மட்டக்களப்பு தேசிய தமிழ்மருத்துவ மாணவர் சங்கம்

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • மட்டக்களப்பு தேசிய தமிழ்மருத்துவ மாணவர் சங்கம்

மட்டக்களப்பு தேசிய தமிழ்மருத்துவ மாணவர் சங்கம் Spreading of knowledge of Tamil-medicine to people living in our island.

சைவமும் 🧡 அசைவமும் ஏன் சைவம்❓ஏன் அசைவம்❓காலநிலை மனிதஉடலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள...
09/08/2021

சைவமும் 🧡 அசைவமும்

ஏன் சைவம்❓ஏன் அசைவம்❓
காலநிலை மனிதஉடலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே❗
ஓம் அதுதான் விளக்கம் தமிழ்மருத்துவம் என்பது வெறுமனே ஒரு தத்துவம் இல்லை அது ஆய்வுகளின் அடிப்படையில் விதிகளை வகுத்த தமிழர் அறிவியல்(Science of Tamils) ஆகும்.

இதன் படி கிழமைகள் 7 இற்கும் 7 #கோள்களின் பெயரே இடப்பட்டுள்ளது(உலகின் எல்லாமொழிகளும்.இதையே கடைப்பிடித்துள்ளன) ஏன் என்றால் இன்ன இன்ன நாட்கள் இந்த இந்த #கோள்களின் தன்மையைக்கொண்டவை அதாவது அந்த நாளின் காலநிலை அந்த கோளின் #காலநிலைக்கு ஒப்பாகும் என்பது.

இவ்வாறான காலநிலைகளிற்கு அமைய எமது உடலும் சில மாற்றங்களைக்காட்டும் ( #அண்டத்தில்_உள்ளதே_பிண்டத்தில்-சித்தர் தேரையர்)
இம்மாற்றங்கள் எமது #இயக்கநீர்(Hormone) #நொதியங்கள்(Enzymes) என்பவற்றின் சுரக்கும் அளவுகளை மாற்றும்.
முக்கியமானது #சமிபாட்டுத்தொகுதி இந்த தொகுதி பாதிக்கப்பட்டால் உடலின் எல்லா பாகமும் பாழாய்ப்போகும். சரியான சமிபாடு நடக்காவிடின் எமது உடலுக்கு தேவையான எந்த #ஊட்டச்சத்தும் கிடைக்காது போய்விடும்.

இனி விடயத்துக்கு வருவோம்
#செவ்வாய், #வெள்ளி கிழமைகளில் உடலில் சமிபாட்டுத்திறன் குறைவதுடன் உடல் #உண்ணம்(Internal body heat) கூடிக்காணப்படும் இன் நிலையில் #அசைவ_உணவை 🍖🍗🥩உள்ளெடுக்கும் போது அது சரியாக சமிபாடு அடையாது #ஆமை🐢(சமிபாடு அடையா மூலங்கள்) உருவாக்கி எமது #இரப்பையை குடல் என்பவற்றை தாக்கி #குடற்கொதி(Ulcer/Gastritis) ஐ ஏற்படுத்துகிறது மற்றும் #பவுத்திரம்(Fistula), #மூலநோய்(Hemorrhage) மலட்டுத்தன்மை, பெண்களிற்கு சூலக நீர்க்கட்டி( PCOS ,PCOD) மாதவிடாய் இன்மை(Amenorrhoea)
என்பவற்றையும் ஏற்படுத்தும்.
நீங்கள் நன்றாக கவனியுங்கள் தொடர்ந்து #அசைவஉணவுகளை 🍖🍗🥩மட்டும் உண்போருக்குத்தான் இன் நோய்கள் ஏற்படுகிறது.

எனவே கட்டாயம் இந்த நாட்களில் இலகுவில் சமிபாடு அடையக்குடியதும் உடலுக்கு #குளிர்ச்சி தரக்கூடியதுமான #சைவ_உணவுகளையே 🥦 🥬 உண்ண வேண்டும்.

இன்றை சமுகத்தில் குடற்கொதி, மூலநோய் ,பவுத்திரம், மாதவிடாய் சிக்கல் இல்லாதவர்கள் எத்தனைபேர்❗❓
எமது #அறிவியலாளர்கள் சொல்லிக்கொடுத்த நோயற்ற வாழ்க்கை முறையை #பட்டிக்காட்டு முறை என என்னி பகட்டான போலி வாழ்க்கையால் தானே இந்த நிலை.
#மாற்றம்_உங்களிடம்_இருந்து
எதிர்கால சந்ததியாயினும் நலமாய் வாழ வழிசெய்வோம்.
நன்றி
தகவல்-மட்டக்களப்பு தேசியதமிழ்மருத்துவர் சங்கம்.

