Stories from Batticaloa

Stories from Batticaloa definitely this page helps to tell more about Batticaloa

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா????  - சிறுநீரகம்  நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமி...
05/07/2021

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா????

- சிறுநீரகம்
நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

- வயிறு
குளிரூட்டப்பட்ட உணவுகள்.

- நுரையீரல்
புகைப்பிடித்தல்.

- கல்லீரல்
கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள்,
மது அருந்துதல்.

- இதயம்
உப்பு நிறைந்த உணவு வகைகள்.

- கணையம்
அதிகப்படியான நொறுக்கு தீனி

- குடல்
கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.

- கண்கள்
தொலைகாட்சி பெட்டி, தொடுதிரை கைபேசி & கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது.

- பித்தப்பை
காலை உணவை தவிர்ப்பது.

நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.

ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.

மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும். எளிதாக கிடைக்காது.

அசல் போல் இயங்காது.
உண்ணும் உணவில் கவனம் தேவை.
வாழ்க்கை முறையில் கவனம் தேவை..!

அழகிய மாலைபொழுது 🧡💛  view
25/06/2021

அழகிய மாலைபொழுது 🧡💛
view

There are always flowers for those who want to see them💖   mobile clicks
28/04/2021

There are always flowers for those who want to see them💖 mobile clicks

Get one free filter coffee pack with levista instant coffee   for coffee lovers☕️☕️☕️ newyear special offer for our love...
27/03/2021

Get one free filter coffee pack with levista instant coffee for coffee lovers☕️☕️☕️ newyear special offer for our lovely customers🤩
sri lanka.

05/03/2021

💛 உணவுக்கு சுவை கூட்டவும், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகையாக மஞ்சள் இருக்கிறது, இதை மண்ணுக்கு அடியில் இருந்து எடுக்கும் புதையல் கிழங்கு என்று கூறலாம்🤣🥰 #பச்சை மஞ்சள் கிழங்கு 💛💛

இன்று நாம் சுண்டங்காய் பற்றிய சில தகவல்களை தான் பார்க்க போகின்றோம். 💚காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண...
04/03/2021

இன்று நாம் சுண்டங்காய் பற்றிய சில தகவல்களை தான் பார்க்க போகின்றோம். 💚
காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது, பார்வைக்கு மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்ட வியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
#சுண்டங்காய்



P.c : மௌதிக்கா சண்முகநாதன்

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stories from Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share