Kawathamunai Al-Ameen Maha Vidyalaya

Kawathamunai Al-Ameen Maha Vidyalaya It is a 1C type provincial school which is governed by the Ministry of Education, Sri Lanka.

𝐁𝐞𝐬𝐭 𝐖𝐢𝐬𝐡𝐞𝐬 𝐭𝐨 𝐀𝐥𝐥 𝐊𝐚𝐰𝐚𝐭𝐡𝐚𝐦𝐮𝐧𝐚𝐢 𝐀𝐥-𝐀𝐦𝐞𝐞𝐧 𝐌𝐚𝐡𝐚 𝐕𝐢𝐝𝐲𝐚𝐥𝐚𝐲𝐚 𝐨𝐧 𝐘𝐨𝐮𝐫 𝐆.𝐂.𝐄. (𝐀/𝐋) 𝐄𝐱𝐚𝐦𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟔
09/08/2026

𝐁𝐞𝐬𝐭 𝐖𝐢𝐬𝐡𝐞𝐬 𝐭𝐨 𝐀𝐥𝐥
𝐊𝐚𝐰𝐚𝐭𝐡𝐚𝐦𝐮𝐧𝐚𝐢 𝐀𝐥-𝐀𝐦𝐞𝐞𝐧 𝐌𝐚𝐡𝐚 𝐕𝐢𝐝𝐲𝐚𝐥𝐚𝐲𝐚 𝐨𝐧 𝐘𝐨𝐮𝐫 𝐆.𝐂.𝐄. (𝐀/𝐋) 𝐄𝐱𝐚𝐦𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟔

𝐁𝐞𝐬𝐭 𝐖𝐢𝐬𝐡𝐞𝐬 𝐭𝐨 𝐀𝐥𝐥 𝐊𝐚𝐰𝐚𝐭𝐡𝐚𝐦𝐮𝐧𝐚𝐢 𝐀𝐥-𝐀𝐦𝐞𝐞𝐧 𝐌𝐚𝐡𝐚 𝐕𝐢𝐝𝐲𝐚𝐥𝐚𝐲𝐚 𝐨𝐧 𝐘𝐨𝐮𝐫 𝐆𝐫𝐚𝐝𝐞 𝟓 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐄𝐱𝐚𝐦𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟔
08/08/2026

𝐁𝐞𝐬𝐭 𝐖𝐢𝐬𝐡𝐞𝐬 𝐭𝐨 𝐀𝐥𝐥
𝐊𝐚𝐰𝐚𝐭𝐡𝐚𝐦𝐮𝐧𝐚𝐢 𝐀𝐥-𝐀𝐦𝐞𝐞𝐧 𝐌𝐚𝐡𝐚 𝐕𝐢𝐝𝐲𝐚𝐥𝐚𝐲𝐚 𝐨𝐧 𝐘𝐨𝐮𝐫 𝐆𝐫𝐚𝐝𝐞 𝟓 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐄𝐱𝐚𝐦𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟔

2ஆம் தவணை தேர்ச்சி அறிக்கை மற்றும் பரிசில்கள் வழங்கிவைப்புநடைபெற்று முடிந்த இரண்டாம் தவணைப் பரீட்சையில் ஆரம்ப பிரிவு, இட...
06/08/2026

2ஆம் தவணை தேர்ச்சி அறிக்கை மற்றும் பரிசில்கள் வழங்கிவைப்பு

நடைபெற்று முடிந்த இரண்டாம் தவணைப் பரீட்சையில் ஆரம்ப பிரிவு, இடைநிலை பிரிவு மற்றும் உயர்தரப் பிரிவு ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை மற்றும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு 31.07.2026 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் ஏ.ருபாய்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதில், பிரதி அதிபர், உப அதிபர், ஆரம்பப் பிரிவு தலைவர் மற்றும் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த பரீட்சையில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான தேர்ச்சி அறிக்கை மற்றும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி பாராட்டப்பட்டனர்.