மாமாங்கமும் மோர்ப்பந்தலும்------------------------------------------------------மாமாங்கேசுவரர் கோவில் விழாக்காலத்தில்  அ...
29/07/2021

மாமாங்கமும் மோர்ப்பந்தலும்
------------------------------------------------------
மாமாங்கேசுவரர் கோவில் விழாக்காலத்தில் அங்குகூடும் மக்கள் தாகம் தீர்க்க தொண்டர்களால் #மோர்ப்பந்தல் இடுவது வழமை.

இந்த ஆடிமாதத்தில் வெயிலின் கொடுமை உச்சம் என்பதால் மாமாங்க பெருவெளியில் கூடும் மக்கள் அவதியுறாவண்னம் இந்த தொண்டு காலம் காலமாக நடைபெற்றது.

ஆனால் தற்சமயம் சிலர் மோருக்குப்பதிலாக இரசாயன குடிபாணங்களை பந்தல் இடுகின்றனர் அவர்கள் தங்கள் இலகுக்காகவும் நாகரிக போலி மாயைக்காகவும் இவ்வாறு செய்கின்றனர் இதனால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டும் அல்ல எந்த #புண்ணியத்துக்காக பந்தல் இட்டார்களோ அது #பாவமாகவே அவர்களுக்கு முடிகிறது.

இவ்வாறான இரசாயனக்குடிபாணங்கள் நஞ்சுக்கு சமனானவை எனவே இந்த கொடிய பாவத்தை செய்யாது தவிர்ப்போம்.
#மோர்கொடுப்போம் #மோர்குடிப்போம்.

#மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
------------------------------------------------------------------------
#வயிற்றை குளிரச் செய்கிறது

நம் உண்ணும் உணவு பொருட்களில் சில சமயங்களில் காரம் அதிகமாக சேர்ந்து விடும். அப்படிப்பட்ட உணவினை நாம் உண்ணும் போது, வயிறு எரிச்சலில் அவதிப்பட்டு வருவோம். இதனை சரிசெய்ய ஒரு டம்ளர் மோர் குடித்தால் போதும்.

#செரிமானத்திற்கு

தயிரினை நாம் உண்ணும் மதிய உணவில் கடைசியாக சாப்பிடுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு பழக்கம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் தயிரில் செரிமானத்திற்கு தேவையான புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோர் ஆக்கும் போதும் அந்த நன்மைகள் கிடைக்கின்றன. மோருடன் சிறிது, இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் சீராக்கப்படும். வயிறு உப்புசம், அசௌகரியமும் சரியாகிவிடும். தேவையற்ற கழிவுகள் வெளியேற நாம் உண்ணும் உணவின் சக்தியை நம் உடலுக்கு முழுமையாக பெற்றுத்தர வைட்டமின் பி2 அவசியமாக தேவைப்படுகிறது. இந்த சத்தானது மோரில் அதிகம் இருக்கிறது. இது நம் வயிற்றில் உள்ள கல்லீரல் நன்றாக செயல்பட உதவி புரிகிறது. உடலில் தேவையற்ற நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி உள் உறுப்புகளை தூய்மைப்படுத்துகிறது. நம்மை அறியாமல் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஏதாவது, நம் உடலுக்கு சேராத விஷத்தன்மை இருந்தாலும் கூட அதனை மோர் நீக்கிவிடுகிறது. இது தவிர தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதன் மூலம் வைட்டமின் குறைபாடு சரி செய்யப்படுகிறது.

#முக_அழகுக்கு

உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு தனி பொலிவு ஏற்பட்டுவிடும். முகத்தை அழகுபடுத்தும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதனங்களை விட்டுவிட்டு மோர், தயிர் இவற்றை கொண்டு நம் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கும். சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.

#நீர்ச்சத்து அதிகரிக்கும்

மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால் நீர்ச்சத்து குறைபாடு நம் உடலில் ஏற்படாது. மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர் சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உடலை வறட்சி நிலையிலிருந்து காக்கும்.

#லாக்டோஸ் பிரச்சனை

உள்ளவர்களுக்கு சிலருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள முடியாது. பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடல் ஜீரணித்துக் கொள்ளாது. அப்படிப்பட்டவர்களை ‘லாக்டோஸ் இன்டோலரன்ஸ்’ என்று கூறுவார்கள். பால் சம்பந்தப்பட்ட பொருட்களை உண்ணாமல் உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் மோரினை குடிப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தை பெறலாம்.

