movement are the total development of the individual in co-ordination with the upliftment of society. The eastern nations which had been under foreign yoke for nearly a century were on the verge of resurgence just at the time when swami Vivekananda visited celon (15.01.1987) co-incidental with the buddhist revival in the siouth spearheaded by Anagariga Dharmapala & the hindu revival in the north sponsored by Sri Arumaga Navalar, visit of swami Vivekananda inspired the organization of Vivekananda societiesall over the Island.One such society was founded in Batticalao and a few schools were managed by the society. Just about this time two philanthropists of kallady uppodai viz:sabapathipillai udaiyar had endowed 5000/= for the establishment of a Hindu English school. On the 10th of April 1925 there was a meeting of distinguished patriots with the purpose of exploring the possbillity of estabilishing one such school. On that occasion the sons of messrs. Kathotkamathamby Udaiyar And Sabapathippillai Udaiyar viz: Sri K.O.Veluppillai & Sri.S.O.Rathnasingam offered the resources of the Rs 5000/= Endowed by their parents & Sri K.O.Velippillai in addition donated 15 acres of land . Swami Vipulananda who was the Chief invitee was entrusted with the estabilishment of this school. The foundation for Shivananda Vidiyalaya was laid on the 26th of November, 1925 and the school was declared open with due religious obsevervances by swami vipulananda on the 15th of

🏀 QUARTER-FINAL VICTORY!We beat Wattala International School by 6 points and secured our place in the semi-finals!Shivan...
03/10/2026

🏀 QUARTER-FINAL VICTORY!

We beat Wattala International School by 6 points and secured our place in the semi-finals!

Shivananda – 63
Wattala International – 57

One step closer to the final! 💪
Keep fighting, Team Shivananda! 🎉

சிறுவர் தினமும் கனிஷ்ட மாணவர்களுக்கான Band வாத்தியக் குழு ஆரம்ப நிகழ்வும்! இன்று எமது பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வும்,...
01/10/2026

சிறுவர் தினமும் கனிஷ்ட மாணவர்களுக்கான Band வாத்தியக் குழு ஆரம்ப நிகழ்வும்!

இன்று எமது பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வும், கனிஷ்ட மாணவர்களுக்கான Band வாத்தியக் குழுவின் ஆரம்ப நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் அவர்களின் ஆசியுடன், அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு இணைப்பாளர் திரு. A. பிரகாஷ் அவர்களும், பல் வைத்திய நிபுணர் திருமதி. கிருஷாந்தி கேதீசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

👨‍👩‍👧‍👦 பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

🎺 Band வாத்தியக் குழுவிற்கான பங்களிப்புகள்

கனிஷ்ட மாணவர்களுக்கான Band வாத்தியக் குழுவின் உபகரணங்களை பெற்றோர்கள் தங்களது நிதிப் பங்களிப்பின் மூலம் பெற்றுக்கொடுத்தமை பாராட்டுக்குரியது. மேலும், Band குழுவினருக்கான சீருடைச் செலவின் ஒரு பகுதியை KOV நம்பிக்கை நிதியம் வழங்கியுள்ளது.

🙏 மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக பங்களித்த பெற்றோர்களுக்கும் KOV நம்பிக்கை நிதியத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

🎶 மாணவர்களை அன்புடனும் அர்ப்பணிப்புடனும் பயிற்றுவித்து, Band வாத்தியக் குழுவை உருவாக்க பெரும் பங்களிப்பு செய்த சிவாநந்தியன் திரு. வசந்தகுமார் பிருஜாங்கன் அவர்களுக்கு விசேட நன்றிகள்.

மேலும், இம்முயற்சிக்கு பங்களித்த பகுதித் தலைவர் திருமதி. ராஜ்பிரியா சுதாகர், ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் மற்றும் பிரதி அதிபர்களான திருமதி. யாழினி தனுசன் மற்றும் திரு. குலேந்திரகுமார் ஆகியோருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.

இந்நிகழ்வு எமது மாணவர்களின் இசைத் திறமை, ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் புதிய பயணத்தின் அழகான தொடக்கமாக அமையட்டும்!

