Meeravodai, Sri Lanka

Meeravodai, Sri Lanka Meeravodai is one of most beautiful places in Sri Lanka.It's situated in Batticaloa district and sur

ASIA,
SRI LANKA,
EASTERN PROVINCE,
BATTICALOA DISTRICT,
KALKUDAH ELECTORATE,
KORALAI PATTU WEST DIVISIONAL SECTARIAT.

27/09/2026

நீங்கள் சமூக ஆய்வு ஒன்றை எவ்வாறு மேற்கொள்வது என்று சிந்திப்பவரா? இது உங்களுக்கான இலவச இணையவழி கருத்தரங்கு சாய்ந்தமருது மாளிகைக்காடு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பினரால் தேர்ச்சி பெற்ற சர்வதேச வளவாளரினை கொண்டு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கலந்து பயன் பெறலாம்.

📢 UGAS proudly presents an insightful Research Workshop to enhance your research knowledge, skills, and academic thinking. 🎓🔍

🎙️ Resource Person:
Dr. M.B. Mohamed Silmy
(MBBS-SL, M.Sc. Com, Med (Reading), PGIM, University of Colombo)
SLMC Registered Medical Practitioner | Public Health Researcher | Master Trainer in Clinical Audit

📅 Date:04.10.2026
⏰ Time:7.00 PM – 9.00 PM
💻 Platform:Via Zoom

👥 Who Can Participate?
🎓 Undergraduates • Graduates • Professionals • Lecturers • School Students • Teachers • Government Staff • Research Enthusiasts

📚 What You Can Gain?
✨ Research knowledge & skills
✨ Academic research insights
✨ Practical research guidance
✨ Networking opportunities

📲 Join the WhatsApp Group to get the Zoom Link
https://chat.whatsapp.com/Ko9TeR01FX779sdwZOEImy

📢 Join us and strengthen your research journey!

Organized by:
Undergraduates’ Association of Sainthamaruthu

அதிகம் பகிரவும் 📌

27/09/2026
29/08/2026

இலங்கையின் முதலாவது பள்ளிவாசல் இது .
இது எங்கே அமைந்துள்ளது ....
பள்ளிவாசலின் பெயர் என்ன ?

27/08/2026

One of the best Educational website in Sri Lanka. Main aim is to help Students Teachers, Undergraduates and Medcial Students even Doctors .

11/08/2026

இலங்கையில் உள்ள பள்ளிவாசல் .

இது எந்த இடம் என்று கண்டுபிடிக்கவும் .
. 👇👇👇👇
விடை comment section இல்

04/08/2026

மரணத்தின் வர்த்தகம்: 2026இல் புகையிலை இல்லாத உலகை நோக்கிய ஒரு பார்வை
Part 2
▪️▪️▪️▪️▪️▪️▪️

2. திரைக்குப் பின்னால் நடக்கும் சதி:
புகையிலை நிறுவனங்களின் தலையீடு (To***co Industry Interference) புகையிலை நிறுவனங்கள் தமது இலாபத்திற்காகப் பயன்படுத்தும் உத்திகள் "புத்தாக்கம்" (Innovation) எனும் போர்வையில் மறைந்துள்ளன. மின்முறை சிகரெட்டுகள் (E-cigarettes), நிகோடின் பைகள் (Ni****ne Pouches) மற்றும் நவீன சாதனங்கள் ஊடாக இளைஞர்களைக் கவர்ந்து அவர்களை நிரந்தர அடிமைகளாக்க (Hooking a new generation) நிறுவனங்கள் முயல்கின்றன. 2026 ஆம் ஆண்டின் ஆய்வுகளின்படி, பல நாடுகளில் பெரியவர்களை விடச் சிறுவர்கள் 'வேப்பிங்' (Va**ng) செய்வதற்கு ஒன்பது மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் FCTC 5.3ஆவது சரத்து, அரசாங்கக் கொள்கைகளில் நிறுவனங்கள் தலையிடுவதைத் தடுக்கிறது. பொதுச் சுகாதாரக் கொள்கைகளைப் புகையிலை நிறுவனங்களின் வணிக நலன்களிலிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இவர்கள் பயன்படுத்தும் இரண்டு முக்கிய ஆயுதங்கள்:

A) முன்னணி அமைப்புகள் (Front Groups)
இவை புகையிலை நிறுவனங்களால் நிதி அளிக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளாகும். சில்லறை விற்பனையாளர் சங்கங்கள் (Retailer Associations) சிகரெட் வரிகளை உயர்த்தும் போது, "சிறு கடைகள் நஷ்டமடையும்" அல்லது "சட்டவிரோத வர்த்தகம் அதிகரிக்கும்" என்ற வாதங்களை இவை முன்வைக்கின்றன.

