19/09/2026
அகில இலங்கை தமிழ் மொழித்தின விவாதப் போட்டியில் மட்/புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பல சிரமங்களின் மத்தியிலும் எமது ஆசிரியரான திருமதி. நித்தியகல்யாணி சிவராஜா அவர்களின் அயராத முயற்சி, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் மாணவர்களின் விடாமுயற்சி என்பன இவ்வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றன. இறைவனுக்கே நன்றி.