#எடை குறைக்க

எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தான் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சராசரி அளவை குறைத்துக் கொண்டே வருவார்கள். இதனால் நமக்கு உடலில் உள்ள நீர்சத்து குறைந்து சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் நாம் மோரினை குடித்து பசியை ஆற்றிக் கொள்ளலாம். இது சுலபமாக ஜீரணமாகிவிடும். மோர் குடிப்பதால் எடையும் கூடாது. மோரில் புரதச்சத்து அதிக அளவு உள்ளது. புரதம் நம் உடலில் சேரும்போது, நம் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது.

#மலச்சிக்கலை நீக்கும்

நார்ச்சத்து உள்ள பொருட்களை நாம் அதிகம் சாப்பிடும் சமயத்தில் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து மோர் குடித்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

#உயர்குருதி அழுத்தம் குறைய

மோரில் பயோ ஆக்டிவ், புரோட்டின், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் இந்த பொருட்கள் நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வர நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்கிறது மருத்துவம்.

#அசிடிட்டி ,குடற்கொதி,நெஞ்செரிவு

நம்மில் பலபேர் அசிடிட்டி வந்துவிட்டால் அசிடிட்டி டானிக்கை தான் தேடுவோம். ஆனால் நம் வீட்டிலேயே உள்ள வைத்தியம் தான் மோர் அசிடிட்டியை குணப்படுத்த மோர் தவிர, சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. ஒரு டம்ளர் மோருடன் மிளகு, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து அரைத்து அந்த விருதினை சிறிது, மோரில் கலந்து குடித்தால் போதுமானது. அசிடிட்டி பிரச்சினை தீர்ந்துவிடும்.

#மூலநோய்,வயிற்றுப்போக்கு

மூல நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக மோர் பயன்படுத்தப்படுகிறது. எந்தவித மசாலாக்களும் சேர்க்கப்படாமல் மோரில் சிறிது உப்பு மட்டும் கலந்து குடித்து வர மூலநோய் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண வயிற்றுப் போக்கினை மோர் கொடுத்து சரி செய்யலாம். சளி பிடிக்கும் என்று நினைப்பவர்கள் லேசாக சூடுபடுத்தி சிறிது மஞ்சள் தூள் கலந்து கொடுத்தால் சளி பிரச்சனை வராது.

#மாதவிடாய் நாட்களில்

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலி, இரத்தப்போக்கிற்கு ஒரு டம்ளர் மோருடன் வெந்தயம் சேர்த்து குடித்தால் போதுமானது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் நீங்கும். இப்படி நம் வீட்டிலேயே சுலபமாக கிடைக்கும் மோருக்கு பயன்கள் ஏராளம். பல நல்ல குணங்களை உடைய மோரினை மறக்காமல் தினசரி நம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.
#தகவல்-மட்டக்களப்பு தேசிய தமிழ்மருத்துவர் சங்கம்.

கொரோனா, கோவிட்19 க்கு எதிரான தற்பாதுகாப்பு மற்றும் உடற்தேற்றகுடிநீர்(சித்தமருத்துவம்,சத்துருக்கொண்டான் மருந்துற்ப்பத்தி ...
07/12/2020

கொரோனா, கோவிட்19 க்கு எதிரான தற்பாதுகாப்பு மற்றும் உடற்தேற்றகுடிநீர்(சித்தமருத்துவம்,சத்துருக்கொண்டான் மருந்துற்ப்பத்தி நிலையம்,மட்டக்களப்பு) வழங்கிவைக்கவும் பட்டது
இடம்-பழுகாமம்,படுவான்கரை
காலம்-13:11:2020,காலை-09:00-12:30

  கொரோனா  #உடல்தேற்றிகுடிநீர் விழிப்புணர்வு திட்டம் கும்புறுமூலை களத்தில் அனைத்து வித சுகாதாரவிதிமுறைகளுக்கு அமைவாக இடம்...
14/11/2020

கொரோனா #உடல்தேற்றிகுடிநீர்
விழிப்புணர்வு திட்டம் கும்புறுமூலை களத்தில் அனைத்து வித சுகாதாரவிதிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது
12:05:2020

எமது சங்கத்தின் முதல் நிகழ்வு    -19 தொற்றுநோய்க்கு எதிரான செயற்பாடாக   #கிண்ணையடி களத்தில் இடம் பெற்றது29:04:2020
19/05/2020

எமது சங்கத்தின் முதல் நிகழ்வு
-19 தொற்றுநோய்க்கு எதிரான செயற்பாடாக #கிண்ணையடி களத்தில் இடம் பெற்றது
29:04:2020

Notice
17/05/2020

Notice

Address

மட்டக்களப்பு
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when மட்டக்களப்பு தேசிய தமிழ்மருத்துவ மாணவர் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category