விவசாய சங்கங்கள்:
புகையிலை பயிரிடும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, கட்டுப்பாடுகளைக் கடுமையாக எதிர்க்கின்றன.

B) சமூகப் பொறுப்புணர்வுக் திட்டங்கள் (Corporate Social Responsibility - CSR)
இவை நிறுவனங்களுக்கு ஒரு 'நல்லெண்ண உருவத்தை' (Good Image) உருவாக்கி, கொள்கை வகுப்பாளர்களை நெருங்குவதற்குப் பாலமாக அமைகின்றன.

நீடித்த விவசாயத் திட்டங்கள்:
புகையிலை அல்லாத பிற பயிர்களைப் பயிரிட உதவுவது போன்ற திட்டங்கள் மூலம் "நாங்கள் விவசாயிகளின் நண்பன்" என்ற பிம்பத்தை உருவாக்குகின்றன.

சமூக நலன்புரி உதவிகள்:
இயற்கை போது அனர்த்தங்களின் நிவாரணம் வழங்குதல் அல்லது பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல் மூலம் அரசியல்வாதிகளின் நன்மதிப்பைப் பெற முயல்கின்றன.

சூழல் பாதுகாப்புப் போர்வை:
மரம் நடுதல் போன்ற திட்டங்கள் மூலம், புகையிலைச் செய்கையினால் ஏற்படும் பாரிய சூழல் மாசடைவை (Planetary Health Impact) மறைக்க முற்படுகின்றன.

பாதுகாப்பான நோக்கி எதிர்காலத்தை நோக்கி
தடுப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வு 2026இன் கருப்பொருள் வலியுறுத்துவது போல, நிறுவனங்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க (Countering Addiction) வலுவான கொள்கை மாற்றங்கள் அவசியமாகும்.

சுவை மற்றும் விளம்பரத் தடை:
புகையிலை மற்றும் நிகோடின் தயாரிப்புகளின் கவைகள் (Bans on Flavours) மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்ட வேண்டும்.

கல்வித் திட்டம்
பாடசாலைகளில் புகையிலை ஒழிப்புப் பாடத்திட்டங்கள் (School Curriculum) மூலம் மாணவர்களுக்கு இதன் பின்னாலுள்ள ஆபத்துகளைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆதரவு வழங்குதல்:
புகைபிடிப்பதை நிறுத்த விரும்புவோருக்கு அறிவியல் ரீதியான ஆதரவு (Evidence-Based Cessation Support) கிராம மட்டம் வரை கொண்டு செல்லப்பட வேண்டும்.

முன்னோக்கிச் செல்லும் வழி:
புகையிலை அற்ற இலங்கைக்கான அறைகூவல் இலங்கையைப் பொறுத்தவரை, தேசிய புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தை (NATA Act) 2026 இன் சவால்களுக்கு ஏற்ப மறுசீரமைக்க வேண்டும். புதிய வகை நிகோடின் சாதனங்களைச் சட்டவிரோதமாக்குவதுடன், கண்காணிப்புப் பொறிமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

அரசாங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர் குரல்கள் ஒன்றிணைந்து புகையிலை நிறுவனங்களின் தந்திரங்களை அம்பலப்படுத்த (Unmasking the Appeal) வேண்டும். புகையிலை வரி விதிப்பை (Taxation) மேலும் அதிகரிப்பதுடன், அந்த வருமானத்தை இளைஞர்களுக்கான விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது சிறந்தது.

2026ஆம் ஆண்டு இத்தினத்தில் நாம் எடுக்கும் உறுதிமொழி "எமது பிள்ளைகளைப் போதைச் சுழலில் இருந்து காப்போம்" என்பதாக இருக்கட்டும். புகையிலை நிறுவனங்கள் விரிக்கும் அழகான வலைகளுக்குப் பின்னால் மரணம் மறைந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு இளைஞனும் உணர வேண்டும். வாழ்க்கை என்பது அழகான ஒரு பரிசு. அதனைச் செயற்கை நிகோடின் சுவைகளுக்காகத் தாரை வார்த்து விடாதீர்கள். ஆரோக்கியமான தேசமே ஒரு நாட்டின் உண்மையான செல்வம். ஒன்றிணைவோம், புகையிலை அற்ற புதியதொரு விடியலை நோக்கிப் பயணிப்போம்!

Dr M.B.M. SILMY (MBBS)
MSc Community Medicine (Rd) Medical Researcher in Public Health

Join MIRT Lanka Now:
https://chat.whatsapp.com/Ce6SBSUNAwP5VwfQ5QeyGi

04/08/2026

இப்பழத்தை யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா????

நண்பர்களுக்கு பண்ணி அவர்களது சிறுவயது காலத்தை நினைவூட்டுங்கள்.

