கொக்கட்டிச்சோலை இ.கி.மி மகா வித்தியாலயம் - மட்டக்களப்பு மேற்கு

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • கொக்கட்டிச்சோலை இ.கி.மி மகா வித்தியாலயம் - மட்டக்களப்பு மேற்கு

கொக்கட்டிச்சோலை இ.கி.மி மகா வித்தியாலயம் - மட்டக்களப்பு மேற்கு school

சிறுவர் தின நிகழ்வு மற்றும் எமது பாடசாலையின் 87 ஆம் ஆண்டு நிறைவு விழா என்பன எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று விமரிச...
01/10/2024

சிறுவர் தின நிகழ்வு மற்றும் எமது பாடசாலையின் 87 ஆம் ஆண்டு நிறைவு விழா என்பன எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று விமரிசையாக நடைபெற்றன. 01.10.2024

இன்று நடைபெற்ற மாகாண மட்ட சிறுவர் மெய் வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் வலயம் சார்பாக கலந்து கொண்ட எமது பாடசாலையின் தரம்...
01/10/2024

இன்று நடைபெற்ற மாகாண மட்ட சிறுவர் மெய் வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் வலயம் சார்பாக கலந்து கொண்ட எமது பாடசாலையின் தரம் - 03 பெண் மாணவர்கள் 3ம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இன்று 2024/09/27 ஆம் திகதி தாண்டியடி மைதானத்தில் நடைபெற்ற இவ் வருடத்திற்கான மட்டக்களப்பு மேற்கு வலய மட்ட பாடசாலைகளுக்கு ...
27/09/2024

இன்று 2024/09/27 ஆம் திகதி தாண்டியடி மைதானத்தில் நடைபெற்ற இவ் வருடத்திற்கான மட்டக்களப்பு மேற்கு வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட எமது பாடசாலையின் தரம் - 03, 04, 05 ஆகிய வகுப்புகளின் ஆண், பெண் மாணவர்கள் நடைபெற்ற ஆறு விளையாட்டுகளில் ஐந்து போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்று வெற்றிபெற்று சாதனை படைத்ததோடு மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

எமது பாடசாலையில் நீண்ட காலமாக இருந்து வந்த பெண் சாரணியத்தின் குறைபாட்டினை நீக்கும் பொருட்டு கடந்த 2024/09/03 ஆம் திகதி எ...
08/09/2024

எமது பாடசாலையில் நீண்ட காலமாக இருந்து வந்த பெண் சாரணியத்தின் குறைபாட்டினை நீக்கும் பொருட்டு கடந்த 2024/09/03 ஆம் திகதி எமது பாடசாலை பெண் சாரணிய மாணவிகளுக்கு மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியில் சின்னம் சூட்டப்பட்டது 14 பேர் இதற்கான தகைமையினைப் பெற்றுக் கொண்டனர்.

கடந்த 2024/09/03 ஆம் திகதி நடைபெற்ற இவ் வருடத்திற்கான மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் மெய்வல்லு...
08/09/2024

கடந்த 2024/09/03 ஆம் திகதி நடைபெற்ற இவ் வருடத்திற்கான மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட எமது பாடசாலையின் தரம் - 03, 04, 05 ஆகிய வகுப்புகளின் ஆண், பெண் மாணவர்கள் நடைபெற்ற ஆறு விளையாட்டுகளில் மூன்று முதலாம் இடங்களையும், இரண்டு இரண்டாம் இடங்களையும் என ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்ததோடு வலய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் நிறுவனத்தினால் இன்று கற்றல் வள உதவி தேவையுள்ள 67 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வ...
01/08/2024

மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் நிறுவனத்தினால் இன்று கற்றல் வள உதவி தேவையுள்ள 67 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 01.08.2024

கொக்கட்டிச்சோலை மக்கள்  நல இளைஞர் மன்றத்தின் அனுசரணையுடன் இன்று 01.08.2024 அ.கருணாகரன்மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அ...
01/08/2024