வாழ்க மாணவர் திறமை!
வளர்க எமது பாடசாலை! 🎺🎶🏫

எமது 20 வயதுக்குட்பட்ட கூடைப்பந்து அணி பாதுகாப்பாக கொழும்பை சென்றடைந்து, இன்று தங்கும் விடுதியில் தங்கியுள்ளது.அவர்களின்...
01/10/2026

எமது 20 வயதுக்குட்பட்ட கூடைப்பந்து அணி பாதுகாப்பாக கொழும்பை சென்றடைந்து, இன்று தங்கும் விடுதியில் தங்கியுள்ளது.

அவர்களின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. போட்டித் தொடர் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும்.

எமது வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! சிறப்பாக விளையாடி, இந்த அனுபவத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து, எமக்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்! 🏀💪🏆

Our three school basketball teams will be participating in a tournament in Colombo on the 1st, 2nd, and 3rd of October. ...
26/09/2026

Our three school basketball teams will be participating in a tournament in Colombo on the 1st, 2nd, and 3rd of October. 🏀

We wish all three teams the very best of luck! 💪🏆

பெருமை சேர்த்த எமது மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!பசுந்தரை நிறுவனத்தினால் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான...
26/09/2026

பெருமை சேர்த்த எமது மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

பசுந்தரை நிறுவனத்தினால் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விவாதப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்களும் பங்கேற்று, தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

விவாதத் திறன், அறிவாற்றல், தன்னம்பிக்கை மற்றும் சிறந்த கருத்து வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் எமது பாடசாலையின் பெருமையை மேலும் உயர்த்திய மாணவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இம்மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எமது நன்றிகளும் பாராட்டுகளும்.

எமது மாணவர்களின் திறமைகள் மேலும் வளர்ந்து, எதிர்காலத்தில் பல்வேறு தளங்களில் பல சாதனைகளைப் படைக்க எமது இனிய வாழ்த்துகள்!

இலங்கை பாடசாலை மல்யுத்த சாம்பியன் கிண்ணத்தை முதல் தடவையாக வென்ற சிவானந்திய மல்யுத்த வீரர்கள்அகில இலங்கை பாடசாலை மல்யுத்த...
15/09/2026

இலங்கை பாடசாலை மல்யுத்த சாம்பியன் கிண்ணத்தை முதல் தடவையாக வென்ற சிவானந்திய மல்யுத்த வீரர்கள்

அகில இலங்கை பாடசாலை மல்யுத்தப் போட்டி 11.09.2026 முதல் 14.09.2026 வரை பண்டாரவளை உள்ளக அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில், அபார திறமையையும் துணிச்சலையும் வெளிப்படுத்திய மட்./சிவானந்தா வித்தியாலய மல்யுத்த வீரர்கள் 13 புள்ளிகளைப் பெற்று இவ்வருடத்திற்கான அகில இலங்கை பாடசாலை மல்யுத்த சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.

10 புள்ளிகளைப் பெற்ற மொரட்டுவை Prince of Wales’ College இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் தங்களது அசைக்க முடியாத போராட்ட குணத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தி, முதல் தடவையாக அகில இலங்கை பாடசாலை மல்யுத்த சாம்பியன் பட்டத்தை சிவானந்தாவுக்கு பெற்றுத் தந்த வீரர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது சிவானந்தாவின் பெருமை மட்டுமல்ல; மட்டக்களப்பு நகருக்கும் தமிழ் மண்ணுக்கும் கிடைத்த ஒரு வரலாற்றுப் பெருமையாகும்.

வீரம் விளைந்த மண்ணின் வீரர்கள்

சிவானந்தா – அகில இலங்கை பாடசாலை மல்யுத்த சாம்பியன் 2026

13 புள்ளிகள் – Champion

Heartfelt congratulations to Sanjeev Drushanth for achieving a remarkable victory at the national level and bringing gre...
13/09/2026

Heartfelt congratulations to Sanjeev Drushanth for achieving a remarkable victory at the national level and bringing great pride to his school and community!