04/08/2026

யாருக்காவது ஞாபகம் உள்ளதா??? சிறுவயதில் விளையாடியது.
உங்கள் நண்பர்களுக்கு பண்ணி தெரியப்படுத்துங்கள்.

https://www.facebook.com/61574668960210/posts/122185880720822298/?mibextid=rS40aB7S9Ucbxw6v
04/08/2026

https://www.facebook.com/61574668960210/posts/122185880720822298/?mibextid=rS40aB7S9Ucbxw6v

பராமரிப்பாளர்களையும் கவனிப்போம்: அன்பின் நிழலில் தங்களை மறப்பவர்களுக்கான ஓர் அரவணைப்பு. (Part 1)

Dr M.B.M . SILMY (MBBS)
SLMC Registered Doctor .
Msc in community medicine (Rdng)
Postgraduate Institute of Medicine , University of Colombo .

பராமரிப்புச் சுமை (Caregiver Burden) என்பது ஒரு நாட்பட்ட நோய் (Chronic illness), மாற்றுத்திறன் (Disability) அல்லது முதுமை நிலைகாரணமாக (Age-related decline) பாதிக்கப்பட்டுள்ள ஒரு குடும்ப உறுப்பினருக்கோ அல்லது நெருக்கமானவருக்கோ, எந்தவித ஊதியமும் பெறாமல் தொடர்ச்சியான சேவைகளை வழங்கும் ஒருவருக்கு ஏற்படும் உடல், உணர்ச்சி, நிதி மற்றும் சமூக ரீதியான கடும் அழுத்த நிலையைக் குறிக்கும்.
சமூகவியல் மற்றும் மருத்துவ ஆய்வுகளின்படி, "ஒரு பராமரிப்பாளர் தனது உணர்ச்சிசார் நிலை (Emotional health), உடல் ஆரோக்கியம் (Physical health), சமூக வாழ்க்கை (Social life) மற்றும் நிதி நிலைமை (Financial status) ஆகியன ஒரு நோயாளியைப் பராமரிப்பதன் மூலம் எவ்வகையில் பாதிப்படைகின்றன என உணரும் அளவீடே" பராமரிப்புச் சுமை என உத்தியோகபூர்வமாக வரையறுக்கப்படுகிறது.

மருத்துவ உலகம் நோயாளிகளின் நோய் நிலைமைகளையும், அவர்களுக்கான சிகிச்சை முறைகளையும் (Treatment methods) பற்றி எப்போதுமே விரிவாகப் பேசி வருகின்றது. ஆனால், அந்த நோயாளிகளுக்குப் பின்னால் சத்தமில்லாமல் உழைக்கும் ஒரு பெரும் கூட்டம் எப்போதுமே சமூகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டே இருக்கின்றது. அவர்கள்தான் முறைசாரா பராமரிப்பாளர்கள் (Informal Caregivers).

பொதுவாக, ஒரு குடும்பத்தில் எவரேனும் கடுமையான அல்லது நீண்டகால நோய்க்கு ஆளாகும்போது, அவசியமான மருத்துவப் பராமரிப்புக்கு அப்பாற்பட்டு, அன்றாட தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு வாழ்க்கைத் துணை (Spouse), வளர்ந்த பிள்ளைகள் (Adult children), உடன்பிறந்தவர்கள் (Siblings) அல்லது நெருங்கிய நண்பர்கள் மீது விழுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களை ஒரு 'பராமரிப்பாளர்' என்று அடையாளப்படுத்துவதே இல்லை. மாறாக, இதனைத் தங்களது தவிர்க்க முடியாத குடும்பக் கடமை (Family obligation) அல்லது அன்பின் வெளிப்பாடு என்றே கருதுகின்றனர்.
பராமரிப்பு என்பது ஒரு வகை சத்தமில்லாத தியாகம் (Silent sacrifice). ஆரம்பத்தில் மிகுந்த அன்போடும், அக்கறையோடும் இப்பணியைத் தொடங்கும் நபர்கள், காலம் செல்லச் செல்ல தங்களின் சொந்த தேவைகளையும் ஆரோக்கியத்தையும் முழுமையாக மறந்துவிடுகின்றனர். நாட்பட்ட நோயாளிகளின் தேவைகளைத் தொடர்ச்சியாகக் கவனித்துக் கொள்ளும்போது ஏற்படும் தீவிர அழுத்தமானது, காலப்போக்கில் அவர்களை ஒரு படுகுழிக்குள் தள்ளிவிடுகிறது. இந்த நிலையே மருத்துவ மொழியில் பராமரிப்பாளர் சோர்வு நிலை (Caregiver burnout) என அழைக்கப்படுகிறது. இதன்போது, அவர்கள் ஆரம்பத்தில் காட்டிய அன்பான அணுகுமுறையிலிருந்து விலகி, எதிர்மறையான (Negative) அல்லது அக்கறையற்ற (Apathetic) ஒரு மனநிலைக்கு மாறக்கூடும். எனவே, நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு முன்னதாக, அவர்களைப் பராமரிப்போரின் நலனைப் பாதுகாப்பது இன்றைய மருத்துவ உலகின் மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது.