கொக்கட்டிச்சோலை மக்கள் நல இளைஞர் மன்றத்தின் அனுசரணையுடன் இன்று 01.08.2024 அ.கருணாகரன்
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்கள் ஊடாக ஆசிரியர்களுக்கான மென்திறன் விருத்திச் செயலமர்வு இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை இ.கி.மி மகா வித்தியாலயம் - மட்டக்களப்பு மேற்கு

கொக்கட்டிச்சோலை மக்கள்  நல இளைஞர் மன்றம் மற்றும் மட்/மமே/கொக்/இராமகிருஷ்ணமிஷன் மகா வித்தியாலயம் இணைந்து நடாத்தும் இரவு ந...
01/08/2024

கொக்கட்டிச்சோலை மக்கள் நல இளைஞர் மன்றம் மற்றும் மட்/மமே/கொக்/இராமகிருஷ்ணமிஷன் மகா வித்தியாலயம் இணைந்து நடாத்தும் இரவு நேர கற்கை நெறியை வலுப்படுத்தும் முகமாக அ.கருணாகரன்
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்கள் ஊடாக மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் முகமாக வழிகாட்டல் செயலமர்வு இடம்பெற்றது.

இந்த கல்வி வழிகாட்டல் செயலமர்வு மாணவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாகவும் மீண்டும் தேவை என்ற கருத்தை மாணவர்கள் முன்வைத்திருந்தமை குறிப்பித்தக்கது.
31.07.2024

இந்த வழிகாட்டல் கருத்தரங்கை/செயலமர்வை மாணவர்களின் எதிர்காலத்திற்காக தன்னலமற்று நடாத்திய மரியாதைக்குரிய அ.கருணாகரன்
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு அவர்களுக்கும் அனுமதியளித்த பாடசாலை அதிபர், மக்கள் நல இளைஞர் மன்ற கல்வித்துறை நிருவாகத்திற்கும், மன்ற தலைமை நிருவாகத்திற்கும், ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கொக்கட்டிச்சோலை இ.கி.மி மகா வித்தியாலயம் - மட்டக்களப்பு மேற்கு

கெளரவ இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்களால், பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இன்றைய தினம் (30.07.20...
30/07/2024

கெளரவ இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்களால், பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இன்றைய தினம் (30.07.2024)எமது பாடசாலைக்கு ஒரு தொகை இறப்பர் கதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இன்று எமது பாடசாலை மாணவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் புலமைப்பரிசில...
16/07/2024

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இன்று எமது பாடசாலை மாணவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எமது வித்தியாலயத்தில் 09.04.2024 அன்று வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.ஒலிம...
10/04/2024

எமது வித்தியாலயத்தில் 09.04.2024 அன்று வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் அஞ்சல் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், அணிநடை மரியாதை, உடற்பயிற்சிக் கண்காட்சி போன்றன நடைபெற்றன.

இதன் போது விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் மேலும் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இல்லச் சோடனை, இல்லங்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற இல்லங்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது வித்தியாலய அதிபர் திரு.சு.ரவிஷங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய தினம் எமது பாடசாலையில் இடம்பெற்ற, மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும், சத்தியப்பிரமாணமும்.
03/04/2024

இன்றைய தினம் எமது பாடசாலையில் இடம்பெற்ற, மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும், சத்தியப்பிரமாணமும்.

Address

KOKKADDICHOLAI
Batticaloa
30160

Telephone

+94652056921

Website

Alerts

Be the first to know and let us send you an email when கொக்கட்டிச்சோலை இ.கி.மி மகா வித்தியாலயம் - மட்டக்களப்பு மேற்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to கொக்கட்டிச்சோலை இ.கி.மி மகா வித்தியாலயம் - மட்டக்களப்பு மேற்கு:

Shortcuts

Share

Category