மேலும் தரம் 9m வகுப்பில் தொடர்ச்சியாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவிகளுக்கும் 6 - 9 வரையிலான வகுப்புகளில் ICT பாட பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவிகளுக்கும் குறித்த வகுப்பாசிரியர்களினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வின் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களுக்கான அனுசரணையினை பாடசாலையின் பரீட்சை குழுவினரும்। தனவந்தர்களும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 ாழ்த்துக்கள்_සුභ_පැතුම් 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக எம...
02/08/2026

ாழ்த்துக்கள்_සුභ_පැතුම්

2025 ஆம் கல்வி ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக எமது பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் கலைத் துறையினூடாக பல்கலைகழக பிரவேசத்திற்கான அனுமதியினை பெற்றுள்ளனர்.

அந்த வகையில் எம்.எம்.எப்.சபானா பேராதனை பல்கலைகழகத்தின் கலைத் துறைக்கும்,

எம்.ஜே.எப்.ஆதிலா தென்கிழக்கு பல்கலைகழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறைக்கும்,

எச்.எம்.எப்.அஸ்ரிபா சப்றகமுவ பல்கலைகழகத்தின் கலைத் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு எம்.ஐ.சின்தீஸ் என்ற மாணவி சப்றகமுவ பல்கலைகழகத்தின் கலைத் துறைக்கு தெரிவு செய்யப்படவுள்ளார்.

குறித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது உயர்கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக அமைய வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

கல்வி அபிவிருத்தியில் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் இவ்வடைவு மட்டத்தினை பெறுவதற்கு தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய அதிபர் ஏ.ரூபாய்தீன் மற்றும் பிரதி அதிபர்,உப அதிபர் ஆகியோருக்கும், கற்பித்த ஆசிரியர்களான ஏ.பீ.பஸ்மிலா(புவியியல்), எஸ்.எம்.றமீஸ் (பர்சான்)(தமிழ்) எஸ்.எப்.ஜெனீரா (இஸ்லாமிய நாகரீகம்) மற்றும் என்.பி.எம்.றிஹாஸ் இஸ்மாயில்
(பொது ஆங்கிலம்) ஆகியோருக்கும்
இம் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்து தந்திருந்த அல் முபாறக் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் ஜனாப் ஏ.மீராசாஹிப் (மீரான் ஹாஜி) உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களுக்கும்
பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி அபிவிருத்திச் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவத் தலைவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகடந்த இரண்டு வருடங்களாக எமது பாடசாலையில் மாணவத் தலைவர்களாக பணியாற்றி,...
30/07/2026

மாணவத் தலைவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

கடந்த இரண்டு வருடங்களாக எமது பாடசாலையில் மாணவத் தலைவர்களாக பணியாற்றி, இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான
சான்றிதழ்களும் அவர்களது பரீட்சைக்கான அனுமதி பத்திரமும் வழங்கும் நிகழ்வு கடந்த
2026.07.28 ஆம் திகதி பாடசாலை அதிபர் அவர்களின் ஏ.ருபாய்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது குறித்த இரண்டு வருட காலப்பகுதியில் பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றி தங்களது ஆளுமைகளை வளர்த்துக் கொண்ட இம் மாணவ தலைவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்கள் கல்லூரியின் முதல்வர் மற்றும் க.பொ.த உயர்தர வகுப்பு ஆசிரியர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

பிரியாவிடை நிகழ்வும் ஆசிரியர் கௌரவிப்பு விழாவும்.இம்முறை (2026) க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பிரியாவ...
20/07/2026

பிரியாவிடை நிகழ்வும் ஆசிரியர் கௌரவிப்பு விழாவும்.

இம்முறை (2026) க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வைபவமும் கடந்த 2026.07.14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று முதல்வர் ஏ.ருபாய்தீன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சவுதி அரேபியாவின் பிரதித் தூதுவர் என்.எம்.அனஸ் (SLFS) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சிறப்புரையாற்றினார்.

மேலும் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக
பிரதி அதிபர் உப அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் இம் மாணவர்களுக்கு தரம் 11 வரை கற்பித்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

2027 ஆம் வருடம் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் பிரதம அதிதி அவர்களுக்கும், பிரியாவிடை பெறும் மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இம் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியினை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 #சான்றிதழ்கள்_வழங்கி_வைப்பு கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி...
18/07/2026

#சான்றிதழ்கள்_வழங்கி_வைப்பு

கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி அடைந்த மாணவர்களுக்காக கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட சான்றிதழ்கள் நேற்றைய தினம் காலை ஆராதனையின் போது பாடசாலை முதல்வர் ஏ.ருபாய்தீன் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

டெங்கு கட்டுப்பாட்டுச் செயற்றிட்டம் -2026தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு எமது பாடசாலை சூழலினை சுத்தப்படு...
15/07/2026

டெங்கு கட்டுப்பாட்டுச் செயற்றிட்டம் -2026

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு எமது பாடசாலை சூழலினை சுத்தப்படுத்தும் சிரமதான வேலைத்திட்டம் 2026.07.13 திங்கள்கிழமை அன்று காலை இடம்பெற்றது.