Winning the Gold Medal in the Under-20 61 kg category amidst intense competition is no ordinary achievement. It is a well-deserved recognition of his hard work, dedication, and unwavering determination.

The commitment and guidance of his coach, Mr. Sivanandiyan V. Thiruchelvam, who identified the student’s talent and nurtured him into a National Champion, are truly commendable.

Warmest wishes to the Shivananda School community on this historic achievement, and to Drushanth for a bright and successful journey ahead in the world of sports!

13/09/2026

🏆🥇 அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டி – 2026 🥇🏆

2026ஆம் ஆண்டு அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டியில், பண்டாரவளை உள்ளக அரங்கில் தங்களது திறமையையும் வீரத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி, 20 வயதிற்குட்பட்ட பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள எமது இளம் வீரர்கள்,

🥋 நெல்சன் கிஷோநாத் – 54kg
🥋 திவ்யராஜா ஆதித்தியா – 61kg
🥋 சஞ்சீவ் டிருஷாந் – 79kg

ஆகிய மூவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்! ❤️👏

கடினமான போட்டிகளுக்கு மத்தியிலும், வீரர்களின் திறமைகளைச் சரியாக அடையாளம் கண்டு, அவர்களை இறுதிப் போட்டி வரை சிறப்பாக வழிநடத்தி வரும் பயிற்றுவிப்பாளர் திரு. சிவாநந்தியன் V. திருச்செல்வம் அவர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. 🙏👏

🌟 இறுதிப் போட்டிக்கான எமது வாழ்த்துச் செய்தி: 🌟

"எல்லாம் வல்ல இராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவியார், பேச்சித்தாயார் மற்றும் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரின் அருள் ஆசியுடன், களத்தில் வீரியத்தோடும் மன உறுதியோடும் போராடி, எமது மூன்று வீரர்களும் இறுதிப் போட்டியில் மகத்தான வெற்றியைப் பெற்று, தங்கப் பதக்கங்களைக் கைப்பற்ற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!" 🙏🥇

💪🔥 இளம் வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற எமது இதயம் கனிந்த வாழ்த்துகள்!

🏆🥇 வெற்றி உங்களதே! 🥇🏆

சிவாநந்த பாடசாலை சமூகம் ❤️

(Blue singlet 54kg சிவானந்தியன்)

மாகாண மட்ட வெற்றியாளர் – செல்வன் V. ரிஷிதரன்மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் 16 வயதிற்குட்பட்டோருக்கான உயரம் பாய்தல் (...
09/09/2026

மாகாண மட்ட வெற்றியாளர் – செல்வன் V. ரிஷிதரன்

மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் 16 வயதிற்குட்பட்டோருக்கான உயரம் பாய்தல் (High Jump) பிரிவில் முதலிடம் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவன் V. ரிஷிதரனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! 🥇🏆

அவரது திறமையை செதுக்கி, இந்த வெற்றிக்கு வழிவகுத்த உடற்கல்வி ஆசிரியர் திரு. ராஜபவான் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்து பயிற்சியளித்த சிவாநந்தியன் திரு. விதுஷன் மற்றும் சிவாநந்தியன் திரு. யசோதனன் ஆகியோருக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவித்து, தொடர்ச்சியான வழிகாட்டல்களையும் ஆதரவையும் வழங்கி வரும் அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்கள் ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 👏

மாணவன் V. ரிஷிதரன், அடுத்த கட்டமான தேசிய மட்டப் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🇱🇰🏆

“மாகாணத்தை வென்ற வெற்றி… தேசியத்தை நோக்கிய அடுத்த பயணம்!” 💪🥇🔥

Address

Shivananda Vidyalaya National School, New Kalmunai Road
Batticaloa
30000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94652222379

Alerts

Be the first to know and let us send you an email when BT/ R.K.M Shivananda Vidyalaya - National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BT/ R.K.M Shivananda Vidyalaya - National School:

Shortcuts

Share

Category