உலகளாவிய மற்றும் உள்ளூர் நிலைமை (Global and Local Situation) :

பராமரிப்புச் சுமை என்பது ஏதோ ஒரு தனிநபர் சார்ந்த அல்லது ஒரு குடும்பம் சார்ந்த பிரச்சினை அல்ல. இது ஒரு சர்வதேச பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது (Global public health issue).

உலகளவில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பதிவுகள் மற்றும் முறையான ஆய்வுகள் (Systematic reviews) மூலம், பராமரிப்புச் சுமை பற்றிய திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பிரம்மாண்டமான ஆய்வொன்றில் சமூகங்களில் வாழும் நாட்பட்ட நோயாளிகளின் பராமரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள் தொகுக்கப்பட்டன. உலகளவில் குடும்பப் பராமரிப்பாளர்கள் மிக மோசமான மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் ஆசியாவின் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளை (Low- and Middle-Income Countries - LMICs) மையமாகக் கொண்டு வெளியிடப்பட்ட மற்றுமொரு முறையான ஆய்வில், ஞாபகமறதி நோய் (Dementia) உள்ள முதியவர்களைப் பராமரிப்போரின் நிலை விவரிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலப் பராமரிப்பு (Long-term care) என்பது இந்த ஆசிய நாடுகளில் மிகக் கடுமையான சுமையைத் தோற்றுவிப்பதுடன், முறையான சமூகப் பாதுகாப்பு இல்லாததால் பராமரிப்பாளர்களின் ஆயுட்காலத்தையே அது குறைப்பதாக அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

பார்கின்சன் நோய் (Parkinson's Disease) போன்ற நரம்பியல் குறைபாடுகளையுடைய நோயாளிகளைப் பராமரிப்போர் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து 2017 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தொகுப்பு நோயின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க பராமரிப்பாளரின் வாழ்க்கைத் தரம் (Quality of life) மிக மோசமாக வீழ்ச்சியடைவதைச் சுட்டிக்காட்டுகிறது.

2025 இல் டியூக் பல்கலைக்கழகத்தால் (Duke University) 12 நாடுகளைச் சேர்ந்த பராமரிப்பாளர்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் முறையான நீண்டகாலப் பராமரிப்பு அமைப்புகள் (Underdeveloped long-term care systems) இல்லாததே இந்தச் சுமை அதிகரிக்க முதன்மைக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில், இந்நிலைமை மேலும் சிக்கலானது. இலங்கை தற்போது மிக வேகமாக முதியோர் சனத்தொகை அதிகரிப்பு (Ageing population) நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாடாகும். பிறப்புக் வீதம் குறைவடைந்து வருவதும், மருத்துவ வசதிகளால் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதும் முதியவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட Census தரவுகள் இதனையே சுட்டிக்காட்டுகிறது .

துரதிர்ஷ்டவசமாக, மேற்கத்திய நாடுகளைப் போல இலங்கையில் முதியோர் இல்லங்களிலோ அல்லது அரசாங்கப் பராமரிப்பு மையங்களிலோ (Nursing homes / State care centers) சேர்த்துப் பராமரிக்கும் கலாச்சாரம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அது சமூக ரீதியாக ஒரு தவறான செயலாகப் பார்க்கப்படுவதால், பிள்ளைகளோ அல்லது வாழ்க்கைத் துணையோ வீட்டிலேயே வைத்துப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.

அத்துடன், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியானது மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு (Rising cost of medicines) மற்றும் மருத்துவச் செலவுகளை உயர்த்தியுள்ளது. இதனால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களில் உள்ள பராமரிப்பாளர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தையும் நடத்திக் கொண்டு, நோயாளிகளுக்கான செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இலங்கையில் உள்ள முறைசாரா பராமரிப்பாளர்களுக்கு எவ்வித உத்தியோகபூர்வ தொழிற்பயிற்சியோ (Formal training) அல்லது உளவியல் ஆலோசனைகளோ (Psychological counseling) இலகுவாகக் கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் சத்தமில்லாமல் தங்களுக்குள்ளேயே உருகிக் கொண்டிருக்கிறார்கள்.

Address

School Road
Batticaloa
30426

Alerts

Be the first to know and let us send you an email when Meeravodai, Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share