இச் சிரமதான வேலைத்திட்டத்தில் நாவலடியில் அமைந்துள்ள ராணுவத்தின் 7வது கெமுணு ஹேவா படையின் ராணுவ வீரர்கள்,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.

 #விஷேட_காலை_ஆராதனை_நிகழ்வு வாராந்த மாணவர் காலை ஆராதனை நிகழ்வு பாடசாலை முதல்வர் ஏ.ருபாய்தீன் அவர்களின் தலைமையில் 2026.07...
07/07/2026

#விஷேட_காலை_ஆராதனை_நிகழ்வு

வாராந்த மாணவர் காலை ஆராதனை நிகழ்வு பாடசாலை முதல்வர் ஏ.ருபாய்தீன் அவர்களின் தலைமையில் 2026.07.06 நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது.

இதன் எமது அழைப்பினை ஏற்று விஷேட விருந்தினராக 🇸🇦 சவுதி அரேபியாவிற்கான பிரதித் தூதுவர் என்.எம்.அனஸ் (SLOAS) அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் கல்வியினால் சாதிக்க முடியும் என்பதை தனது அனுபவத்தினூடாக தெளிவுபடுத்தியதோடு மாணவர்களை கற்றலின்பால் ஊக்குவிக்கும் விதமாக பல அறிவுரைகளையும் வழங்கினார்.

எமது குறுகிய கால அழைப்பினை ஏற்று மாணவர்களுக்கு பல நல்லுபதேசங்களை வழங்கிய தங்களுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 #தரம்_5_மாணவர்களுக்கான_இலவச_கல்விச்_செயலமர்வுகாவத்தமுனை கல்வி அபிவிருத்தி குழுவினர் தரம்  5 புலமைப் பரீட்சை மற்றும் க. ...
28/06/2026

#தரம்_5_மாணவர்களுக்கான_இலவச_கல்விச்_செயலமர்வு

காவத்தமுனை கல்வி அபிவிருத்தி குழுவினர் தரம் 5 புலமைப் பரீட்சை மற்றும் க. பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களின் பரீட்சை அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் வகையில் வருடாந்தம் இலவச கல்விக் கருத்தரங்குகளை எமது மாணவர்களுக்காக நடாத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இம்முறை தரம் 5 புலமைப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு எமது பாடசாலை மாணவர்கள், காகித நகர் மில்லத் வித்தியாலய மாணவர்கள் மற்றும் மர்கூம் முகைதீன் அப்துல்காதர் வித்தியாலய மாணவர்கள் உள்ளடக்கியதாக 27.06.2026 நேற்று ஞாயிற்றுக் கிழமையன்று வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.

செயலமர்வின் வளவாளராக E-way கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான எம்.ஏ.எம்.சாதிக் மற்றும் ஏ.எம்.றாபி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரீட்சையில் இலகுவான முறையில் விடையளிக்க முடியுமான பல வழி முறைகள் உள்ளடங்கியதான கற்பித்தல் முறைமையினை மேற்கொண்டனர்.

இதன்போது துல்லியமான முறையில் விடைகளை செய்து காட்டிய மாணவர்களுக்கு ஆசிரியர்களால் பதக்கங்களும்🥇 அணிவிக்கப்பட்டன.

குறித்த இலவச செயலமர்வினை ஒழுங்கு படுத்தி தந்த காவத்தமுனை கல்வி அபிவிருத்திக் குழுவினருக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

School Road, Kawathamunai, Vahaneri
Batticaloa
30424

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 14:00

Telephone

+94652051927

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kawathamunai Al-Ameen Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kawathamunai Al-Ameen Maha Vidyalaya:

Shortcuts

Share

Category